பொன்னுமணி
| பொன்னுமணி | |
|---|---|
| இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
| தயாரிப்பு | ஜே. பி. ராஜாரவி ஜெகதீஷ் |
| கதை | கோகுல் கிருஷ்ணா (வசனம்) |
| திரைக்கதை | ஆர். வி. உதயகுமார் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | கார்த்திக் சௌந்தர்யா சிவகுமார் |
| ஒளிப்பதிவு | அப்துல் ரகுமான் |
| படத்தொகுப்பு | பி. எஸ். நாகராஜ் |
| கலையகம் | தாய் சக்தி புரொடக்சன்சு |
| விநியோகம் | தாய் சக்தி புரொடக்சன்சு |
| வெளியீடு | ஏப்ரல் 16, 1993 |
| ஓட்டம் | 149 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
பொன்னுமணி என்பது 1993 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். வி. உதயகுமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், சௌந்தர்யா, சிவகுமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான இத்திரைப்படம் சிறப்பான வரவேற்பு பெற்ற வெற்றித் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படம், சென்னை, கோவை, மதுரை,திருநெல்வேலி, தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமாகும். இது ஆர். வி. உதயகுமார் - கார்த்திக் கூட்டணியின் இரண்டாவது வெற்றித் திரைப்படமாகும்.
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் எழுதியவை.
| எண் | பாடல் | பாடியவர்(கள்) |
|---|---|---|
| 1 | ஆத்து மேட்டுல | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
| 2 | ஆடிப் பட்டம் | மனோ |
| 3 | அடியே வஞ்சிக்கொடி | இளையராஜா |
| 4 | அன்பை சுமந்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
| 5 | நெஞ்சுக்குள்ளே இன்னாருனு | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
| 6 | நெஞ்சுக்குள்ளே இன்னாருனு (சோகம்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
| 7 | சிந்துநதி செம்மீனே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
விருதுகள்
[தொகு]கார்த்திக் இத்திரைப்படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.