மழவில் மனோரமா
Jump to navigation
Jump to search
மழவில் மனோரமா என்பது மலையாள மனோரமா குழுமத்தின் மலையாள பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலாகும். மலையாள மனோரமா நாளிதழ், மலையாள பெண்கள் இதழான வனிதா ஆகியனவும் இந்த குழுமத்தின் பிற வெளியீடுகளாகும். இந்தியாவில் கேரளா மாநிலத்தில், பத்தனம்திட்டா மாவட்டம், அடூரில் மழவில் மனோரமாவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.[1]
இந்த சேனல் ஆகஸ்ட் 31, 2011 மாலை 6.30 மணியளவிலிருந்து தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. மனோரமா செய்திக் குழுமமானது ஏற்கனவே மலையாள செய்தி ஊடகமான மனோரமா நியூஸ் என்பதை நடத்தி வருகிறது.மழவில் மனோரமாவை அறிமுகப்படுத்தியதன் மூலம், இக்குழுமம் தனது ஊடக வணிகத்தை விரிவுபடுத்தியிருக்கிறது.