மீனல் ரோகித்
மீனல் ரோகித் | |
---|---|
பிறப்பு | மீனல் ரோகித் ராஜ்கோட், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | இடைப்படி மீத்தேன் உணரி
அமைப்பு பொறியாளர் செவ்வாய் சுற்றுக்கலன் குவிப்பணி திட்டப் பொறியாளர் / மேலாளர் |
விருதுகள் |
|
மீனல் ரோகித் (Minal Rohit) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் தொகுப்புப் பொறியியலாளர். இவர் செவ்வாய் கோளிற்கு விண்வெளி சோதனைக் கலன் (மங்கல்யான்) அனுப்புவதில் பெரும் பங்காற்றினார்.[1]
குசராத்தின் அகமதாபாத்திலுள்ள நிர்மா தொழிற்நுட்பக் கழகத்தில் பட்டம் பெற்றவுடன் மீனல் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிக்குச் சேர்ந்தார்.[2] செவ்வாய் சுற்றுகலன் திட்ட அணியில் இயந்திரப் பொறியாளர்களுடன் பணி புரிந்தார்.[3] சுற்றுக் கலனின் தொகுப்புப் பொறியியல் அமைப்பையும் மீத்தேன் உணரிகளையும் கவனித்து வந்தார்.
இளமையும் கல்வியும்
[தொகு]மீனல் சம்பத்[4] ராஜ்கோட்டில் பிறந்தவர்.[5]
சிறுமியாக ஓர் மருத்துவராக விரும்பினார். எட்டாம் அகவையில் தொலைக்காட்சியில் விண்வெளி குறித்த நிகழ்வொன்றில் மனம் மாறி இத்துறையில் ஆர்வம் கொண்டார்.[6] தனது படிப்பின்போது உடன் மாணவர்கள் கிடைக்கப்போகும் சம்பளத்தைக் கொண்டே தங்கள் பணிவாழ்வை அமைத்துக் கொள்ளும் போக்கைக் கண்டார். இருப்பினும் அவர் முழுமையான கல்வி பெறுவதையே நாட்டமாகக் கொண்டார். 1999இல் குசராத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[7] தொலைத் தொடர்பில் விண்வெளிப் பயன்பாடுகள் மையம் பி.டெக் பட்டம் வழங்கியது; இணையாக நிர்மா தொழிற்நுட்பக் கழகத்தில் மின்னியல், தொலைத்தொடர்பில் தங்கப் பதக்கம் வென்றார்.
பணிவாழ்வு
[தொகு]மீனல் தமது பணிவாழ்வை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் செயற்கைக்கோள் தொடர்பியல் பொறியாளராகத் துவங்கினார்; பின்னர் விண்வெளிப் பயன்பாடுகள் மையத்திற்கு மாறினார். செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தில் பணியாற்றிய 500 அறிவியலாளர்களிலும்[8] பொறியாளர்களிலும் ஒருவராக பங்கேற்றார். இத்திட்டத்தின் அமைப்பு பொறியாளராக சுற்றுக்கலன் எடுத்துச் சென்ற உணரிகளை சோதிக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவினார்.[4] இரண்டாண்டுகளாக எந்தவொரு பணி விடுப்பும் எடுக்காமல் திட்டம் சிறப்பாக நிறைவுற பாடுபட்டார்.[6]
ரோகித் சந்திரயான் - II போன்ற வருங்காலத் திட்டங்களுக்கு தலைமைப் பொறியாளராகவும்[9] திட்ட மேலாளராகவும் பணியாற்றினார்.[10] தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் துணை திட்ட இயக்குநராக உள்ளார்.[11] இந்தத் தேசிய விண்வெளி முகமையின் முதல் பெண் இயக்குநராக பொறுப்பேற்க உழைத்து வருகிறார்.[12]
ஆய்வு பங்கேற்பு
[தொகு]இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மங்கல்யான் குறிப்பணியில் பணிபுரியும் 500 அறிவியலாளர்களில் ஒருவரும் இத்திட்டத்தில் பங்கேற்கும் பத்து பெண்களில் ஒருவரும் ஆவார்.[13] திட்ட மேலாளராகவும் அமைப்பு பொறியாளராகவும் மீத்தேன் உணரி (MSM), லைமேன்-ஆல்்்பா ஒளி அளவி (LAP), வெப்ப அகச்சிவப்பு படமாக்கும் நிறமாலை மானி (TIS), செவ்வாய் (கோள்) வண்ண ஒளிப்படக் கருவி (MCC) ஆகியவற்றை விண்கலத்தில் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.[3] இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மூத்த பொறியாளர்களில் ஒருவராக உள்ளார்.
இந்தியாவின் வெற்றிகரமான முதல் நிலவுச் சலாகையானசந்திரயான்-1திட்டத்தை அடுத்து திட்டமிடப்பட்டுள்ள சந்திரயான்-2 பின்தொடர் திட்டத்தில் தற்போது இவர் பணியாற்றுகிறார்.[2] இத்திட்டத்தில் இவரது முதன்மைப் பணி இன்சாட்-3DS செயற்கைக் கோளிலிருந்து பெறப்படும் வளிமண்டலத் தரவுகளையும் அவற்றின் தரத்தையும் மேம்படுத்துவதாகும்.
விருதுகளும் சாதனைகளும்
[தொகு]2007ஆம் ஆண்டு ரோகித் தொலைமருத்துவம் தொடர்பான திட்ட பங்கேற்புக்காக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இளம் அறிவியலாளர் தகுதி விருது பெற்றார்.[14] 2013ஆம் ஆண்டு இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி முப்பரிமாண விண்வெளிசார் கலன்களில் பங்கேற்றமைக்காக இசுரோ சிறந்த அணிக்கான விருது பெற்றார். செவ்வாய் கோளிற்கு சோதனைக் கலன் அனுப்பும் திட்டத்தில் பல இடைஞ்சல்களுக்கு இடையேயும் 15 மாதங்களில் திட்டத்தை நிறைவேற்றியதற்காக இவரையும் இவரது திட்ட சக பணியாளர்களையும் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டினார்.
புகழ் பெற்ற தொலைக்காட்சி நிறுவனமான சிஎன்என் 2014 ஆம் ஆண்டின் பெண்ணாக இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.[15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indian woman's space mission" (in en-GB). BBC News. 2014-02-07. https://www.bbc.com/news/world-asia-25989262.
- ↑ 2.0 2.1 Joshi, Manoj; Srikanth, B R (26 February 2017). "India's Rocket Women". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 October 2017.
- ↑ 3.0 3.1 "Scientists: Minal Rohit and Dr Tara Shears, The Conversation - BBC World Service". BBC. பார்க்கப்பட்ட நாள் 10 October 2017.
- ↑ 4.0 4.1 "These Scientists Sent a Rocket to Mars for Less Than It Cost to Make "The Martian" Backchannel" (in en-US). WIRED. https://www.wired.com/2017/03/these-scientists-sent-a-rocket-to-mars-for-less-than-it-cost-to-make-the-martian/.
- ↑ Agarwal, Ipsita (17 March 2017). "These Scientists Sent a Rocket to Mars for less than it Cost to make "The Martian"". Wired. https://www.wired.com/2017/03/these-scientists-sent-a-rocket-to-mars-for-less-than-it-cost-to-make-the-martian/. பார்த்த நாள்: 10 October 2017.
- ↑ 6.0 6.1 "Tech Women: Minal Sampath worked on India's Mars Mission". www.shethepeople.tv (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
- ↑ "Minal Rohit". RSDiitm. RSD 2017. பார்க்கப்பட்ட நாள் 10 October 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Indian woman's space mission" (in en-GB). BBC News. 2014-02-07. https://www.bbc.com/news/world-asia-25989262.
- ↑ Thorpe, J.R. (17 February 2018). "8 Inspiring Women Who Are Changing The Space Game" (in en). Bustle. https://www.bustle.com/p/8-women-in-stem-who-are-changing-the-space-game-7999206.
- ↑ "WOMAN POWER : MOMS of Mars Mission". corporatecitizen.in. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08.
- ↑ "Magnetic Maharashtra 2018 Summit : Women have more opportunities in industrial sector – Newslantern". newslantern.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-04-07. பார்க்கப்பட்ட நாள் 2018-04-06.
- ↑ "8 Hardworking ISRO Women Scientists Who Are Breaking The Space Ceilings With Their Work" (in en-GB). Storypick. 2017-02-16. https://www.storypick.com/isro-women-scientists/.
- ↑ "Indian Woman's Space Mission". BBC News. 7 February 2014. பார்க்கப்பட்ட நாள் 10 October 2017.
- ↑ Kathuria, Charvi (December 19, 2017). "Tech Women: Minal Sampath worked on India's Mars Mission". www.shethepeople.tv (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-08.
- ↑ Ghitis, Frida (11 December 2014). "2014 women of the year" (in en-US). CNN. http://www.cnn.com/2014/12/11/opinion/ghitis-women-of-the-year-2014/index.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- Daswani, Divia Thani (1 March 2016). "The Women of ISRO". VOGUE India. Archived from the original on 26 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 10 October 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - https://www.shethepeople.tv/home-top-video/chandrayaan-2-minal-rohit-scientist-systems-engineer