மியான்மர் குட்டைவால் மலைப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியான்மர் குட்டைவால் மலைப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: ஊர்வன
வரிசை: இசுகொமாடா
குடும்பம்: பைதானிடே
பேரினம்: பைதான்
இனம்: பை. கியாக்தியோ
இருசொற் பெயரீடு
பைதான் கியாக்தியோ
ஜக், கோதே& ஜேக்கப்சு, 2011

பைதான் கியாக்தியோ (Python kyaiktiyo) என்பது மியான்மர் குட்டை வால் மலைப்பாம்பு எனப் பொதுவாக அறியப்படும் மியான்மரில் காணப்படும் மலைப்பாம்பு சிற்றினம் ஆகும். இது ஒரு அகணிய உயிரி.இது 390 m (1,280 அடி) உயரத்தில் உள்ள எடகான் மியாங்கில் சேகரிக்கப்பட்ட ஒற்றை மாதிரி அடிப்படையில் அறியப்படுகிறது. இது 2012 முதல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

வகைப்பாட்டியல்[தொகு]

பைதான் கியாக்தியோவை முதன்முதலில் ஜார்ஜ் ஆர். ஜக், ஸ்டீவ் டபிள்யூ. கோட்டே மற்றும் ஜெர்மி எஃப். ஜேக்கப்சு ஆகியோர் 2002-ல் கியாக்தியோ வனவிலங்கு சரணாலயத்தில் சேகரிக்கப்பட்ட ஒரு பெண் மாதிரியின் அடிப்படையில் 2011-ல் விவரிக்கப்பட்டது. தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் போதுமான இடவேறுபாடு ஆகியவை இதன் அருகிலுள்ள புவியியல் இணையான இரத்த மலைப்பாம்பிலிருந்து வேறுபட்டது என்பதைக் குறிக்கிறது.[2]

விளக்கம்[தொகு]

மியான்மர் குட்டை வால் மலைப்பாம்பு ஒரு நச்சற்ற, உள்பொரி முட்டையிடும் 6 அடி (1.8 m) நீளம் வரை வளரக்கூடிய பாம்பு ஆகும். 2002-ல், ஒரு பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. 2011-ல், இது ஒரு புதிய இனமாகப் பெயரிடப்பட்டது. இதன் பின்னர் ஒரு சில மாதிரிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் இவற்றின் அளவு மற்றும் எடை பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. பொதுவான அம்சங்கள் காரணமாக, குட்டை வால் மலைப்பாம்பு குழுவின் மூன்று சிற்றினங்களுடன் இது தொகுக்கப்பட்டுள்ளன. மியான்மர் குட்டை வால் மலைப்பாம்பு அதிக எண்ணிக்கையிலான வயிற்றுப்புறச் செதில்களுடன் (180 அல்லது அதற்கு மேற்பட்டவை) வேறுபடுகிறது. பிடிபட்ட பெண் பாம்பு 152 cm (60 அங்) நீளம் உடையது. இதன் எடை 3.6 kg (7.9 lb) ஆகும். இதன் உடல் வெளிர் பழுப்பு நிறத்தில் துருப்பிடித்த நிறக் கோடுகளுடன் மேல் புள்ளிகளுடன் உள்ளது. இவை மென்மையான செதில்களுடன் முதன்மையாக நிலப்பரப்பில் வாழ்பவை. பெரும்பாலான மலைப்பாம்புகளைப் போலவே, கதிரியக்க வெப்பத்தில் வேறுபாடுகளை உணரும் முகக் குழிகளைக் கொண்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இவை இயற்கையாகவே சிவப்பு-பழுப்பு நிறத்தில் இருக்கும், அடர் பழுப்பு முதல் கருப்பு வரை புள்ளிகள் உடலின் முழு நீளத்திலும் காணப்படுகிறது.

பரவல்[தொகு]

பைத்தான் கியாக்தியோ மியான்மரின் மொன் மாநிலத்தில் உள்ள தொங்கியோ மலைத்தொடர் அகணிய உயிரியாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இது இப்பகுதியில் அரிதாகவே காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Wogan, G.; Chan-Ard, T. (2012). "Python kyaiktiyo". IUCN Red List of Threatened Species 2012: e.T199854A2614411. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T199854A2614411.en. https://www.iucnredlist.org/species/199854/2614411. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Zug, G. R.; Gotte, S. W.; Jacobs, J. F. (2011). "Pythons in Burma: Short-tailed python (Reptilia: Squamata)". Proceedings of the Biological Society of Washington 124 (2): 112−136. doi:10.2988/10-34.1. https://www.researchgate.net/publication/232683390.