மாநிற சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Chordata
மாநிற சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. cervicolor
இருசொற் பெயரீடு
Mus cervicolor
காட்ஜ்சன், 1845

மாநிற சுண்டெலி (Fawn-colored mouse-மசு செர்விகாலர்) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது கம்போடியா, இந்தியா மற்றும் இந்தோனேசியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[2][3][4]

விளக்கம்[தொகு]

மாநிற சுண்டெலியின் வாழிடம், இரண்டாம் நிலை காடுகள், புல்வெளிகள், தூரிகைகள், நெல் வயல்கள் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 2000 மீ உயரத்தில் உள்ள மற்ற சாகுபடிப் பகுதிகள். இதன் உடல் நீளம் 70 முதல் 95 மி.மீ. வாலின் நீளம் 50 முதல் 70 மி.மீ. வரையும், காதின் நீளம் 13 முதல் 15 மிமீ வரையும் உடல் எடை 8 முதல் 17 கிராம் வரையுள்ள நடுத்தர அளவிலான எலியாகும். இதனுடைய உரோமங்கள் மென்மையானது. உரோமங்கள் முதுகில் ஆரஞ்சு-பழுப்பு நிறத்திலிருந்து சாம்பல் நிறம் வரையிலும், வயிற்றுப்பகுதியில் வெண்நுரை நிறத்திலிருந்து சாம்பல் நிறமாக மாறுபடும். இதன் பாதங்கள் வெள்ளை நிறத்தில் சிறியவையாக உள்ளது.[5][6]

உணவு[தொகு]

இதன் உணவில் விதைகள் மற்றும் பூச்சிகள் உள்ளன.

இனப்பெருக்கம்[தொகு]

மூன்று வாரக் கர்ப்பத்திற்குப் பிறகு, பெண் சுண்டெலி 5 முதல் 6 குட்டிகளை ஈணும். இவை 21 நாட்களுக்குப் பிறகு பாலூட்டப்படுகின்றன.

மாநிற சுண்டெலி இரவாடுதல் வகையின. இவை மிகவும் சுறுசுறுப்பானவை. இவை வளைகளை அறைகளுடன் மண்ணில் துளைகளைத் தோண்டி அமைக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Aplin, K.; Molur, S. (2016). "Mus cervicolor". IUCN Red List of Threatened Species 2016: e.T13957A22403025. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T13957A22403025.en. https://www.iucnredlist.org/species/13957/22403025. பார்த்த நாள்: 14 November 2021. 
  2. https://www.gbif.org/species/2438776
  3. Anonymous. 2023. Mus cervicolor Hodgson, 1845 – Fawn-coloured Mouse. A. Bayani, R. Chakravarty, P. Roy, and K. Kunte (editors). Mammals of India, v. 1.13. editors. http://www.mammalsofindia.org/sp/514/Mus-cervicolor
  4. Aplin, K.; Molur, S. (2016). "Mus cervicolor". IUCN Red List of Threatened Species. 2016: e.T13957A22403025. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T13957A22403025.en. Retrieved 14 November 2021.
  5. https://indiabiodiversity.org/species/show/238564
  6. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாநிற_சுண்டெலி&oldid=3637777" இலிருந்து மீள்விக்கப்பட்டது