ரோத்தாஸ் கோட்டை, பீகார்

ஆள்கூறுகள்: 24°37′N 83°55′E / 24.617°N 83.917°E / 24.617; 83.917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோத்தாஸ் கோட்டை
பகுதி: பீகார்
ரோத்தாஸ் பீகார், இந்தியா
ரோத்தாஸ் கோட்டையின் வாயில்
ரோத்தாஸ் கோட்டை is located in இந்தியா
ரோத்தாஸ் கோட்டை
ரோத்தாஸ் கோட்டை
ரோத்தாஸ் கோட்டை is located in பீகார்
ரோத்தாஸ் கோட்டை
ரோத்தாஸ் கோட்டை
ஆள்கூறுகள் 24°37′24″N 83°54′56″E / 24.6233337°N 83.9155484°E / 24.6233337; 83.9155484
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது பீகார் அரசு
நிலைமை சீரமைக்கப்பட்டுள்ளது
இட வரலாறு
கட்டியவர்
கட்டிடப்
பொருள்
கருங்கல் பாறை மற்றும் சுண்ணாம்புக்கல்

ரோத்தாஸ்கர் அல்லது ரோத்தாஸ் கோட்டை இந்தியாவின் பீகாரில் உள்ள ரோத்தாஸ் என்ற சிறிய நகரத்தில் சோன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

கோட்டை 24° 57′ வடக்கிலும், 84° 2′ கிழக்கிழும் சன் ஆற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. சசாராம் நகரத்திலிருந்து கோட்டையை அடைய இரண்டு மணி நேரம் ஆகும். தெஹ்ரி நகரத்திலிருந்தும் இதை எளிதாக அடையலாம். இது மிகவும் நல்ல சாலை வசதியைக் கொண்டுள்ளது. அக்பர்பூர் வழியாகவும் கோட்டையை எளிதில் அடையலாம். இந்தக் கோட்டை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பழமையான 2000 சுண்ணாம்புப் படிகள் யானைகளுக்கானதாக இருக்கலாம். கோட்டைக்கு நன்கு பாதுகாக்கப்பட்ட நுழைவாயில்களுடன் அமைந்துள்ளாது. பல வாயில்களில் முதலாவதாக, ஒரு பாழடைந்த வாயில் அங்கு காணப்படுகிறது. கோட்டையின் இடிபாடுகளைக் காண இங்கிருந்து மற்றொரு மைல் அல்லது அதற்கு மேல் நடக்க வேண்டும்.

வரலாறு[தொகு]

ரோத்தாஸின் ஆரம்பகால வரலாறு தெளிவற்றது. உள்ளூர் கதைகளின் படி, ரோத்தாஸ் மலை ஒரு புகழ்பெற்ற மன்னன் அரிச்சந்திரனின் மகனான ரோகிதாஸ்வாவின் நினைவாக பெயரிடப்பட்டது. இருப்பினும், ரோகிதாஸ்வா பற்றிய புனைவுகள் இந்தப் பகுதியைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மேலும் 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இடிபாடுகள் எதுவும் அந்த இடத்தில் காணப்படவில்லை. [1]

வங்காள மன்னன் சசாங்கனின் ரோத்தாஸ் முத்திரை.

ரோத்தாஸில் உள்ள மிகப் பழமையான சிறிய கல்வெட்டு ஒன்றில் " மகாசமந்தா சசாங்க-தாவா" எனக் குறுப்பிடப்பட்டுள்ளது. இதை வரலாற்றாசிரியர் ஜான் பெய்த்புல் ப்ளீட் கௌட மன்னன் சசாங்கனுடன் அடையாளம் காட்டினார். வங்காளம் மற்றும் ஒடிசா பகுதிகளில் முறையே ஆட்சி செய்த சந்திர வம்சத்தினர் மற்றும் துங்க வம்சத்தினர், ரோகிதகிரி என்ற இடத்தில் தங்கள் தோற்றத்தை கூறிவந்தனர். இது நவீன ரோத்தாஸாக இருக்கலாம். [2] இருப்பினும், இந்த கோட்பாட்டை உறுதிப்படுத்த ரோத்தாஸில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. [3]

கி.பி.1223 தேதியிட்ட (1279 விக்ரம் நாட்காட்டி ) கல்வெட்டு, ரோத்தாஸ்கர் சிறீ பிரதாபன் என்பவர் வசம் இருந்ததாகக் கூறுகிறது. [4] அவர் ஒரு "யவன" படையை தோற்கடித்ததாக கல்வெட்டு கூறுகிறது; இங்கு "யவன" என்பது ஒரு முஸ்லிம் தளபதியைக் குறிக்கும். [5] எஃப். கீல்ஹார்ன் சிறீ பிரதாபனை கயரவல வம்சத்தைச் சேர்ந்தவராக அடையாளம் காட்டினார், அவருடைய கல்வெட்டுகள் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள மற்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வம்சத்தின் உறுப்பினர்கள் ஜபிலா பிரதேசத்தை நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்தனர். ஒருவேளை ககதவாலர்களாக இருக்கலாம். ககதவாலர்கள் அநேகமாக நவீன கர்வார்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கலாம். [6] [3]

கோட்டியில் அமைந்துள்ள தேவி கோவில்,

கிபி 1539 வரை, கோட்டை இந்து அரசர்களின் கைகளில் இருதது. பின்னர், சேர் சா சூரியின் கைகளுக்குச் சென்றது. சேர் ஷா சூரி முகலாயப் பேரரசர் உமாயூனுடன் சுனாரில் நடந்த சண்டையில் கோட்டையை இழந்தார். சூரியின் ஆட்சியின் போது 10000 ஆயுதமேந்திய வீரர்கள் கோட்டையை பாதுகாத்தனர். மேலும், இது ஒரு நிரந்தர பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது.

சேர் சா சூரியின் தளபதியான ஐபத் கான் கி.பி 1543 இல் கோட்டையின் மேற்கில் அமைந்துள்ள ஜாமி மசூதியைக் கட்டினார். இது வெள்ளை மணற்கற்களால் ஆனது. மேலும், ஒரு மினாரட்டுடன் ஒவ்வொன்றும் மூன்று குவிமாடங்களைக் கொண்டுள்ளது. சேர் சாவிடம் கண்காணிப்பாளராக பணியாற்றிய தரோகா அல்லது ஹப்ஷ் கானின் கல்லறையும் இங்கு உள்ளது.

கிபி 1558 இல், அக்பரின் தளபதியும் ஆளுநருமான ராஜா மான் சிங் ரோத்தாஸை ஆட்சி செய்தார். வங்காளம் மற்றும் பீகாரின் ஆளுநராக, ரோத்தாஸை அணுக முடியாத தன்மை மற்றும் பிற இயற்கை பாதுகாப்புகளைக் கருத்தில் கொண்டு தனது தலைமையகமாக மாற்றினார். அவர் தனக்கென 'மகால் செராய்' என்ற அரண்மனையை கட்டினார், கோட்டையின் மற்ற பகுதிகளை புதுப்பித்து, குளங்களைத் தூய்மைப்படுத்தினார். பாரசீக பாணியில் தோட்டங்களை உருவாக்கினார். இந்த அரண்மனை வடக்கு-தெற்கு அச்சில் கட்டப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி அதன் நுழைவாயிலுடன் முன்னால் வீரர்களுக்கான முகாம்கள் உள்ளன. கோட்டை இன்றும் நல்ல நிலையில் உள்ளது.

மகால் செராய்

கோட்டையின் எச்சங்கள் 42 சதுர கிமீ பரப்பளவில் பரவியுள்ளதால் இது உலகின் மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது 83 வாயில்கள் மற்றும் பல மறைவான நிலத்தடி இடங்கள் மற்றும் சுரங்கங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. [7]

பிரதான வாயில் 'ஹாதியா போல்' அல்லது 'யானை வாயில்' என்று அழைக்கப்படுகிறது. வாயிலை அலங்கரித்த இரண்டு யானைகளின் பெயரால் பெயரிடப்பட்டது. இங்கிருக்கும் வாயில்களில் மிகப்பெரியதான் இது கி.பி 1597 இல் கட்டப்பட்டது.

பிள்ளையார் கோயில்[தொகு]

மான் சிங் அரண்மனைக்கு மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. கோயிலின் கருவறை இரண்டு மண்டப வழிகளை நோக்கி உள்ளது. உயரமான திணிப்பு மேற்கட்டுமானம் இராஜபுதன பாணி ( இராசத்தான் ) கோயில்கள், குறிப்பாக கிபி 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜோத்பூருக்கு அருகிலுள்ள ஓசியன் கோயில்கள் மற்றும் கிபி 17 ஆம் நூற்றாண்டில் சித்தூரில் உள்ள மீரா பாய் கோயில் ஆகியவற்றை ஒத்துள்ளது.

தொங்கும் வீடு[தொகு]

மேலும் மேற்கு திசையில் சில கட்டுமானங்கள் நடந்திருக்க வேண்டும். இருப்பினும் அது என்ன என்பதற்கு எழுத்துப்பூர்வ ஆதாரம் இல்லை. இங்கிருந்து நேராக வழியில் எந்த தடையும் இல்லாமல் 1500 அடி கீழே இது இருப்பதால் உள்ளூர்வாசிகள் இதை 'தொங்கும் வீடு' என்று அழைக்கிறார்கள். இந்த இடம் ஒரு குகையின் வாயிலில் உள்ளது. அங்கு ஒரு முஸ்லிம் பக்கிரி புதைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இங்கிருந்து மூன்று முறை பள்ளத்தாக்கில் வீசப்பட்டதாகவும், கை, கால் கட்டப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் காயமின்றி தப்பியதாகவும் இறுதியில் அவர் குகையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் ஒரு கதை உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. D.R. Patil 1963, ப. 486-487.
  2. D.R. Patil 1963, ப. 487.
  3. 3.0 3.1 D.R. Patil 1963, ப. 488.
  4. Roma Niyogi 1959, ப. 118.
  5. Roma Niyogi 1959, ப. 119.
  6. Roma Niyogi 1959, ப. 99.
  7. Asher, C. B.; Asher, F. M. (1984). "The Magnificent Hill Fort of Rohtas, India". Archaeology 37 (3): 26–31. 


உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோத்தாஸ்_கோட்டை,_பீகார்&oldid=3787352" இலிருந்து மீள்விக்கப்பட்டது