மூன்றாம் நந்திவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மூன்றாம் நந்திவர்மன் (Nandivarman III) என்பவன் பல்லவ மன்னகளுள் ஒருவன். இவனது ஆட்சிகாலம் 825-850. இவன் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் பேரனும் தந்திவர்மனின் மகனுமாவான்.

ஆட்சி[தொகு]

மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பல்லவர்களின் ஆட்சி வலுப்பெற்றது. தனது தந்தையின் காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த பல்லவர்கள் ஆட்சியை இவன் மீண்டும் வலுப்படுத்தினான். இராஷ்டிரகூடர்களுடன் கங்கர்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு பாண்டியர்களை காஞ்சிக்கருகில் உள்ள தெள்ளாறு என்னுமிடத்தில் தோற்கடித்தான். பின்வாங்கி ஓடிய பாண்டியப் படைகளை வைகையாறு வரை விரட்டிச் சென்றான். ஆனால் பின்பு பாண்டிய மன்னன் சீவல்லபன் பல்லவர்களால் கைப்பற்றப்பட்டப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை மீட்டதோடு மட்டுமல்லாது பல்லவர்களைக் கும்பகோணத்தில் தோற்கடிக்கவும் செய்தான்.

இம்மன்னனின் கப்பற்படை மிகவும் வலிமைமிக்கதாக இருந்துள்ளது. இவன் கடல்கடந்து சயாம் மற்றும் மலாயா நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

முன்னர்
தந்திவர்மன்
பல்லவ வம்சம்
825–850
பின்னர்
அபராஜிதவர்மன்
"http://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_நந்திவர்மன்&oldid=1797064" இருந்து மீள்விக்கப்பட்டது