யாசுமினம் எலட்டும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாசுமினம் எலட்டும்
நியூ கலிடோனியா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
தாரகைத் தாவரம்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. elatum
இருசொற் பெயரீடு
Jasminum elatum
Pancher ex Guillaumin

யாசுமினம் எலட்டும் (தாவர வகைப்பாட்டியல்: Jasminum elatum) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[2], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[3] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. 1914 ஆம் ஆண்டு இவ்வினத்தினைப் பற்றிய தாவரவியல் முதற்குறிப்பு வெளிவந்ததாக, கியூ தாவரவியல் ஆய்வகம் தெரிவிக்கிறது. இதன் இணைப்பெயர்/வேறுபெயர் யாசுமினம் எலட்டும் வகை. பிரேவிசுடைலிசு (Jasminum elatum var. brevistylis) ஆகும்.

வாழிடம்[தொகு]

நியூ கலிடோனியா தீவில் மட்டுமே காணப்படும் அரிய இனமாகவும், அத்தீவின் அகணியத் தாவரமாகவும், செம்பட்டியலிலும் உள்ள மல்லியினமாகும்.[4]

பேரினச்சொல்லின் தோற்றம்[தொகு]

அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும். [5] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது. [6]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fernandes, F. (2011). "Jasminum elatum". IUCN Red List of Threatened Species 2011. https://www.iucnredlist.org/species/177845/7468600. பார்த்த நாள்: 05 பெப்பிரவரி 2024. 
  2. Angiosperm Phylogeny Group (2016), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV", இலின்னேயசு சமூகத்தின் தாவர ஆய்விதழ், 181 (1): 1–20, doi:10.1111/boj.12385
  3. முல்லைக் குடும்பம் (Oleaceae Hoffmanns. & Link First published in Fl. Portug. [Hoffmannsegg] 1: 62. 1809 [1 Sep 1809] (as "Oleinae") (1809) nom. cons.)
  4. "Jasminum noumeense". Plants of the World Online (POWO) (in பிரித்தானிய ஆங்கிலத்திலுள்ள இணையப்பக்கம்). Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 05 பெப்பிரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  5. Gledhill, David (2008). "The Names of Plants". Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521866453 (hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521685535 (paperback). pp 220
  6. etymonline

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாசுமினம்_எலட்டும்&oldid=3884034" இலிருந்து மீள்விக்கப்பட்டது