யோகி ராம்சுரத்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகி ராம்சுரத்குமார்
பிறப்பு(1918-12-01)1 திசம்பர் 1918
நர்தாரா (Nardara)
இறப்பு20 பெப்ரவரி 2001(2001-02-20) (அகவை 82)
மேற்கோள்’குருவிற்கு பணிவிடை செய்வதே உயர்ந்த தவமாகும்’
பாலகுமாரன் எழுதிய ‘விசிறி சாமியார்’ நூலட்டையில்-ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்(ஆங்கில மொழி: Yogi Ramsuratkumar): (இந்தி: योगी राम सुरत कुमार}}) (டிசம்பர் 1, 1918பிப்ரவரி 20, 2001). விசிறி சாமியார் என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார். ஞானம் அடைந்த பின்பு, இறக்கும் வரை திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து மக்களுக்கு பக்தி நெறியும், ஞான யோகத்தையும் ஊட்டினார். அரவிந்தர், இரமண மகரிசி, இராமதாசர் ஆகியவர்களை தமது குருவாக கொண்டவர்.

ஞானம் அடைவதற்கு முந்தைய வரலாறு[தொகு]

வாரணாசிக்கு அருகில் உள்ள நார்தாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-இல்(அதாவது காளயுக்தி ஆண்டு கார்த்திகை மாதம் 11-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில்) பிறந்தார்.

ராம்தத் குவார் - குசும்தேவி தமபதியினருக்கு இரண்டாவது திருமகனாக அவதரித்தார். இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின் குவார் ஆகிய இரு சகோதரர்கள் உண்டு. குழந்தைப் பருவத்தில் யோகிகளையும், துறவிகளையும் சந்திப்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர். காசியில் ஓடும் கங்கை ஆற்றாங்கரையில் உலாவுவதும், அங்கு குடிசையில் வாழும் யோகிகள், துறவிகள் மற்றும் சந்நியாசிகளிடம் நட்புடன் பழகுவதுமாக காலம் கழித்தார்.

வளர்ந்த பின்பு இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் ஆன்மிகப் பசியுடன் குருவைத் தேடியலைந்து, ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கும் அடிக்கடி சென்று அம்மகான்களை தரிசித்து ஞான யோகத்தையும் தவத்தையும் கற்றார். பின்னர் கேரளாவில் உள்ள சுவாமி இராமதாசரின் ஆசிரமத்திற்கு சென்று பக்தி யோகத்தை கற்றார்.

ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், இரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும், சுவாமி இராமதாசரிடமிருந்து பக்தி நெறியையும் கேட்டுத் தெளிந்தார். குரு இராமதாசரிடமிருந்து “ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்” எனும் மந்திர தீட்சை பெற்றார். யோகி ராம்சுரத்குமார் இறக்கும் வரை இந்த மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தார்.

ஞானம் அடைந்ததற்கு பிந்தைய வரலாறு[தொகு]

யோகி இராம்சுரத்குமார் 1952 முதல் 1959 வரை இந்தியா முழுவதையும் சுற்றி வந்தார். இறுதியாக 1959-இல் திருவண்ணாமலையை அடைந்தார். துவக்க காலத்தில் யோகி தன்னை மறைத்துக் கொண்டு ஒரு பிச்சைக்காரராக வாழ்ந்தார்.[1] பின்பு திருவண்ணாமலைக்கோயிலுக்கு அருகில் உள்ள சன்னதி தெருவில் ஒரு சிறிய வீட்டில் தங்குவதற்கு சிலர் உதவினர். பின்னர் சிலகாலம் கழித்து அவரது சீடர்களின் வற்புத்தலின் பேரில் திருவண்ணாமலையில் அக்கிரகாரக் கொல்லை எனுமிடத்தில் அமைந்த ஆசிரமத்தில் தங்கி மக்களுக்கு பக்தியையும், இறை ஞானத்தையும் முக்தி அடையும் வரை அருளிக்கொண்டிருந்தார்.[2]

நூல்கள்[தொகு]

யோகி ராம்சுரத்குமார் பற்றி எழுதப்பட்ட நூல்கள் சில:

 • விசிறி சாமியார், ஆசிரியர்: பாலகுமாரன்
 • பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம், ஆசிரியர்: பாலகுமாரன்
 • யோகி ராம் சுரத்குமார் பிள்ளைத்தமிழ், ஆசிரியர்: கவிஞர். தமிழ்க்குழவி, வெளியீடு: யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் அறக்கட்டளை ராம்நகர்[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. "பாலகுமாரன் பேசுகிறார்: திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்".
 2. "பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம்".
 3. யோகி ராம் சுரத்குமார் பிள்ளைத்தமிழ், நாளிதழ்: தினத்தந்தி, நாள்:மே 16, 2014

மேலும் படிக்க[தொகு]

 • Rangarajan, Sadhu (1987). Glimpses of a great Yogi. Sister Nivedita Academy. 
 • Wadlington, Truman Caylor (1972). Yogi Ramsuratkumar, the Godchild, Tiruvannamalai. Diocesan Press. 
 • Parthasarathy, S. (2006). Amarakavyam, biography of Yogi Ramsuratkumar. Parthasarathy. 
 • Mani, A. (2004). A Man and His Master: My Years with Yogi Ramsuratkumar. Hohm Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-890772-36-9. 
 • (Anonymous) (2003). Waves of Love. Yogi Ramsuratkumar Bhavan. 
 • Ammann, Olga (2008). Yogi Ramsuratkumar, the miracle of becoming God. Yogi Ramsuratkumar Bhavan. 
 • Devaki, Ma (2008). Yogi Ramsuratkumar, the Divine beggar. Yogi Ramsuratkumar Bhavan. 
 • Arunachalam, Justice (2009). At the holy feet of my Master. Yogi Ramsuratkumar Ashram. 
 • சம்பத்குமார், கானமஞ்சரி (2009). யோகி ராம்சுரத்குமார். ஜெனரல் பப்ளிஷர்ஸ். 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகி_ராம்சுரத்குமார்&oldid=3694621" இலிருந்து மீள்விக்கப்பட்டது