வின்சி அலோசியசு
வின்சி அலோசியசு | |
---|---|
பிறப்பு | வின்சி பி. ஏ. 12 திசம்பர் 1995 பொன்னானி, கேரளம், இந்தியா |
கல்வி | கட்டிடக்கலையில் இளங்கலைப் பட்டம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆசிய கட்டிடக்கலை பள்ளி, கொச்சி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2019–தற்போது வரை |
வின்சி சோனி அலோசியசு ( Vincy Sony Aloshious ) (பிறப்பு 12 டிசம்பர் 1995) மலையாளத் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகையாவார். 2023 ஆம் ஆண்டு வெளியான ரேகா என்ற மலையாளத் திரைப்படத்தில் தலைப்புப் பாத்திரத்தில் நடித்ததற்காக 53வது கேரள மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]வின்சி அலோசியசு, வின்சி பி.ஏ என்ற பெயரில் 1995 டிசம்பர் 12 அன்று [2] கேரளாவின் மலப்புறத்தில் உள்ள பொன்னானியில் பிறந்தார். [3] இவரது தந்தை அலோசியசு ஒரு வாகன ஓட்டுநர். இவரது தாயார் சோனி ஒரு ஆசிரியர். இவரது சகோதரர் விபின் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். [4] இவர் தனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியை பிஷப் காட்டன் கான்வென்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவர் ஆசிய கட்டிடக்கலை பள்ளியிலிருந்து கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார். [5]
நடிப்பு
[தொகு]இவர் 2018 இல் நாயகி நாயகன் என்ற உண்மைநிலை நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளராக இருந்தார். [6] 2019 ஆம் ஆண்டு வெளியான விக்ருதி என்ற மலையாள நகைச்சுவை-நாடகத் திரைப்படத்தில், சௌபின் சாகிருக்கு இணையாக கதாநாயகிகளில் ஒருவராக இவர் அறிமுகமானார். [7] கனகம் காமினி கலஹம் (2021), பீமன்டே வாழி (2021) மற்றும் ஜன கண மன (2022) போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிற படங்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தார். [8] [9] [10]
வின்சி மழவில் மனோரமாவில் ஒளிபரப்பப்பட்ட நாயகி நாயகன் 2018 ஆம் ஆண்டு திறமை வேட்டை நிகழ்ச்சியின் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[11] [12] [13] நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து மஞ்சு வாரியருடன் கர்ப்பிணிப் பெண்ணாக ஒரு விளம்பரத்தில் தோன்றினார். [14] இவர் 2019 இல் மழவில் மனோரமாவில் D5 ஜூனியர் என்ற நடன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் [15]
திரை வாழ்க்கை
[தொகு]நாயகி நாயகனில் கிடைத்த வரவேற்பு [16] 2019 இல் இவரது திரைப்பட அறிமுகத்திற்கு வழிவகுத்தது, விக்ருதி படத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோருக்கு இணையாக முன்னணி பாத்திரத்தில் நடித்தார். [17] [18] இப்படம் இவருக்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது.
ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் இயக்கிய 2021இல் வெளியான கனகம் காமினி கலஹம் என்றா நையாண்டித் திரைப்படத்தில் வரவேற்பாளராக ஷாலினி என்ற வேடத்தில் நடித்தார்.[19]இப்படமும் இவருக்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது.[8]
2021 இல் வெளியானபீமண்டே வாழி இவரது இரண்டாவது வெளியீடாகும். இதில் இவர் குஞ்சாகோ போபனுடன் நடித்தார்.[20][21]
வலைத்தொடர்
[தொகு]அதே ஆண்டில் கரிக்கு என்ற யூடியூப்பில் ஒளிபரப்பட்ட கரிகாச்சி என்ற சிறு வலைத்தொடரில் தோன்றினார்.[22][23] 2022 ஆம் ஆண்டு வெளியான 'எமிலி' என்ற வலைத்தொடரின் தலைப்புக் கதாபாத்திரத்திலும் நடித்தார்.[24]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "53rd Kerala State Film Awards: Nanpakal Nerathu Mayakkam named Best Film; Mammootty, Vincy Aloshious, Mahesh Narayanan bag top honours". Indian Express. 21 July 2023. https://indianexpress.com/article/entertainment/malayalam/53rd-kerala-state-film-awards-nanpakal-nerathu-mayakkam-best-film-mammootty-vincy-aloshious-mahesh-narayanan-8851060.
- ↑ https://www.manoramaonline.com/movies/interview/2023/07/22/chat-with-vincy-aloshious-state-film-award-special.html
- ↑ https://www.onmanorama.com/entertainment/entertainment-news/2023/07/22/vincy-aloshious-kerala-state-film-awards-celebration.html
- ↑ "ഞാൻ ഫുൾ പ്രണയത്തിൽ". Kerala Kaumudi (in மலையாளம்). 1 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2 January 2022.
- ↑ "ഈ നടിയെ മനസ്സിലായോ?". The Indian Express (in மலையாளம்). 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 2 January 2022.
- ↑ Nair, Radhika (2 June 2020). "From a shy girl to a hottie, the transformation was indeed a miracle, says Vincy Aloshoius, Nayika Nayakan finalist". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 7 November 2021.
- ↑ Nair, Radhika (15 November 2021). "Did you know Vincy Aloshious started her career in TV?". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
- ↑ 8.0 8.1 ലക്ഷ്മി, സംഗീത (12 November 2021). "കനകവും കാമിനിയും ഉണ്ടാക്കിയ കലഹം ! | Kanakam Kaamini Kalaham Review". Mathrubhumi (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 12 November 2021.
- "Kanakam Kaamini Kalaham review: A funny ride". Sify. 12 November 2021. https://www.sify.com/vmovies/kanakam-kaamini-kalaham-review--a-funny-ride-review-malayalam-vlmgFUiaabehd.html.
- "Grace Antony is the true star of this unusual Nivin Pauly comedy that doesn't always deliver the goods". Latestly. 12 November 2021.
- "Kanakam Kaamini Kalaham movie review". Lensmen Reviews. 12 November 2021.
- "Kanakam Kamini Kalaham Review : An ensemble that is a mixed bag". The Times of India. 12 November 2021. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.
- "സ്ഥിരം ചായയില് നിന്ന് ഒരു മാറ്റമൊക്കെ വേണ്ടേ?, കനകം കാമിനി കലഹം kanakam kamini kalaham review". The Cue. 12 November 2021.
- "Kanakam Kaamini Kalaham movie review". Indian Express (in மலையாளம்). 14 November 2021.
- ↑ Ancy K Sunny. "'Jana Gana Mana' review: Suraj Venjaramoodu steals the show in a thought-provoking political thriller". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 May 2022.
- ↑ George, Arun (3 December 2021). "Kunchacko Boban's Bheemante Vazhi cuts a predictable path into an everyday issue". Onmanorama. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
- ↑ "Nayika Nayakan: Darsana, Shambhu win the coveted titles". On Manorama. 15 October 2018. பார்க்கப்பட்ட நாள் 7 November 2021.
- ↑ "Vincy Aloshious remembers her moment of entry in TV show 'Nayika Nayakan'; says 'That changed everything'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Lal Jose to give debuts for 'Nayika Nayakan' stars, film pooja held in Kochi". Onmanorama. 17 November 2021. பார்க்கப்பட்ட நாள் 23 November 2021.
- ↑ "കണ്ടോ ആരാണ് എന്റെ കൈ പിടിച്ചിരിക്കുന്നതെന്ന്; മഞ്ജുവിനൊപ്പം വിൻസി". Manorama Online (in மலையாளம்).
- ↑ "D5 Junior host Vincy Aloshious flaunts her positive side with a throwback picture; read post". The Times of India.
- ↑ "പാർവ്വതിയോട് ഇഷ്ടം; ഐശ്വര്യയോട് അസൂയ; 'വികൃതി' നായിക വിന്സി പറയുന്നു". Indian Express (in மலையாளம்).
- ↑ "'വികൃതി'യുമായി സൗബിനും സുരാജും" [Soubin and Suraj in 'Vikruthi']. Manorama Online (in மலையாளம்). 8 July 2019. பார்க்கப்பட்ட நாள் 12 November 2021.
- ↑ സന്തോഷവും സന്ദേശവും നൽകുന്ന ‘വികൃതി’; റിവ്യു
- ↑ P, Aswini (8 November 2021). "ഗ്രേസ് ആന്റണിയുടെ കൈയ്യില് നിന്നും കിട്ടിയ ആ അടി ഞാന് അര്ഹിക്കുന്നത് അല്ലായിരുന്നു; വിന്സി അലോഷ്യസ് പറയുന്നു". Samayam Malayalam (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 12 November 2021.
- ↑ "'ഭീമന്റെ വഴി'യിലെ പെണ്ണുങ്ങൾ വേറെ ലെവലാണ്; വിശേഷങ്ങളുമായി താരങ്ങള്". Malayalam Samayam (in மலையாளம்). The Times of India. 3 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2 January 2022.
- ↑ "Bheemante Vazhi review: This Kunchacko comedy is entertaining, but lacks depth". The news Minute. 10 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2 January 2022.
- ↑ "അൽപം വൈകിയെങ്കിലും അവരെത്തി, ക്രിസ്മസ് സ്പെഷ്യൽ 'കലക്കാച്ചി' വീഡിയോയുമായി കരിക്ക്". Indian Express (in மலையாளம்).
- ↑ "'അസാധ്യ നടന്, കലക്കി കലക്കാച്ചി', മേക്ക് ഓവറില് അനു.കെ അനിയനും, കരിക്ക് പുതിയ സീരീസിന് കയ്യടി". The Cue (in மலையாளம்).
- ↑ "EMILY | Part 1/2 | Malayalam Mini-Series | Survival Thriller | Vincy Aloshious | Shyam Mohan | HOMTEE". YouTube. 2 January 2022. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.