மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தி
மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Piciformes |
குடும்பம்: | மரங்கொத்தி |
பேரினம்: | Dinopium |
இனம்: | D. javanense |
இருசொற் பெயரீடு | |
Dinopium javanense (Ljungh, 1797) |
மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தியானது (common flameback) அல்லது (common goldenback woodpecker) (Dinopium javanense) என்று அழைக்கப்படுகிறது,இந்தியா இலங்கை,நேபாளம் பூட்டான், மியான்மார், லாவோஸ், வங்காளாதேசம், தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனிசியா, புருனே போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
உடலமைப்பு[தொகு]
28 செ.மீ- மேற்போக்காகப் பார்ப்பவர்களுக்கு இதனை அடுத்ததிலிருந்து வேறுபடுத்தி அறிவது கடினம். பின் முதுகும் பிட்டமும் குங்குமச் சிவப்பாக இருப்பது கொண்டு கருப்புப் பின் முதுகும் பிட்டமும் கொண்ட அதிலிருந்து வேறுபடுத்தி அறியலாம். இதன் பொன் முதுகு அடுத்ததை விட சற்றுக் கூடுதலான ஆரஞ்சு தோய்ந்தது. பெண்ணினுடைய உச்சந்தலையும் கொண்டையும் குங்குமச் சிவப்புக்குப் பதிலாகக் கருப்பாக இருக்கும்.
காணப்படும் பகுதிகள் ,உணவு[தொகு]
மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் சமவெளி முதல் 1500மீ. வரை ஈரப்பதமிக்க இலையுதிர் காடுகளிலும், பசுமைமாறாக் காடுகளிலும் காணப்படும். இது ஈரப்பதமான சூழலையே அதிகம் விரும்புவது.[2]
இனப்பெருக்கம்[தொகு]
பிப்ரவரி முதல் ஜூலை முடிய மா, வாகை, முருங்கு ஆகிய மரங்களில் வங்கு குடைந்து 3 முட்டைகள் இடும், பழக்க வழக்கம் உணவு, இனப்பெருக்கம் ஆகியன பொன்முதுகு மரங்கொத்தியதைப் போன்றனவே.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Dinopium javanense". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:98
பொதுவகத்தில் Dinopium javanense பற்றிய ஊடகங்கள்