அயர்லாந்து இராச்சியம்
அயர்லாந்து இராச்சியம் Ríocht na hÉireann | |||||
| |||||
தலைநகரம் | டப்ளின் | ||||
மொழி(கள்) | ஐரிய மொழி, ஆங்கிலம் | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
அரசர்3 | |||||
- | 1542-1547 | ஹென்றி VIII | |||
- | 1760-1801 | ஜார்ஜ் III | |||
தலைமைச் செயலாளர் | |||||
- | 1660 | மாத்யூ லாக் | |||
- | 1798-1801 | வைகவுன்ட் காசில்ரீ | |||
சட்டசபை | அயர்லாந்து நாடாளுமன்றம் | ||||
- | Upper house | ஐரிய பிரபுக்கள் அவை | |||
- | Lower house | ஐரிய மக்களவை | |||
வரலாறு | |||||
- | நாடாளுமன்ற சட்டம் | 1541 | |||
- | ஒன்றிணைப்புச் சட்டம் | சனவரி 1 1801 |
அயர்லாந்து இராச்சியம் (Kingdom of Ireland, ஐரிஷ்: [Ríoghacht Éireann] error: {{lang}}: text has italic markup (உதவி) 1542க்கும் 1800க்கும் இடைபட்ட காலத்தில் அயர்லாந்தில் நிறுவப்பட்ட இராச்சியத்தைக் குறிக்கும். இது ஹென்றி VIIIயால் 1542இல் நாடாளுமன்ற சட்டமொன்றினால் (அயர்லாந்து முடியாட்சி சட்டம் 1542) உருவாக்கப்பட்ட இராச்சியமாகும். ஹென்றி VIII அயர்லாந்தின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். முன்னதாக 1171 முதல் இப்பகுதி இங்கிலாந்தினால் குடிமைபடுத்தப்பட்டு அயர்லாந்து பிரபுவினால் ஆளப்பட்டு வந்தது. ஹென்றியின் முடியாட்சியை ஐரோப்பாவின் சில சீர்திருத்த கிறித்தவ நாடுகள் அங்கீகரித்தபோதும் கத்தோலிக்க முடியாட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் ஹென்றியின் மகள் மேரியை அயர்லாந்தின் அரசியாக 1555இல் திருத்தந்தை ஏற்றுக் கொண்டார். அயர்லாந்தின் இத்தனி இராச்சியம் 1800இல் பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன் இணைந்ததுடன் முடிவுற்றது.