தொடர்புப் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தொடர்புப் பொறியியல் அல்லது தொலைதொடர்புப் பொறியியல் தொலைதொடர்பு கருவிகளைக் கொண்டு உலக மக்களை ஒன்றிணைக்கும் பொறியியலின் ஒரு பிரிவாகும். தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பிழையில்லாமல் கொண்டு செல்வதே இப்பொறியியலின் முக்கிய குறிக்கோளாகும். அலைபேசி,தொலைபேசி, தொலைக்காட்சி, வானொலி, பண்பலை,செயற்கைக்கோள், தந்தி, இணையம் முதலியவை தொலைதொடர்பு சாதனங்களாகும். இந்த சாதனங்களை உருவாக்குதல், பராமரித்தல், பழுதுநீக்குதல், தரம் உயர்த்தல் முதலியவற்றை தொடர்புப் பொறியியல் கற்றுத் தருகிறது.

உலகளாவிய மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியலாளர் குழுமத்தின் சின்னம்

வரலாறு[தொகு]

தகவல்தொடர்பியல் அல்லது தகவல் பரிமாற்றம் அல்லது தகவலை பகிர்துகொள்ளுதல் மனிதனின் வாழ்வில் பெரும்பங்கு வகுக்கிறது. ஒவ்வொரு உயிரினமும் தம் கருத்தை தமது ஒத்த உயிரினத்திற்கு வெளிப்படுத்துகிறது. இதுவே தகவல் தொடர்பின் ஆரம்ப நிலையாகும். முந்தைய காலங்களில் மனிதன் தம் கருத்தினை சைகை மூலம் பிறர்க்கு அறிவித்தான். பின் ஓசைகள் மூலமாகவும், பின் படங்கள் அல்லது சித்திரங்கள் மூலமாகவும் தம் கருத்தினை பிறர்க்கு அறிவித்தான். பின்னர் தகவல்களை நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு புறாவினையும், ஒற்றர்களையும் பயன்படுத்தினான். பின்னர் அவசர செய்திகளை நீண்ட தொலைவிற்கு குறைந்த நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்கு ஒலி, ஒளிக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அந்நிய படையெடுப்பை மன்னனிடம் தெரிவிக்க ஊர் எல்லையிலேயே ஒரு குறிப்பிட்ட மரத்தை தீயிட்டு கொளுத்தி அறிவித்துள்ளனர். பின்பு இரும்பு கோபுரங்களில் கம்பிகளை வெவ்வேறு நிலைகளிலும் வடிவங்களிலும் அடுக்கி செய்திகளையும் தகவல்களையும் மிக விரைவாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளனர். சில இடங்களில் தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட மணிக்கூண்டுகளின் மூலம் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளனர். பின்பு அறிவியலின் அதீத வளர்ச்சியால் தந்தி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, பண்பலை, செயற்கைக்கோள், இணையம், அலைபேசி போன்ற சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் இன்று ஒரு குக்கிராமமாக சுருங்கியுள்ளது.

தகவல் தொடர்பு அடிப்படை கோட்பாடு[தொகு]

தகவல் தொடர்பு அடிப்படை கோட்பாடு வரைபடம்

தகவல் தொடர்பு என்பது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பிழையில்லாமல் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் செயலாகும். இந்த முறையில் அனலாக் என்றழைக்கப்படும் தொடர்ச்சியான தகவல்துண்டுகள் டிஜிட்டல் அல்லது தொடர்ச்சியற்ற சமிக்ஞைகள் தகவலாக மாற்றப்படுகிறது. பின் பல ஆதாரங்களிலிருந்து இதுபோல் வரும் டிஜிட்டல் தகவல்கள் என்கோடிங் செய்யப்படுகிறது. பின்னர் அந்த தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்படுகிறது. பின்னர் அந்த தகவல்கள் மாடுலேஷன் செய்யப்படுகிறது. பின்னர் ஊடகம் அல்லது தகவல்பாதை வழியாக சேரவேண்டிய இடத்திற்கு கொண்டுசேர்க்கப்படுகிறது. இந்த அமைப்பில் தகவல்பிழை கண்டுபிடிக்கும் முறையும் அமைக்கப்பட்டு பிழைகள் திருத்தப்படுகிறது. பெறுனர் அமைப்பு அனுப்புனர் அமைப்புக்கு நேர் எதிரான காரியங்களைச் செய்கிறது. மாடுலேஷனுக்குப் பதிலாக டிமாடுலேஷன், என்கிரிப்ட்டுக்கு பதிலாக டிகிரிப்ட், என்கோடிங்கிற்குப் பதிலாக டிகோடிங் ஆகியவற்றைச் செய்கிறது. மேலும் இறுதியில் தேவையெனில் டிஜிட்டல் என்றழைக்கப்படும் தொடர்ச்சியற்ற சமிக்ஞைகள் அனலாக் அல்லது தொடர்ச்சியான தகவல்துண்டுகளாக மாற்றப்படுகிறது.

தொடர்புப் பொறியியலின் இருபெரும் பிரிவுகள்[தொகு]

கம்பி இணைப்பு தகவல் தொடர்பியல்
கம்பிஇணைப்பில்லா தகவல் தொடர்பியல்

கம்பி இணைப்பு தகவல் தொடர்பியல்[தொகு]

கம்பி இணைப்புத் தொடர்பியல் என்பது தகவல்களை துத்தநாக கம்பிகள்,கண்ணாடி இழை வயர்கள்,திருக்கப்பட்ட இரட்டை வயர்கள்,அலை கடத்திகள் முதலிய கடத்திகள் வழியாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கும் வழிமுறைகளை உள்ளடக்கியதாகும்.

கம்பிஇணைப்பில்லா தகவல் தொடர்பியல்[தொகு]

கம்பியில்லா தகவல் தொடர்பு என்பது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்திகளின் உதவியின்றி கொண்டு செல்லும் வழிமுறையாகும்.இத்தொடர்பியல் காற்றை ஊடகமாகக் கொண்டு செயல்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்புப்_பொறியியல்&oldid=1436705" இருந்து மீள்விக்கப்பட்டது