வால்டர்
வால்டர் | |
---|---|
Theatrical release poster | |
இயக்கம் | யு. அன்பரசன் |
தயாரிப்பு | சுருதி திலக் |
கதை | யு. அன்பரசன் |
கதைசொல்லி | சத்யராஜ் |
இசை | தர்ம்பிரகாஷ் |
நடிப்பு | சிபிராஜ் நட்ராஜ் சமுத்திரக்கனி ஷிரின் காஞ்ச்வாலா |
ஒளிப்பதிவு | ராசமதி |
படத்தொகுப்பு | இளையராஜா |
கலையகம் | 11:11 புரொடக்சன்ஸ் (பி) லிமிடட் |
வெளியீடு | மார்ச்சு 13, 2020 |
ஓட்டம் | 133 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வால்டர் (Walter) என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் குற்றவியல் அதிரடி திரைப்படம் ஆகும். யு. அன்பரசன் எழுதி இயக்கிய இப்படத்தை சுருதி திலக் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிபி சத்யராஜ், நடராஜ், சமுத்திரக்கனி, ரித்விகா, சனம் ஷெட்டி, முனிஷ்காந்த், ஷிரின் காஞ்ச்வாலா ஆகியோர் நடித்தனர் . படத்தின் முதன்மை படப்பிடிப்ப 2019 சூனில் தொடங்கியது,[1] படம் 13 மார்ச் 2020 அன்று வெளியிடப்பட்டது.[2]
நடிகர்கள்
[தொகு]- சிபி சத்யராஜ் ஏ.எஸ்.பி. வால்டராக
- நட்ராஜ் அர்ஜுண் சம்பத்தாக
- சமுத்திரக்கனி பாலாவாக
- ஷிரின் காஞ்ச்வாலா ராஜியாக
- சார்லி பண்ணீர்செல்வமாக
- பவா செல்லத்துரை ஈஸ்வரமூர்த்தியாக
- முனீஷ்காந்த் ராமதாஸ் உடகவியலாளராக
- ரித்விகா பத்மாவதியாக
- அனில் முரளி காவல்துறை கண்காணிப்பாளராக
- சனம் ஷெட்டி நர்மதா பிரமோதாக
- அபிசேக் வினோத் வெங்கட்டாக
- டி.எஸ்.ஆர் மருத்துவராக
- சரவண சக்தி
- யாமினி சுந்தர்
- பிக்பாஸ் அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளர் கண்ணுகுட்டியாக
தயாரிப்பு
[தொகு]2018 செப்டம்பரில் யு. அன்பரசன் வால்டர் என்ற படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமாகிறார் என்று அறிவிக்கபட்டது. இப்படத்தில் விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி செராப் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் தயாரிக்க ராதன் இசையமைக்கவுள்ளார் எனப்பட்டது. இருப்பினும் இந்த திரைப்பட திட்டம் பின்னர் நிறுத்தப்பட்டது.[3]
புதிய தயாரிப்பாளர்களுடன் இத்திரைப்படம் 2019 இல் மீண்டும் தொடங்கப்பட்டது. இப்போது படத்தில் சிபி சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார், சமுத்திரக்கனி, கௌதம் மேனன் ஆகியோரும் படத்தில் இடம்பெறுவார்கள் எனப்பட்டது. பின்னர் மேனன் இதிலிருந்து பின்வாங்கினார், அவருக்கு பதிலாக நடராஜன் சுப்பிரமணியம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு 2019 சூன் முதல் கும்பகோணம், தஞ்சாவூரை சுற்றிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. படத்தில் சிபி சத்தியராஜ் ஒரு காவல் துறை அதிகாரியாக நடித்தார்.[4] இந்திய ஒளிப்பதிவாளர் நட்டி, சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிப்பது ரகசியமாக வைக்கபட்டிருந்தது. ரசமதி, இளையராஜா, தர்ம பிரகாஷ், விக்கி ஆகியோர் முறையே ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசையமைப்பு, சண்டை பயிற்சி போன்றவற்றிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
வெளியீடு
[தொகு]இப்படத்திற்கான செயற்கைக்கோள் உரிமைகள் சன் தொலைக்காட்சிக்கும், எண்ணியல் உரிமைகள் சன் நெக்ஸ்ட்டுக்கும் வழங்கப்பட்டன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "yogi's next named Walter, to feature him as a cop". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-15.
- ↑ 2.0 2.1 "Walter". Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 March 2020.
- ↑ "Vikram Prabhu's next titled 'Walter'". The Times of India. 14 September 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vikram-prabhus-next-titled-walter/articleshow/65806260.cms. பார்த்த நாள்: 1 July 2020.
- ↑ "Walter". Film beat.