அனில் முரளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனில் முரளி ஒரு திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார்[1] .தனது கலை பயணத்தில் வில்லன் நடிகராக நடித்து பின்பு குணச்சித்திர நடிகர் ஆனார். 1993-ம் ஆண்டு வினயன் இயக்கத்தில் வெளியான 'கன்னியாகுமரியில் ஒரு கவிதா' என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அனில் முரளி. அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார்.சுமார் 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள அனில் முரளிக்குக் கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.ஆனால் தற்போது உடல்நிலை மோசமானதால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 2020 ஜூலை 30 அன்று உயிரிழந்தார்[2][3]

அனில் முரளி நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anil Murali makes his K-Town debut - Times of India".
  2. "Archived copy". Archived from the original on 2 March 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-03-05.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. mangalam. "Mangalam - Varika 17-Feb-2014". Archived from the original on 2016-11-11. பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_முரளி&oldid=3542206" இலிருந்து மீள்விக்கப்பட்டது