உள்ளடக்கத்துக்குச் செல்

லிங்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிங்டின்
பணிபுரிவோர்20
பயனர்கள்300 million[1]
வெளியீடுமே 2003
மவுண்டன் வியூ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தற்போதைய நிலைActive
உரலிwww.linkedin.com


லிங்டின் என்பது வணிக ரீதியான சமூக வலைப்பின்னல் தளமாகும். இத்தளத்தின் மூலம் வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் நபர்கள், தொழிலதிபர்கள், சிறுதொழில் உற்பத்தியாளர்கள், பல்வேறு வகையான சேவையை அளிப்பவர்கள் என பதவிகளில் இருப்போர் அனைவரும் தத்தம் தொழில், வேலை, சேவை ரீதியாக இணைக்கப்பட்டு தத்தம் விபரங்களை பகிர்வதற்கு லிங்க்டுஇன் உதவுகிறது. இத்தளத்தின் மூலம் வணிகத்தொடர்புகள், தகவல் பரிமாற்றங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் சிறப்பு அறிமுகங்கள், புதிய தொழில் வாய்ப்புகள் போன்றவை எளிதாக கையாளப்படுகின்றன.

லிங்க்டுஇன் பதிவு செய்யப்பட்ட தமது உறுப்பினர்கள் தங்களது விபரங்களையும் சேமித்து வைத்துக் கொண்டு தமக்கு தெரிந்தவர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது. உறுப்பினரின் பட்டியலில் உள்ள ஒவ்வொரு நபர்களும் இணைப்பிகள்(Connections) என்றழைக்கப்படுகிறார்கள். இணைப்பியாக லிங்க்டுஇன்னில் பதிவு செய்யப்பட்ட எவரையும் வரவேற்கலாம்.

இத்தளம் ஆங்கிலம், பிரான்சிய மொழி, இடாய்ச்சு மொழி, இத்தாலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானியம், டச்சு மொழி, சுவீடிய மொழி, டேனிய மொழி, உருமானிய மொழி, உருசிய மொழி, துருக்கிய மொழி, ஜப்பானிய மொழி, செக் மொழி, போலிய மொழி, கொரிய மொழி, இந்தோனேசிய மொழி, மலாயு மொழி, மற்றும் தகலாகு மொழி [2][3] உட்பட 20 மொழிகளில் உள்ளது. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Next Three Billion". LinkedIn.com. பார்க்கப்பட்ட நாள் மே 28, 2014.
  2. Posner, Nico (June 21, 2011). "Look who's talking Russian, Romanian and Turkish now!". LinkedIn Blog. லிங்டின். Archived from the original on ஜூன் 25, 2011. பார்க்கப்பட்ட நாள் மே 28, 2014. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  3. "LinkedIn launches in Japan". TranslateMedia. October 20, 2011. Archived from the original on அக்டோபர் 26, 2011. பார்க்கப்பட்ட நாள் மே 28, 2014.
  4. Hempel, Jessi (July 1, 2013). "LinkedIn: How It's Changing Business". Fortune: pp. 69–74. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிங்டின்&oldid=3575849" இலிருந்து மீள்விக்கப்பட்டது