பவா செல்லத்துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பவா செல்லத்துரை

பவா செல்லத்துரை என்பவர் ஒரு தமிழ் சிறுகதை எழுத்தாளரும், பதிப்பாசிரியரும் ஆவார்.[1] இவர் மொழிபெயர்ப்பாளர், நடிகர், கதைசொல்லி என பன்முகம் கொண்டவர்.

இவர் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்துள்ளார். வம்சி புத்தக நிலையம் மற்றும் பதிப்பகம் நடத்துகிறார்.

குடும்பம்[தொகு]

இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். திருவண்ணாமலை சாரோன் போர்டிங் பள்ளியில் கலை இலக்கிய மாநாடு நடைபெற்றது. அங்கு சைலஜா என்ற பெண்ணை சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.‌ [2] சைலஜா ஒரு மொழிபெயர்ப்பாளராக உள்ளார்.

படைப்புகள்[தொகு]

நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை[தொகு]

ஜனவரி 2008 இல் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை என்ற சிறுகதை தொகுதி வெளிவந்துள்ளது. இதனை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. [3]

நீர் மற்றும் கோழி[தொகு]

நீர் மற்றும் கோழி என்பது வம்சி பதிப்பகம் வெளியிட்ட நூலாகும். இதில் பவா செல்லத்துரையின் கரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

19 டி. எம். சாரோனிலிருந்து[தொகு]

எல்லா நாளும் கார்த்திகை[தொகு]

பங்குக்கறியும் பின்னிரவுகளும்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

மலையாள எழுத்தாளர் பால் சாக்ரியாவின் கதை தேன் என்ற பெயரில் சிறு நூலாக வெளியிடப்பட்டது. இதனை பவா செல்லத்துரை மொழிபெயர்த்துள்ளார். வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நடிகராக[தொகு]

ராஜூ முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்பட்டத்தில் நடித்துள்ளார். [4] இத்திரைப்படம் 2016 இல் வெளிவந்தது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "ஈரோடு நூல்வெளியீடு பங்கேற்பாளர்கள்". www.jeyamohan.in.
  2. http://andhimazhai.com/news/view/does-not-arise-.html
  3. பிரபஞ்சன். "பச்சைக்கொடி சுற்றிய பவா செல்லதுரை". keetru.com.
  4. http://www.tamilcinetalk.com/tag/நடிகர்-பவா-செல்லத்துரை/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவா_செல்லத்துரை&oldid=2690362" இருந்து மீள்விக்கப்பட்டது