மும்பை மெட்ரோ
Appearance
மும்பை மெட்ரோ என்பது மும்பை நகரத்திற்கான மெட்ரோ தொடருந்து அமைப்பாகும். இது மும்பையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகக் கட்டப்பட்டு வருகிறது. இது இந்நகரில் ஏற்கனவே உள்ள மும்பை புறநகர் தொடருந்து வலையமைப்பினை வலுப்படுத்தும். 2021 இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் 63 கி.மீ நீளம் உடையதாகவும் மூன்று கட்டங்களாகவும் செயல்படுத்தப்படும்.
சூன் 2006-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இதன் முதற்கட்டத்தைத் துவக்கி வைத்தார். கட்டுமானப் பணிகள் 2008 பிப்ரவரியில் தொடங்கின. முதற்கட்டத்தின் முதல் தடம் 2014 சூன் 8-ஆம் நாள் பயன்பாட்டுக்கு வந்தது.
உலகில் அடர்த்தி மிகுந்த போக்குவரத்து பிணையங்களில் எட்டாவது இடத்தை மும்பை மெட்ரோ பிடித்துள்ளது.[1] ஒரு நாளைக்கு 2.60 லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.