ஐதராபாத் மெட்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐதராபாத் மெட்ரோ
Hyderabad Metro.jpg
தகவல்
உரிமையாளர்தெலங்காணா அரசு (10%)
லார்சன் அன்ட் டூப்ரோ (90%)
அமைவிடம்ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
போக்குவரத்து
வகை
விரைவுப் போக்குவரத்து
மொத்தப் பாதைகள்3 [1]
நிலையங்களின்
எண்ணிக்கை
57 நிலையங்கள்
முதன்மை அதிகாரிN.V.S ரெட்டி[2]
தலைமையகம்மெட்ரோ இல்லம், பேகம்பேட்டை, ஐதராபாத்து
இணையத்தளம்L&T Metro
HMRL
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
29 நவம்பர் 2017[3]
இயக்குனர்(கள்)ஐதராபாத் மெட்ரோ ரயில் (HMRL)
Headway3.5 - 7 நிமிடங்கள்
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்72 km (45 mi)
69 km (43 mi) (செயல்பாடுகிறது)
இருப்புபாதை அகலம்1,435 மிமீ (4 அடி 8 12 அங்)
மின்னாற்றலில்25 kV, AC மேல்நிலையில்
சராசரி வேகம்35 km/h (22 mph)
உச்ச வேகம்80 km/h (50 mph)

ஐதராபாத் மெட்ரோ (Hyderabad Metro) என்பது விரைவுப் போக்குவரத்து ஐதராபாத், தெலங்காணா, இந்தியா நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான ஒரு திட்டமாகும். [4] இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் கட்டப்படும். மியன்பூர் முதல் நாகோல் வரை 24 மெட்ரோ நிலையங்களுடன் 29 கிலோமீட்டர் (18 மைல்) இந்த வழித்தடம் 28 நவம்பர் 2017 அன்று பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

வரலாறு[தொகு]

மெட்ரோ ரயில் திட்டம் முதலில் ஆந்திர மாநிலம் பிரியும் முன் முதல்வர் நா. சந்திரபாபு நாயுடு 2003 ஆண்டு இதற்கான முயற்சியில் ஈடுபட்டார். [5] ஐதராபாத் தொடர்ந்து வளர்ந்து வருவதால் பொது போக்குவரத்து போதுமான அளவில் இல்லாமலும் தொடர் போக்குவரத்து நெரிகல்களால் ஆந்திர அரசு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் கொரிக்கை வைத்தன் காரணமாக ஐதராபாத் மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. மேலும் தில்லி மெட்ரோ நிறுவனத்துக்கு திட்டவரைவினை உருவாக்க கோரியது. [6]

2007 ஆம் ஆண்டு ஐதராபாத் மெட்ரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக என்.வி.ரெட்டி நியமிக்கப்பட்டார். [7] அதே ஆண்டு மத்திய அரசு முதல் கட்டமாக 1639 கோடி ஒதுக்கியது. [8]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஐதராபாத் மெட்ரோ திட்டம் பெப்ரவரி-மார்ச் 2013 இல் நியூயார்க்கில் நடைபெற்ற உலகளாவிய உள்கட்டமைப்பு கண்காட்சியில் சிறந்த 100 உலகளாவிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாக காட்சிப்படுத்தப்பட்டது.[9] [10]

2015 ஆம் ஆண்டு L&T ஐதராபாத் மெட்ரோ திட்டம் (LTMRHL) சிறந்த மனிதவளம் மற்றும் திறமையான திட்டமிடலுக்கான விருது கிடைத்தது.[11]' category.

2018 ஆம் ஆண்டு ரசூல்பூரா, பாரடைஸ் மற்றும் பிரகாஷ் நகர் மெட்ரோ நிலையங்களுக்கு இந்திய பசுமை கட்டிடங்கள் அவை (IGBC) பசுமை எம்.ஆர்.டி.எஸ் பிளாட்டினம் விருது வழங்கியது.[12]

2018 ஆம் ஆண்டு இந்திய அரசு ஐதராபாத் மெட்ரோவுக்கு சிறப்பான நகர்ப்புற போக்குவரத்து திட்டம் என்று தேர்வு செய்து விருது வழங்கியது.[13]

தற்போதைய நிலை[தொகு]

தற்போது, ​​ஐதராபாத் மெட்ரோவில் 57 நிலையங்கள் உள்ளன. அறிவிப்பு பலகைகள் மற்றும் மின்னணு காட்சி வழிகாட்டிகள் நகரும் படிகட்டுகள் மற்றும் லிஃப்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த நிலையங்களில் இணைப்வு சாலைகள் உள்ளன, மற்ற பொது போக்குவரத்துகளை பயன்படுத்த இணைப்புகள் ஏற்படுதடுத்தப்பட்டுள்ளது. [14]

Hyderabad Metro Network Map
வழித்தடம் முதல் செயல்பட துவங்கியது விரிவாக்கத்திற்கு பிறகு பயன்பாட்டுக்கு நிலையங்கள் நீளம் முனையம் இரும்புப் பாதை
(mm)
மின்னாற்றல் இயக்கும் நேரம் (நிமிடங்கள்)
சிவப்பு 29 நவம்பர் 2017 24 செப்டம்பர் 2018 27 29 km (18 mi) மியன்பூர் எல்.பி.நகர் மெட்ரோ நிலையம் 1435 25 kV OHE 2
நீலம் 29 நவம்பர் 2017 29 நவம்பர் 2019 23 27 km (17 mi) ரைடர்க் 1435 25 kV OHE 2
பச்சை 7 பெப்ரவரி 2020 10 11 km (6.8 mi) ஜூபிலி பேருந்து நிலையம் எம்.ஜி பேருந்து நிலையம் 1435 25 kV OHE
57 67 km (42 mi)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Stations | Hyderabad Metro | L&T India". ltmetro.in.
 2. "N. V. S. REDDY | Hyderabad Metro | L&T India". ltmetro.in.
 3. "Hyderabad Metro rail flagged off today: See fares, timings, routes and other features". The Indian Express (in ஆங்கிலம்). 28 November 2017. 28 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Project Description". 11 June 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
 5. Correspondent, Our Special (2003-10-27). "Nod for metro rail project in hyderabad CM Chandrababu Naidu" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nod-for-metro-rail-project/article27805934.ece. 
 6. Network, BD News (2018-08-17). "Vajpayee-era a great chapter, recalls Chandrababu Naidu". Bengal Daily (in ஆங்கிலம்). 2020-02-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-02-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 7. Sharma, Swati (20 August 2016). "Hum Tum: Bonding over work". Deccan Chronicle.
 8. "Centre approves Hyderabad Metro Rail Project". 3 May 2007 – via The Economic Times.
 9. "TheHindu.com Metro in best 100 global projects". www.thehindubusinessline.com. http://www.thehindubusinessline.com/industry-and-economy/economy/hyderabad-metro-gift-city-in-strategic-100-infra-projects/article4178523.ece. 
 10. "DeccanChronicle.com metro-among-100-global-projects". metro-among-100-global-projects. Archived from the original on 17 டிசம்பர் 2012. https://web.archive.org/web/20121217221315/http://deccanchronicle.com/121209/news-current-affairs/article/metro-among-100-global-projects. 
 11. "L&T Metro Rail Hyd bags SAP award". 10 December 2015. 29 November 2017 அன்று பார்க்கப்பட்டது – via www.thehindu.com.
 12. "Metro stations get Green Platinum Award". 1 November 2018 – via www.thehindu.com.
 13. "Hyderabad Metro Rail gets 'Best Urban Mass Transit Project' award". United News of India. 5 November 2018. http://www.uniindia.com/hyderabad-metro-rail-gets-best-urban-mass-transit-project-award/south/news/1398327.html. 
 14. "Hyderabad Metro to get service lanes". 22 May 2015. 29 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராபாத்_மெட்ரோ&oldid=3487017" இருந்து மீள்விக்கப்பட்டது