முதலாம் நரசிம்ம பல்லவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முதலாம் நரசிம்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம்
விட்ணுகோபன் II
சிம்மவர்மன் II
விட்ணுகோபன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவர்மன் III
சிம்மவிட்டுணு பொ. யு. 556 - 590
மகேந்திரவர்மன் I பொ. யு. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) பொ. யு. 630 - 668
மகேந்திரவர்மன் II பொ. யு. 668 - 669
பரமேசுவரவர்மன் பொ. யு. 669 - 690
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) பொ. யு. 690 - 725
பரமேசுவரவர்மன் II பொ. யு. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) பொ. யு. 731 - 796
தந்திவர்மன் பொ. யு. 775 - 825
நந்திவர்மன் III பொ. யு. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) பொ. யு. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) பொ. யு. 850 - 882
அபராசிதவர்மன் பொ. யு. 882 - 901
தொகு

புகழ் பெற்ற பல்லவ மன்னனான மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அவன் மகன் நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668) என்னும் பெயருடன் ஆட்சிக்கு வந்தான். காஞ்சிப் பல்லவ மன்னர்களுள் பல வழிகளிலும் சிறப்புப் பெற்றவனாகப் போற்றப்படுபவன் இவனாவான். இவரது காலத்திலேயே பல்லவர் குலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது.இவரது ஆட்சி காலத்தில் பல்லவ இராட்சியம் வடக்கில் கிருஷ்ணா ஆறு முதல் தெற்கில் மதுரை வரை பரந்து காணப்பட்டது. நரசிம்ம பல்லவரின் ஆட்சி காலத்திலேயே அப்பர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர் போன்ற சைவ நாயன்மார்கள் வாழ்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. அக்காலத்தில் பல்லவர்களின் எதிரிகளாக விளங்கிய சாளுக்கியரை வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் இவன்.

இவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற பட்டம் பெற்றான். இவன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல், கலை போன்ற துறைகளில் இவனது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.

முதலாம் நரசிம்மன் காலத்து நாணயம். இடது புறத்தில் சிங்க முகம்.

பட்ட பெயர்கள்[தொகு]

நரசிம்மவர்மன் தான் அமைத்த கோவில்களில் தன் பட்டப் பெயர்கள் பலவற்றை வெட்டுவித்துள்ளான். அவற்றுட் சில‘மகாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி. இரணசயன், அத்தியந்த காமன், அமேயமாயன் நயநாங்குரன்,' என்பன.[1]

சாளுக்கியர்களுடன் போர்[தொகு]

மகேந்திரவர்மனின் ஆட்சி காலத்தில் சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி காஞ்சி மீது படையெடுத்து, காஞ்சி நகரை முற்றுகையிட்டான். இப்போரில் மகேந்திரவர்மன் இறக்க நேரிட்டது.இதற்கு பழி வாங்கும் முகமாக அவரது மகன் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்தான். இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும்,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும்,பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன. இம்மாபெரும் படையெடுப்பை படைத்தளபதி பரஞ்சோதி முன் நின்று நடத்தி வாதாபி நகரை எரித்து பல்லவ குலத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கினர். இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன் வாதாபி கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். படைத்தளபதி பரஞ்சோதி பிற்பாடு 63 நாயன்மார்களில் ஒருத்தராக மாறி சைவத்திற்கு அரும்பணி புரிந்தார்.

மூல நூல்கள்[தொகு]

  1. மா. இராசமாணிக்கம் (முதற்பதிப்பு - 1946, மறுபதிப்பு - 1999). பல்லவப் பேரரசர் (PDF). பூரம் பதிப்பகம். pp. பப 66 -74. {{cite book}}: Check date values in: |year= (help)
  1. மா. இராசமாணிக்கம் (முதற்பதிப்பு - 1947, மறுபதிப்பு - 2000). பல்லவ வரலாறு (PDF). கழக வெளியீடு. p. 147. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_நரசிம்ம_பல்லவன்&oldid=3313873" இலிருந்து மீள்விக்கப்பட்டது