சிலம்பன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

[1] Babble என்ற ஆங்கில வார்த்தைக்கு, தொணத்தொணவென பேசுதல் என்றொரு அர்த்தம் உண்டு. காரணப்பெயராகவே சிலம்பன்களை “Babblers” என்று அமைத்திருக்கக்கூடும். கீக்.. கீக்.. கீக் என்று பயங்கர சுறுசுறுப்புடன் குரலெழுப்பிக்கொண்டிருக்கும் பறவையினம் இது. காட்டுப்பகுதிகளிலும், புதர்கள் - செடிகள் அடர்ந்த இடங்களிலும் இப்பறவையைக் காணலாம். பழுப்பு நிறமே அனேக சிலம்பன்களின் பிரதான நிறம். இப்பறவைகளின் மற்றொரு குறிப்பிடத்தக்க குணாதிசயம், சிறு சிறு கூட்டமாகக் கூடி இரை தேடத்தொடங்கும். ஒரு கூட்டத்தில் 6 – 8 பறவைகள் வரை இருக்கும். பூனை போன்ற விலங்குகளை கூட்டமாகக் கூடி கத்தி கூச்சலிட்டு விரட்டிவிடும். சிலம்பன்கள், செண்பகம் () போல, அதிகளவில் குறிப்பிட்ட தூரம் ஃ உயரத்திற்கு மேல் பறக்காது. நம்மூர; சிலம்பன்கள், வலசை போகாத – ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளாகவே சுற்றிக் கொண்டிருக்கும் பறவை இனம். பெரும்பாலும், மணிக்குயில் (Greater Coucal) சிலம்பன்களின் கூட்டில் தான் முட்டையிடும். புழுக்கள், பூச்சிகளைப் பிரதான உணவாக உண்ணும்.

தவிட்டுக்குருவி[தொகு]

தவிட்டுக்குருவி

Yellow-billed Babbler Turdoides affinis வீடுகளுக்கு அருகிலும், மனித நடமாட்டம் இருக்கும் இடங்களிலும் சகஜமாக தவிட்டுகுருவியைப் பார்க்கலாம். சிலம்பன்களுக்கே உண்டான, சிறு சிறு கூட்டமாக... ட்ரி – ட்ரி – ட்ரி என்று குரலெழுப்பிக் கொண்டிருக்கும். வெளிறிய பழுப்பு நிற உடலையும் வெள்ளைநிற உச்சந்தலையும் கொண்டிருக்கும். அலகு வெளிர் மஞ்சள் நிறம். கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், நீலநிறம் கொண்ட கண்கள். சிறுசிறு கூட்டம் என்று பாரத்த்தோமே… பெரும்பாலும் ஏழு பறவைகள் ஒன்று சேர்ந்து திரியும். ஆதனால் இப்பறவைக்கு “ஏழு சகோதரிகள்.” என்று பெயரும் உண்டு.

காட்டு சிலம்பன்[தொகு]

Jungle Babblen

காட்டு சிலம்பன்

பார்ப்பதற்கு தவிட்டுச் சிலம்பனை உருவத்தில் ஒத்திருக்கும். ஆனால் நிறத்திலும் குரலிலும் அதிலிருந்து மாறுபட்டது. இச்சிலம்பன், வெளிறிய பழுப்பு நிற உடல் + மஞ்சள் அலகு, மஞ்சள் நிறக்கால்களையும் கொண்டிருக்கும். தவிட்டுக்குருவியின் வெள்ளை நிற உச்சந்தலையும் நீலநிறக் கண்களும் இதற்குக் கிடையாது. மாறாக மஞ்சள் நிறக் கண்களைக் கொண்டது. தவிட்டுக்குருவியைப் போலல்லாமல், கீக்-கீக்-கீக் என்று குரலெழுப்பும்.

வெண்தொண்டை சிலம்பன்[தொகு]

Tawny-bellied Babbler

வெண்தொண்டை சிலம்பன்

மற்ற இரண்டு சிலம்பன்களை விட உருவத்தில் சற்று சிறியது. கொஞ்சம் மலைப்பாங்கான இடங்களில் அதிகளவில் இப்பறவையைப் பார்க்கலாம். ஆரஞ்ச் + பழுப்பு கலந்த உடலும், வெளிறிய ஆரஞ்ச் நிற அடிவயிற்றையும் கொண்டிருக்கும். பெயருக்கேற்றார் போல, வெள்ளைநிறத் தொண்டையைக் கொண்டிருக்கும். தரைக்கு அருகாமையிலேயே, புதர்களில் கூடு கட்டும்.

கருந்தலை சிலம்பன்[தொகு]

Dark-fronted Babbler

கருத்தலை சிலம்பன்

கிட்டத்தட்ட வெண்தொண்டை சிலம்பன் அளவிற்கே இருக்கும் உச்சந்தலை முதல் பிடரி வரை கருப்பு நிறம். கழுத்து முதல் அடிவயிறு வரை நல்ல வௌ;ளை நிறம். மற்ற பாகங்கள் அடர;பழுப்பு நிறம். மஞ்சள் நிற கருவிழியைக் கொண்டிருக்கும். தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இப்பறவையைக் காணலாம்.

செஞ்சிலம்பன்[தொகு]

Rufous Babbler

செஞ்சிலம்பன்

தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இப்பறவையைக் காண முடியும். பெரும்பாலான சிலம்பன்கள் போல, புதர்களில் அதிகமாக நடமாடிக்கொண்டிருக்கும் கழுத்து முதல் அடிவயிறு வரை செஞ்சிவப்பு நிறமும், கண்களில் மஞ்சள் கலந்த வெள்ளை வளையமும் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாட்டு பறவைகள் முனைவர் க. ரத்னம். வெளியீடு மெய்யப்பன் பதிப்பகம்
  • சரவண கணேஷ் & கொழந்த. கா2 : கா ஸ்கொயர். https://docs.google.com/uc?id=0Bwum8gbunJGsYk1KZlNCUk8wZVk&export=download. 
  • "https://ta.wikipedia.org/w/index.php?title=சிலம்பன்கள்&oldid=2748780" இருந்து மீள்விக்கப்பட்டது