விண்வெளிப் பயன்பாடுகள் மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்வெளிப் பயன்பாடுகள் மையம்
Space Applications Centre logo.PNG
எஸ்.ஏ.சியின் சின்னம்
நிறுவியது1972
தலைமையகம்அகமதாபாத், இந்தியா
இணையதளம்SAC website

விண்வெளிப் பயன்பாடுகள் மையம் (Space Applications Centre (SAC) இந்தி:अंतरिक्ष अनुप्रयोग केंद्र) என்பது இந்தியாவின் அகமதாபாத் நகரில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் ஐ.எஸ்.ஆர்.ஓவின் துணை நிறுவனமாகும். இந்திய விண்வெளித் துறைத் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகளைச் செய்கிறது. தகவல் தொடர்பு (telecommunications), தொலை உணரிகள் (remote sensing), வளிமண்டலயியல் (meteorology), மென்பொருள் மற்றும் வன்பொருள் தாயாரிப்பு போன்றவற்றை இந்திய விண்வெளித்துறைக்காக தயாரிக்கிறது. மேலும் செயற்கைக் கோள்களைக் கண்காணிப்பது (satellite navigation) ஆகியவற்றையும் செய்கிறது. இந்நிறுவனத்தின் இரண்டு மையங்களில் ஒன்று அகமதாபாத் நகரிலும் மற்றொன்று தில்லியிலும் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]