உள்ளடக்கத்துக்குச் செல்

மடகாசுகர் தோல்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மடகாசுகர் தோல்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. ocularis
இருசொற் பெயரீடு
Glareola ocularis
வெர்ரோக்சு, 1833

மடகாசுகர் தோல்குருவி (Madagascar pratincole-கிளேரியோலா அக்குலேரிசு) என்பது கிளாரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது கொமொரோசு, எத்தியோப்பியா, கென்யா, மடகாசுகர், மொசாம்பிக், சோமாலியா, தன்சானியா, மொரிசியசு மற்றும் ரீயூனியன் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல பருவகால ஈரமான அல்லது வெள்ளம் நிறைந்த தாழ் நில புல்வெளி, ஆறுகள், நன்னீர் ஏரிகள், பாறைக் கரைகள் மற்றும் இடைப்பட்ட சதுப்பு நிலங்கள் ஆகும். குளிர்காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரை பகுதிகளுக்கு வலசை செல்கின்றன.[2] இது கிளாரியோலா பேரினத்தில் மிகவும் அரிதான சிற்றினமாகும்.[2] இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

இதன் இனப்பெருக்க காலம் அக்டோபர் முதல் திசம்பர் வரை நீடிக்கும், நவம்பரில் உச்சத்தை அடைகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடகாசுகர்_தோல்குருவி&oldid=3866228" இலிருந்து மீள்விக்கப்பட்டது