உள்ளடக்கத்துக்குச் செல்

முகத்தலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகத்தலை என்னும் பண்டைய தமிழக ஊர், இன்று பன்னத்தெரு என்று மற்றொருப் பெயரால் அழைக்கப்படுகிறது.திருவாரூர் மாவட்டத்தில் திருத்தருப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினத்திற்குச் செல்லும் பெருவழியில், திருத்தருப்பூண்டியிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள, கொக்காலடி என்னும் ஊர் அமைந்துள்ளது. வடக்கே மானாச்சேரி செல்லும் மணல்வழியில், ஒரு கி.மீ தொலைவில் உள்ள பன்னத்தெரு என்னும் ஊர் அமைந்துள்ளது. இவ்வூரே, முகத்தலை என்று தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுகிறது.

இலக்கியக் குறிப்புகள்

[தொகு]

ஒன்பதாம் திருமுறையின் பல பாடல்களில், முகத்தலை என்ற சொல் அமைந்துள்ளது. இருப்பினும், இங்கு பஞ்சமம் பண்ணில் அமைந்துள்ள கீழ்கண்டப் பாடல் மட்டும் எடுத்தாளப்பட்டுள்ளது.

புவனநா யகனே அகவுயிர்க் கமுதே
    பூரணா ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்
    பசுபதீ '''பன்னகா பரணா'''
அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன்
    அகத்திலும் '''முகத்தலை''' மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
    தனியனேன் தனிமைநீங் குதற்கே.  

அருஞ்சொற்பொருட்கள்:

  1. அகம் - இடம்
  2. புவனம் - உலகம்
  3. பன்னக ஆபரணன் - பாம்பாகிய அணிகளை யுடையவன்.
  4. பசுபதி - உயிர்கட்குத் தலைவன்.

கல்வெட்டுக் குறிப்புகள்

[தொகு]

இவ்வூரில் சாந்தநாயகி என்ற பெண் கடவுளும், பன்னகாபரணர் என்ற ஆண் கடவுளும் குடிகொண்டு உள்ளனர்.இப்பன்னத்தெருக் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றில் முதலாவது கல்வெட்டு, மூன்றாங்குலோத்துங்க சோழனுடைய 18ஆம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டது.

இரண்டாவது கல்வெட்டு,25ஆம் ஆட்சி ஆண்டிலும் பொறிக்கப்பட்டது. மதுரையும், ஈழமும், கருவூரும், பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளினது என குறிப்பிடுகின்றது. இந்த இருகல்வெட்டுக்களிலும்[1] இறைவரின் திருப்பெயர் பன்னகாபரணேஸ்வரர் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இங்குத் தலவிருட்சமாக, புன்னை மரம் அமைந்துள்ளது.

பழைய கல்வெட்டுக்களில் ஊரின் பெயரையே, இறைவனுக்கும் பெயரிடல் மரபு இருந்தது. 1926ஆம் ஆண்டு, இத்துறை அறிஞர்களால் எழுதப்பட்டக் கல்வெட்டு அறிக்கையில், ஊரின் பெயரை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனவே,'பன்னத்தெரு ஊர், முகத்தலை என்று பொதுமக்களால் நம்பப் படுவது தவறாக இருக்கலாம்.


காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Annual reports on South Indian Epigraphy for the year 1926. Nos. 163-164
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகத்தலை&oldid=2127510" இலிருந்து மீள்விக்கப்பட்டது