மாளவிகா கிருஷ்ணதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாளவிகா கிருஷ்ணதாஸ்
பிறப்புஒற்றப்பாலம், கேரளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்தூய இருதயக் கல்லூரி, தேவாரா[1]
பணி
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
தேஜாஸ் ஜோதி (தி. 2023)
யூடியூப் தகவல்
ஒளிவழித்தடம்
செயலில் இருந்த ஆண்டுகள்2017–தற்போது வரை
காணொளி வகை(கள்)வாழ்க்கைமுறை, உந்துதல் பேச்சு, விலாக்சு
சந்தாதாரர்கள்777.00 ஆயிரம்
மொத்தப் பார்வைகள்341.5 மில்லியன்
100,000 சந்தாதாரர்கள் 2021

04 May 2023 அன்று தகவமைக்கப்பட்டது

மாளவிகா கிருஷ்ணதாஸ் ( Malavika Krishnadas ) ஓர் இந்திய நடிகையும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும் மற்றும் பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார். 2018 மலையாளத் தொலைக்காட்சியில் வேட்டை என்ற உண்மைநிலை நிகழ்ச்சியில் இரண்டாவது வெற்றியாளரானார். பிறகு, இவர் 2020 முதல் 2021 வரை இந்துலேகா என்ற தொலைக்காட்சித் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார்.[2][3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மாளவிகா ஓற்றப்பாலத்தில் உஷா என்ற இல்லத்தரசிக்கும், கிருஷ்ணதாஸ் என்ற தொழிலதிபருக்கும் மகளாகப் பிறந்தார். பட்டாம்பியில் வளர்ந்த இவர் தனது மூன்று வயதிலேயே பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற ஆரம்பித்தார்.[4]

தொழில்[தொகு]

அம்ருதா தொலைக்காட்சியில் சூப்பர் டான்சர் ஜூனியர் 2 என்ற தொலைக்காட்சி நடன உண்மைநிலை நிகழ்ச்சியி மூலம் மாளவிகா தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதில் இவர் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். மேலும், நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஏழாம் வகுப்பு பயின்ற போது இவர் தனது முதல் வளைகுடா நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நேரத்தில் தனது தந்தையை இழந்தார்.[5] பின்னர் இவர் ஏசியாநெட்டில் ஒளிபரப்பப்பட்ட மன்ச் டான்ஸ் டான்ஸ் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தார்.[6] இவர் கேரள மாநில கலோத்சவ நடனப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றார். பத்தாம் வகுப்பு படிக்கும் போது பரதநாட்டியத்தில் மாநில அளவில் முதல் பரிசை வென்றார். பாலக்காடு வாணியங்குளத்திலுள்ள ஒரு பள்ளியில் கல்வியை முடித்தார்.[7] பின்னர் இந்திய நடனக்கலைஞர்களான தனஞ்செயன் தம்பதியினரான தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்செயன் ஆகியோரிடம் பரதநாட்டியம் பயின்றார். இவர், தேவாரத்திலுள்ள தூய இருதயக் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.[8]

சின்னத்திரை[தொகு]

மழவில் மனோரமா என்ற தொலைக்காட்சி ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட நாயகி நாயகன் (2018) என்ற உண்மைநிலை நிகழ்ச்சியில் போட்டியாளராக மீண்டும் சின்னத்திரைக்குத் திரும்பினார். [9] [10] இந்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதில் இவர் இரண்டாவது வெற்றியாளரானார். மேலும் சிறந்த நடனக் கலைஞர் என்ற பட்டத்தையும் பெற்றார். [11] [12] அதே ஆண்டில் லால் ஜோஸ் இயக்கிய தட்டும்புரத் அச்சுதன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவர் ஒரு வலைத் தொடரான லைஃப் ஜோர் [13] மற்றும் மிழி ரண்டிலும் என்ற இசைத் தொகுப்பின் ஒரு பகுதியாக ஆனார்.

மழவில் மனோரமாவில் டி5 ஜூனியர் நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சித் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதில் இவர் நாயகி நாயகன் நிகழ்ச்சியின் இணைத் தொகுப்பாளரான வின்சி அலோசியசுக்கு பதிலாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.[14] பின்னர் இவர் சூரஜ் வெஞ்சரமூடுடன் இணைந்து ஜீ கேரளாவில் என்ற பொழுதுபோக்குத் தொலைக்காட்சியின் ஃபன்னி நைட்ஸ் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளரானார்.[15] [16] 2016 இல் சூர்யா தொலைக்காட்சியில் அம்மே மகாமாயே என்ற தனது முதல் தொடரில் நடித்தார். சூர்யா தொலைக்காட்சியில் இந்துலேகா என்ற தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்தார். [17]

சொந்த வாழ்க்கை[தொகு]

மாளவிகா 2023 இல் நயிகா நாயகன் என்ற நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்ற சக போட்டியாளரான தேஜஸ் ஜோதி என்பவரை மணந்தார் [18]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thevara SH college leads the race". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
  2. "Nayika Nayakan fame Malavika Krishnadas shares a throwback video with actress Samvritha Sunil". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  3. "'ഇന്ദുലേഖ വേറിട്ടൊരു സീരിയൽ, എല്ലാവർക്കും ഇഷ്ടാവും': വിശേഷങ്ങളുമായി മാളവികയും അമീനും!". Samayam (in மலையாளம்). The Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 October 2020.
  4. Nair, Lekshmi (11 February 2020). "ഇനി എന്ത് ചെയ്യും എന്ന് അറിയാത്ത അവസ്ഥ! ജീവിതത്തിൽ പകച്ച നിമിഷങ്ങളെ പറ്റി മാളവിക". Samayam (in மலையாளம்). The Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.
  5. #NayikaNayakan l Malavika in Aham round I Mazhavil Manorama. மழவில் மனோரமா. 28 August 2018. Event occurs at வார்ப்புரு:Time needed. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.
  6. "എന്നും അച്ഛനാണെന്റെ ഹീറോ, അമ്മയൊരു വില്ലത്തിയായിരുന്നു ; മാളവിക കൃഷ്ണദാസ്". Asianet News (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 12 February 2020.
  7. Ajithkumar, P.K (17 January 2015). "Palakkad takes narrow lead". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 17 January 2015.
  8. Shwetha MS, Anjitha S (24 December 2018). "Dancing beauty". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 24 December 2018.
  9. "വിഷുച്ചിത്രങ്ങൾ പങ്കുവെച്ച് മാളവിക; ഇൻസ്റ്റാഗ്രാമിൽ തരംഗം!". Samayam (in மலையாளம்). The Times of India.
  10. "Nayika Nayakan fame Vincy Aloishious recollects the Bigboss spoof Valiya Muthalaali". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  11. "Lal Jose crowns the winners of the show". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 October 2018.
  12. "Nayika Nayakan: Darsana, Shambhu win the coveted titles". On Manorama.
  13. "ജോറായി 'ലൈഫ് ജോർ'; മില്ല്യൺ കാഴ്ചക്കാരുമായി മഴവിൽ മനോരമയുടെ വെബ്‌സീരീസ്; വിഡിയോ". Manorama News (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
  14. "Adyarathri team have a blast on D5 junior". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
  15. "Pearle Maaney flaunts her baby bump; celebrates 14 weeks of pregnancy". The Times of India. 16 September 2020. பார்க்கப்பட்ட நாள் 18 April 2022.
  16. "Nayika Nayakan fame Malavika Krishnadas enjoys a jam session in makeup room". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  17. "Indulekha: Renji Panicker to make his acting debut in malayalam TV". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 1 October 2020.
  18. "Nayika Nayakan fame Thejus and Malavika Krishnadas tie the knot". The Times of India. 2023-05-03. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/nayika-nayakan-fame-thejus-and-malavika-krishnadas-tie-the-knot/articleshow/99962235.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாளவிகா_கிருஷ்ணதாஸ்&oldid=3896353" இலிருந்து மீள்விக்கப்பட்டது