ம. லெ. தங்கப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ம. லெ. தங்கப்பா (8 மார்ச்சு, 1934 - 31 மே, 2018) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவர். இவர் ஒரு பன்மொழி அறிஞர்; இவர் கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு போன்றவற்றை எழுதும் பன்முக‌ ஆற்றல் கொண்டவர். இவர் இரு முறை சாகித்திய அகதமி விருதைப் பெற்றுள்ளார்.[1] இவர் படைப்புகளில் தமிழ் நலத்துக்கு உழைத்தல், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வு நலம் பற்றிய விழிப்புணர்வைப் பெருக்குதல், மாந்தரிடையே நல்லுறவு பேணுதல் போன்ற சிந்தனைகள் மிகுந்து இருக்கும்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ம. லெ. தங்கப்பா மார்ச்சு 8, 1934இல் திருநெல்வேலி மாவட்டம், குறும்பலாப்பேரியில் புலவர் ஆ. மதனபாண்டியன், ம. இரத்தினமணி இணையருக்குப் பிறந்தார். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில், தாகூர், பாரதிதாசனின் படைப்புகளால் இவர் மிகவும் கவரப்பட்டார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, புதுவையிலேயே குடியேறி, அங்கு பல்வேறு கல்லூரிகளில் 25 ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[2] 2018 மே 31 அன்று உடல்நலக்குறைவால் தன் 84ஆம் வயதில் புதுச்சேரியில் காலமானார். அவரது உடல் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டது.[3]

படைப்புகள்[தொகு]

பாடல்கள்[தொகு]

 • பாடுகின்றேன்
 • தேடுகின்றேன்
 • ஆந்தைப்பாட்டு
 • அடிச்சுவடுகள்
 • வேப்பங் கனிகள்
 • கள்ளும் மொந்தையும்
 • இயற்கையாற்றுப்படை
 • மயக்குறு மக்கள்
 • அகமும் புறமும்
 • பின்னிருந்து ஒரு குரல்
 • பனிப்பாறை நுனிகள்
 • புயற்காற்று
 • பாட்டெனும் வாள் எடுப்பாய்
 • உரிமைக்குரல்

குழந்தைப் பாடல்கள்[தொகு]

 • எங்கள் வீட்டுச் சேய்கள்
 • மழலைப் பூக்கள்
 • இயற்கை விருந்து
 • சோலைக் கொல்லைப் பொம்மை

கட்டுரை நூல்கள்[தொகு]

 • பாரதிதாசன் ஓர் உலகப் பாவலர்
 • நுண்மையை நோக்கி
 • ஏது வாழ்க்கை?
 • திருக்குறளும் வாழ்வியலும்
 • வாழ்க்கை அறிவியல்
 • பாட்டு வாழ்க்கை
 • மொழி மானம்
 • கொடுத்தலே வாழ்க்கை

தமிழாக்கம்[தொகு]

 • மலை நாட்டு மலர்கள்
 • மண்ணின் கனிகள் (அன்பின் கனிகள்)
 • கனவுகள்

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு[தொகு]

 • love stands alone (பெங்குயின் வெளியீடு) சங்க கவிதை மொழிபெயர்ப்பு
 • Red lillies frightened birds (முத்தொள்ளாயிரம் கவிதைகள் மொழிபெயர்ப்பு)
 • Songs of Grace ( திருவருட்பா மொழிபெயர்ப்பு)
 • poems of Bharathidasan (தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிதாசன் கவிதைகள்)

விருதுகள்[தொகு]

 • இவர் எழுதிய சோலைக் கொல்லைப் பொம்மை நூலுக்காக, 2010 ஆம் ஆண்டு குழந்தைகள் இலக்கியத்திற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றோர்.
 • love stands alone (பெங்குயின் வெளியீடு) சங்க கவிதை மொழிபெயர்ப்பு நூலுக்காக 2012இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.[4]
 • தமிழக அரசின் பாரதிதாசன் விருது.
 • சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் மொழிபெயர்ப்பு விருது.
 • சிற்பி இலக்கிய விருது.

மேற்கோள்கள்[தொகு]

 1. பழ.அதியமான் (3 சூன் 2018). "ம.லெ.தங்கப்பா: உள்ளத்தின் உண்மை ஒளி". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/general/literature/article24071550.ece. பார்த்த நாள்: 5 சூன் 2018. 
 2. ராஜலட்சுமி சிவலிங்கம் (8 மே 2017). "ம.லெ.தங்கப்பா 10". அறிமுகம் (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-10/article9575168.ece. பார்த்த நாள்: 5 சூன் 2018. 
 3. "இரு முறை சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழறிஞர் ம.லெ.தங்கப்பா காலமானார்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உடல் தானம்". செய்தி (தி இந்து தமிழ்). 1 சூன் 2018. http://tamil.thehindu.com/tamilnadu/article24053447.ece. பார்த்த நாள்: 5 சூன் 2018. 
 4. ஷங்கர் (5 சூன் 2018). "அஞ்சலி: தமிழ்க் கவிதையை உலகறியச் செய்தவர் - ம. இலெ. தங்கப்பா (1934-2018)". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/general/education/article24080110.ece. பார்த்த நாள்: 5 சூன் 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._லெ._தங்கப்பா&oldid=3835159" இருந்து மீள்விக்கப்பட்டது