மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி
Lesser yellownape Ghatgarh, Uttarakhand, India 06.10.2014.jpg
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: Piciformes
குடும்பம்: Picidae
பேரினம்: Picus
இனம்: P. chlorolophus
இருசொற் பெயரீடு
Picus chlorolophus
(Vieillot, 1818)

மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி(Lesser yellownape)இது ஒரு மரங்கொத்தி வகையாகும்,பொதுவாக ஆசியாவின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் காணப்படுகிறது,மேலும் இந்தியா இலங்கை,நேபாளம் பூட்டான், மியான்மார் ,தென் சீனா,தாய்லாந்து,கம்போடியா,சிங்கப்பூர்,வியட்நாம்,இந்தோனிசியா புருனே போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

பெயர்கள்[தொகு]

தமிழில் :மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி

ஆங்கிலப்பெயர் :Small Yellow – naped Wood pecker

அறிவியல் பெயர் : Picus chlorolophus [2]

பெண் மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி

உடலமைப்பு[தொகு]

27 செ.மீ. - மஞ்சள் தோய்ந்த பச்சை நிற உடலும் இறகுகளும் கொண்ட இதன் வால் பழுப்புத் தோய்ந்த கருப்பாக இருக்கும் மார்பு ஆலிவ் பழுப்பு நிறம் வயிறும் வாலடியும் வெண்மையும் பழுப்புமான பட்டைகள் கொண்டது.

காணப்படும் பகுதிகள் ,உணவு[தொகு]

மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பகுதிகளில் தேக்குக் காடுகளிலும் இலையுதிர் காடுகளிலும் காபி, ரப்பர் தோட்டங்களிலும் காணலாம். பிற மரங்கொத்திகளோடும், கரிச்சான், மின்சிட்டு, ஈப்பிடிப்பான், சிலம்பன்கள் ஆகியவற்றோடும் சேர்ந்து இரை தேடும். எறும்புகளும் கறையான்களுமே இதன் முக்கிய உணவு பழங்களையும் அவ்வப்போது தின்னும் 'சேங் என சோகங்கலந்த குரலில் அரைவினாடி முதல் ஒரு வினாடி வரை நீள ஒலிக்கும் மரத்தில் உளியை ஒத்ததான அலகால் தட்டித் தொடர்ந்து ஒலி எழுப்பவும் கேட்கலாம் பறக்கும்போது குரலொலி எழுப்புவதில்லை. [3]

இனப்பெருக்கம்[தொகு]

ஜனவரி முதல் மே வரையான பருவத்தில் காட்டு மரங்களில் வங்கு குடைந்து 2 முட்டைகள் இடும்.

கிளையினங்கள்[தொகு]

உத்தர்காண்ட் இந்தியா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Picus chlorolophus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. "Lesser_yellownape மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி". பார்த்த நாள் 16 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:97