சுனார்

ஆள்கூறுகள்: 25°08′N 82°54′E / 25.13°N 82.9°E / 25.13; 82.9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனார்
நகரம்
சுனார் is located in உத்தரப் பிரதேசம்
சுனார்
சுனார்
சுனார் is located in இந்தியா
சுனார்
சுனார்
ஆள்கூறுகள்: 25°08′N 82°54′E / 25.13°N 82.9°E / 25.13; 82.9
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மிர்சாபூர்
அரசு
 • வகைஉள்ளாட்சி அமைப்பு
 • நிர்வாகம்நகராட்சி
ஏற்றம்84 m (276 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்37,185
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி[2]
 • கூடுதல் மொழிஉருது[2]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்231304
தொலைபேசி குறியீடு05443
வாகனப் பதிவுUP-63
இணையதளம்https://mirzapur.nic.in/public-utility/chunar/

சுனார் (Chunar) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கில் அமைந்த பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள மிர்சாபூர் மாவட்ட்த்தில் நகராட்சியுடன் கூடிய, பண்டைய சிறு நகரம் ஆகும். சுனார் தொடருந்து நிலையம், இந்தியாவின் ஹவுரா, தில்லி, டாடாநகர் மற்றும் வாரணாசி நகரங்களுடன் இணைக்கிறது. சுனார் நகரத்தின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 35, வாரணாசி நகரத்துடன் இணைக்கிறது. இங்குள்ள சுனார் கோட்டை புகழ் பெற்றது.

அமைவிடம்[தொகு]

கங்கை ஆற்றாங்கரையில் அமைந்த சுனார் நகரம், வாரணாசி நகரத்திலிருந்து தென்மேற்கில் 14 கி மீ தொலைவிலும், மிர்சாபூர் நகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. முகல்சராய் - கான்பூர் மற்றும் தில்லி - ஹவுரா இருப்புப்பாதை வழித்தடத்தில் சுனார் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

மலை உச்சி மீது சுனார் கோட்டை மற்றும் கங்கை ஆறு பாயும் காட்சி

பத்திரகிரியார் நினைவாக சுனார் கோட்டையை உஜ்ஜைன் மகாராஜா விக்ரமாதித்தியன் கட்டினார் எனக்கருதப்படுகிறது. 1029-இல் வாழ்ந்த கவிஞர் அல்கா காந்த் கூற்றுப்படி, மன்னர் சகாதேவன் என்பர் சுனார் நகரத்தை தனது தலைநகரமாகக் கொண்டு, சுனார் கோட்டையில் அரண்மனை கட்டினார். சுனார் கோட்டை மன்னர் சகாதேவன் 52 கல் தூண்கள் கொண்ட குடை வடிவ மண்டபத்தை நிறுவினார். சூலை 1537-இல் முகலாயப் பேரரசர் நசிருதீன் உமாயூன் சுனார் நகரத்தையும் சுனார் கோட்டையை கைப்பற்றினார். பின்னர் சேர் சா சூரியிடம் சுனார் நகரமும், கோட்டையும் வீழ்ந்தது.[3] 1574-இல் அக்பர் சுனார் கோட்டையும், சுனார் நகரத்தையும் கைப்பற்றினார். 1772-ஆம் ஆண்டு வரை சுனார் நகரம் முகலாயர்கள் கையில் இருந்தது.

1772-ஆம் ஆண்டில் சுனார் கோட்டையை பிரித்தானியாவின் கிழக்கிந்திய நிறுவனப் படைகள், முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினர். சுனார் கோட்டையை பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் வைக்கும் கிட்டங்கியாக மாற்றினர். பின்னர் காசி இராச்சிய மன்னர் சேத் சிங்கின் வசம் 1778-ஆம் வரை சிறிது காலம் சுனார் நகரம் மற்றும் சுனார் கோட்டை இருந்தது.


புவியியல்[தொகு]

25°08′N 82°54′E / 25.13°N 82.9°E / 25.13; 82.9 பாகையில் அமைந்த சுனார் நகரம், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் கங்கை ஆற்றின் வலது கரையிலும், ஜார்கோ ஆற்றின் இடது கரையில் முக்கோண வடிவத்தில் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 84 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கோடைக்காலத்தில் இந்நகரத்தின் வெயில் 32°C முதல் 43°C வரை இருக்கும். குளிர்கால வெப்பம் 25°C முதல் 15°C வரை இருக்கும். சராசரி ஆண்டு மழைப் பொழிவு 110 செண்டி மீட்டர் ஆகும்.

சுனார் பாலம்

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 15 வார்டுகளும்,5951 குடியிருப்புகளும் கொண்ட சுனார் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 37,185 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 19,647 17,538 மற்றும் 17,538 பெண்கள் ஆக உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 4,926 ஆகும். சராசரி எழுத்தறிவு 66.4% ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடிகள் முறையே 5,657 மற்றும் 119 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 30,632 (82.38%), இசுலாமியர்கள் 6,259 (16.83%) மற்றும் பிற சமயத்தினர் 0.81% ஆக உள்ளனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India: Chunar". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 4 November 2019.
  2. 2.0 2.1 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.
  3. The Mughal Throne by Abraham Eraly, pg 50
  4. Chunar Population, Religion, Caste, Working Data Mirzapur, Uttar Pradesh - Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனார்&oldid=3759436" இலிருந்து மீள்விக்கப்பட்டது