பேவோ
பேவோ புதைப்படிவ காலம்:மியோசின் பிற்காலத்திலிருந்து தற்போது வரை | |
---|---|
![]() | |
இந்திய மயில் (பேவோ கிரிசுடேடசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
பிரிவு: | முதுகெலும்பி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | கல்லிபார்மிசு |
குடும்பம்: | பசானிடே |
பேரினம்: | பேவோ லின்னேயஸ், 1758 |
மாதிரி இனம் | |
பேவோ கிரிசுடேடசு (இந்திய மயில்) லின்னேயஸ், 1758 | |
சிற்றினம் | |

பேவோ (Pavo) என்பது பெசன்ட் குடும்பத்தில் உள்ள இரண்டு சிற்றினங்களைக் கொண்ட ஒரு பேரினமாகும். காங்கோ மயில்களுடன் இரண்டு சிற்றினங்களும் சேர்ந்து மயில் என்று அழைக்கப்படுகின்றன.
வகைப்பாட்டியல்[தொகு]
பேவோ வான்கோழிக்கான ஸ்பானிஷ் மொழியும் கூட. பேவோ பேரினமானது 1758ஆம் ஆண்டில் சுவீடன் இயற்கை ஆர்வலர் கரோலஸ் லின்னேயசால் சிஸ்டமா நேச்சுரேயின் பத்தாவது பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] பேரினப் பெயர் மயிலின் இலத்தீன் சொல்லாகும்.[2] இதன் மாதிரி இனம் இந்திய மயில் (பேவோ கிரிசுடேடசு) ஆகும்.[3]
சிற்றினங்கள்[தொகு]
இந்தப் பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன.[4]
ஆண் | பெண் | பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|---|
![]() |
![]() |
பேவோ கிரிசுடேடசு | இந்திய மயில் | தெற்காசியா; மற்ற இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது |
![]() |
![]() |
பாவோ மியூட்டிகசு | பச்சை மயில் | தென்கிழக்கு ஆசியா |
புதைபடிவ பதிவு[தொகு]
- பேவோ ப்ராவார்டி (பிராவார்டின் மயில்) (ஆரம்பக்காலம் – பிந்தைய பிளியோசீன்) – காலசு மோல்டோவிகசு, சில சமயங்களில் மோல்டாவிகசு என்று தவறாக எழுதுவது இணைச்சொல்லாக இருக்கலாம்[5]
- காலசு அசுகுலாபி, ஒரு பிந்தைய மியோசீன் - ஆரம்பக்கால பிளியோசீன் " காட்டுக்கோழி" கிரேக்க, மயில்களாகவும் இருந்திருக்கலாம்[5]
பிளியோசீனில் பால்கன் குடாவில் உள்ள, பிராவர்டின் மயில் பிடர்மிகன்களுடன் (லாகோபசு சிற்றினம்),[6] பால்கன் தீபகற்பத்திலும் தென்கிழக்கு ஐரோப்பாவிலும் பிலியோசீனின் இறுதி வரை பரவலாக வாழ்ந்தன.[7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Carl Linnaeus (1758) (in Latin). Systema Naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. 1 (10th ). Holmiae (Stockholm): Laurentii Salvii. பக். 156. https://www.biodiversitylibrary.org/page/727063.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 294.
- ↑ Check-List of Birds of the World. 2. Cambridge, Massachusetts: Harvard University Press. 1934. பக். 133. https://www.biodiversitylibrary.org/page/14482946.
- ↑ "Pheasants, partridges, francolins". International Ornithologists' Union. July 2021. https://www.worldbirdnames.org/new/bow/pheasants/.
- ↑ 5.0 5.1 Mourer-Chauviré, Cécile (1989). "A peafowl from the Pliocene of Perpignan, France". Palaeontology 32 (2): 439. https://www.palass.org/sites/default/files/media/publications/palaeontology/volume_32/vol32_part2_pp439-446.pdf.
- ↑ Boev, Zlatorar (1998). "Peafowls (g. Pavo Linnaeus, 1758) and Ptarmigans (g. Lagopus Brisson, 1760): an [sic] unique coexistance in North Bulgaria over 3 m. y. ago". - Biogeographia, Nuova Serie, Siena, 19 – 1997: 219-222. எஆசு:10.21426/B6110058
- ↑ Boev, Z. 2002. Fossil record and disappearance of peafowl (Pavo Linnaeus) from the Balkan Peninsula and Europe (Aves: Phasianidae). – Historia naturalis bulgarica, 14: 109-115.