விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 8
Appearance
மார்ச் 8: அனைத்துலக பெண்கள் நாள்
- 1618 – யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
- 1702 – ஆன் (படம்) இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார்.
- 1782 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய 96 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
- 1949 – வியெட்நாமிற்கு பிரான்சிடம் இருந்து அதிக சுயாட்சி வழங்குவதற்கும், வியட் மின்-தலைமையிலான வியட்நாம் சனநாயகக் குடியரசிற்கு எதிராக வியட்நாம் நாட்டை உருவாக்குவதற்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் வின்சென்ட் ஓரியோலிற்கும், முன்னாள் வியட்நாம் பேரரசர் பாவோ டாயிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.
- 1979 – பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது.
- 2014 – 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 மாயமாக மறைந்தது.
ம. லெ. தங்கப்பா (பி. 1934) · ஜே. பி. சந்திரபாபு (இ. 1974)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 7 – மார்ச்சு 9 – மார்ச்சு 10