உள்ளடக்கத்துக்குச் செல்

மனோஜ் குமார் ஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோஜ் குமார் ஜா
Manoj Kumar Jha
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை - பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2018
முன்னையவர்தர்மேந்திர பிரதான்
தொகுதிபீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 ஆகத்து 1967 (1967-08-05) (அகவை 56)
சகார்சா, பீகார்
தேசியம்இந்திய மக்கள்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கல்விஇளங்கலை (சமூகப்பணி), முனைவர்
முன்னாள் கல்லூரிபாட்னா கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம்
தொழில்பேராசிரியர்-தில்லி சமுகப்பணி பள்ளி, தில்லி பல்கலைக்கழகம்
As of சூலை, 2021
மூலம்: [1]

மனோஜ் குமார் ஜா[1] ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும், இராச்ட்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராகவும் உள்ளார். தற்போது இராச்ட்டிரிய ஜனதா தளத்தின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.[2] 15 மார்ச் 2018 அன்று, இவர் பீகார் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] ஜா 1992-ல் தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டத்தையும், 2000-ல் முனைவர் பட்டத்தையும் முடித்தார். இவர் தில்லி சமூகப் பணித் துறையில் பேராசிரியராகவும், 2014 மற்றும் 2017க்கு இடையில் இதன் தலைவராகவும் இருந்துள்ளார்.

தொழில்[தொகு]

தில்லி சமூகப் பணி பள்ளியில் சேருவதற்கு முன்பு 1994 முதல் 2002 வரை ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் சமூகப் பணித் துறையில் விரிவுரையாளராக இருந்தார். தில்லியில் உள்ள திட்டம் மற்றும் கட்டிடக்கலை பள்ளியில் வருகை தரும் ஆசிரியராகவும் இருந்தார். அரசியல் பொருளாதாரம் மற்றும் நிர்வாகம், சமூக நடவடிக்கை மற்றும் சமூக இயக்கங்கள், பெரும்பான்மை சிறுபான்மை உறவுகள் மற்றும் அமைதி மற்றும் மோதல் ஆய்வுகள் ஆகியவை இவரது ஆராய்ச்சி முக்கியத்துவத்தில் அடங்கும்.[4]

அக்டோபர் 2020-ல், இவர் தேஜஸ்வி யாதவின் முதன்மை அரசியல் ஆலோசகராக ஆனார் என்று தெரிவிக்கப்பட்டது.[5] சூலை 2021 மாநிலங்களவை அமர்வின் போது இவர் ஆற்றிய உரைக்குப் பிறகு மக்கள் மத்தியில் இவரது புகழ் அதிகரித்தது.[6] 4 பிப்ரவரி 2022 அன்று, மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரையை ஜா கடுமையாக விமர்சித்தார். மேலும் அனைத்து குடிமக்களின் கவலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் "பாகுபாடற்ற" உரைக்கு அழைப்பு விடுத்தார்.[7][8]

ஜா தி இந்து மற்றும் தி இந்தியன் எக்சுபிரசு[9] செய்தித் தாள்களில் சமூக-அரசியல் விவகாரங்கள் தொடர்பாகக் கட்டுரைகளை எழுதி வருகிறார். [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prof. Manoj Kumar Jha | National Portal of India". பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  2. "Manoj Kumar Jha". பார்க்கப்பட்ட நாள் 2022-02-09.
  3. "All six candidates elected unopposed to Rajya Sabha from Bihar". https://www.business-standard.com/article/news-ians/all-six-candidates-elected-unopposed-to-rajya-sabha-from-bihar-118031501062_1.html. 
  4. "RJD Leaders : Rashtriya Janata Dal". பார்க்கப்பட்ட நாள் 15 March 2018.
  5. "Manoj Jha becomes Tejashwi Yadav's principal political adviser". பார்க்கப்பட்ட நாள் 2022-02-09.
  6. This MP's Brutal Honesty Shook Parliament (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-02-09
  7. "Hero worship biggest threat to democracy: Opposition". பார்க்கப்பட்ட நாள் 2022-02-09.
  8. Professor Jha Schools Parliament One More Time (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-02-09
  9. "Manoj Kumar Jha" (in ஆங்கிலம்). 2017-07-03. பார்க்கப்பட்ட நாள் 2022-02-09.
  10. "Will Bihar impact the 2024 elections?". பார்க்கப்பட்ட நாள் 2023-09-07.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_குமார்_ஜா&oldid=3804997" இலிருந்து மீள்விக்கப்பட்டது