பேச்சு:பறையர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இக்கட்டுரையிலிருக்கும் புகழ்பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர் வேறு சாதியினர். மேலும் திருவள்ளுவர், ஔவையார் போன்ற புலவர்கள் இச்சாதியினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரமில்லாத தகவல்களை இணைக்க வேண்டாம். இப்பட்டியலிலுள்ளவர்களை மறு பரிசீலனை செய்து சரியான தகவல்களுடன் புதுப்பிக்கலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:05, 13 பெப்ரவரி 2011 (UTC)
திருவள்ளுவரையும் அவ்வையாரையும் நீக்கி விட்டேன். நீங்கள் அறிந்த பிற சாதியர்களையும் நீக்கி விடுங்கள். --சோடாபாட்டில்உரையாடுக 05:00, 13 பெப்ரவரி 2011 (UTC)
மீண்டும் இணைக்கப்பட்டதால் நீக்கி இங்கு இடுகிறேன்.
திருக்குரளை எழுதியது திருவள்ளுவர் என்ற நபர் என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை. அனால் திரு வள்ளுவர் என்றழைக்க காரணம் அவர் வள்ளுவர் இனத்தை சார்ந்தவர் என்பதால். திருக்கரளை 1000 வருடங்களாக கட்டி காப்பாற்றி வருபவர்கள் வள்ளுவ பறையர்கள். இன்னமும் தமிழகத்தில் வள்ளுவ பறையர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சோதிடம் புலமை போன்றவற்றை பெற்றுள்ளனர். வள்ளுவர் என்ற பெயரோ பட்டமோ இந்திய நிலப்பரப்பில் வேறு எந்த சாதிக்கும் இல்லை என்பது இங்கே குறிப்பிடப்பட விரும்புகின்றேன். சமகாலத்தில் நம்மிடம் இருக்கும் திருக்குரளை அளித்தவர் அயோத்தி தாச பண்டிதரின் குடும்பம். அவர் பறையர் என்பது குறிப்பிடத்தக்கது.user:Rkaartikeyan
Encyclopedia of Global Studies என்ற புத்தகம் பக்கம் 1290-ல் திருவள்ளுவரும் ஒளவையாரும் பறையர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டு திருவள்ளுவரையும் ஒளவையாரையும் இந்த பக்கத்தில் சேர்க்கின்றேன்.user:Rkaartikeyan
சான்று தேவை எனக் கேட்டிருக்கிறேன். மேலும், எவ்வித ஆதாரமுமில்லாத பட்டியல் முழுமையையும் நீக்கி விடலாம் என்பது எனது கருத்து.--Kanags \உரையாடுக 10:32, 13 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

வில்லி குலப்பறையர்கள் பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் சேர்க் வேண்டும்.

ஈழத்தில் பழங்குடி மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வு மற்றும் அவர்களின் வரலாற்றை பற்றி சொல்லும் ஒரு நூல் வையாப்பாடல் அந்த நூலில். அடங்காப்பதம் என்ற பகுதியில் அணுக்கேனியில் அரசு செலுத்திய வில்லிகுலப்பறையர்கள் பற்றியும். அடங்காப்பதத்தில் அரசு செலுத்திய நான்கு அரசுகளை அடக்க வன்னியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களால் அடங்காப்பதத்தில் இருந்த வில்லிகுலப்பறையர்கள் உட்பட நான்கு அரசுகளும் வீழ்த்தப்பட்டன என்ற வரலாற்று குறிப்பு உள்ளது. ஆக இதை பதிவேற்றம் செய்ய விரும்புகின்றேன்.

வையப்பாடலில் இரண்டில் வில்லிகுலப்பறையர்கள் பற்றிய தகவல்கள் வருகின்றன... அவை

கள்ளவிழுங் கணுக்கேணி நகரைக் காத்த காவலவன் வில்லிகுலப் பறைய னன்போ (பாடல் 34) [1]

மேன்மையுடன் கணுக்கேணி நகரிற் சென்று தாற்றுடைய பறையர்தமைச் செயித்துத் தானே (பாடல் 41) [2]

காவல் பறையன் பற்றிய குறிப்புகளை சேர்க்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலயத்தில் உள்ள காவற்ப்பறையன் என்ற பறையரைப்பற்றிய தகவல்கள் சேர்க்க வேண்டுகின்றேன். இந்த ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அது காடாக(புன்செய் நிலமாக) இருந்ததாகவும் அந்த நிலத்தை காப்பாற்றியவன் காவல் பறையன் என்றும். புற்று ஒன்றை வெட்ட எத்தனித்த வேளையில் அதில் இருந்து பாம்பும் லிங்கமும் வந்ததாகவும் அதைத்தொடர்ந்து மணலூர் அரசன் உக்கிரபாண்டியன் அங்கு ஆலயம் எழுப்பியதாகவும் வேங்கடம் முதல் குமரி வரை எனும் நூலில் பக்கம் 176-ல் எழுதப்பட்டுள்ளது.

ஆக இந்த வரலாற்று தகவல் மூலம் பறையர்கள் மருதநிலத்திற்க்கு முன்பே புன் செய் நிலங்களை கட்டிக்காத்தவர்கள் விவசாயக்குடிகள் என்பதை உணர முடியும்.

கல்வெட்டில் தலித் என்று இல்லை

இந்த பக்கத்தில் எதிர்க்குரல் என்ற பகுதியில் கல்வெட்டில் தலித்துக்கள்(தம்மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தலித்துக்கள் கிளர்ந்து எழுந்தமையை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன) எதிர்க்குரல் கொடுத்ததாக எழுதப்பட்டுள்ளது. மேலும் பறையர் குடியிருப்பு என்ற பகுதியில் தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 26 எண் 686-ல் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை என்று உள்ளதாக தவறாக எழுதப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டில் தலித் என்ற வார்த்தை இல்லை.

அந்த இரண்டும் தவறு ஆக தலித் என்ற வார்த்தைக்கு பதிலாக பறையர் என்பதை சேர்க்கின்றேன்.

அட்டவணை சாதியினரை தலித் என்று அழைக்கக்கூடாது

அட்டவணை சாதியினரை தலித் என்று அழைக்கக்கூடாது என அட்டவணை சாதியினருக்கான தேசிய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த செய்தி 19-0 1-2008 தினகரன் நாளிதழில் வெளிவந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பறையர்கள் அட்டவணை சாதி பிரிவில் வருவதால் பறையர் குடியிருப்பு என்ற பகுதியில் தலித்துகளும் விதிவிலக்கல்ல என்று வருகின்றது ஆக அதை பறையர்களுக்கு என்று மாற்றம் செய்கின்றேன்.

மேற்கோள்கள்

  1. http://www.noolaham.net/project/02/151/151.htm
  2. http://www.noolaham.net/project/02/151/151.htm

சேரி

பறையர் குடியிருப்பு என்ற பகுதியில் உள்ள இந்த வரி "அழுக்குத் தெரு என்ற பொருளைத் தரும் Slum என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான சொல்லாகவே சேரி என்ற சொல் இன்று பயன்படுத்தப்படுகிறது." நீங்கப்படவேண்டியது, ஏன் என்றால் சேரி என்ற பெயர் அழுக்கான குடியிறுப்பு என்று இன்று பயன்படுத்தப்படுகின்றது என்பதை ஏற்க்க முடியவில்லை, காரணம் பாண்டி சேரி முதற்க்க்கொண்டு இன்று சில சேரிகள் வழக்கில் உள்ளன. எனில் பாண்டிச்சேரி என்பது அழுக்கான குடியிருப்பு என்று பொருள் கொள்ள இயலுமா?

யாதொரு மறுப்பும் இல்லாததால் சேரி பற்றிய தவறான தகலை நீக்குகின்றேன் :)

தரவுகள் இல்லாத விசயங்கள்

இச்சமூகக்குழுவினது பெயர் "பறை" என்பதில் இருந்து தோன்றியதாகும். இவர்களது முக்கியத் தொழிலாக காணப்பட்ட பறையறிவித்தல் காரணமாக இப்பெயர் வழங்கியது. தமிழ் இலக்கியங்கள் இவர்களை பறை முழங்கும் குழுவாக இனங்காட்டுகிறது. சங்க இலக்கியங்களில் பறையர், பறை முழங்கும் மக்கள் குழுவினரிடயே காணப்பட்ட விசேட குழுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்க்கு ஆதாரங்கள் உள்ளதா? எந்த சங்க இலக்கியத்தில் பறைர்கள் பறை முழங்கும் குழுவாக சொல்லப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் பறையூர் நான் மறையோன் கூத்தன் சாக்கையன் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக பறையூரில் வசித்த பறையர்கள் நான் மறை ஓதியவர்கள் என்றும் அவர்களிள் சிவனாடிய கொட்டி சேததத்தை ஆடிய கூத்தர்கள் இருந்தனர் என்றும்தானே கருத வாய்ப்புள்ளது.

எந்த சங்க இலக்கியத்தில் பறையர்கள் பறை முழங்கும் குழுக்களிடையே வாழ்ந்த விசேட குழுவினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது? அந்த சங்க இலக்கியம் எது? எந்த பாடல்?

ஆக தரவுகள் இல்லாமல் இருக்கும் இவற்றை நீக்குகின்றேன்.

தகுந்த வார்ப்பு இட்டு, தொகுத்தவர் மறுமொழிக்குக் காத்திருங்கள். நீக்க வேண்டாம். --AntanO 10:11, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

இதை வேறு மாதிரியாக தீர்க்கலாம். முதலில் பள்ளர் கட்டுரையில் அவர்கள் அடையாளப்படுத்தப்படும் எஸ்.சி. என்ற சொல்லை வைத்து குறிப்பிட்டிருந்தனர். பின்னர் நான் பள்ளர் இருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பட்டியலையும் சேர்த்து அந்த எஸ்.சி. அன்ற அடையாளப்படுத்தலை நீக்கினேன். அதே போல் இதில் பறையரில் இருக்கும் உட்பிரிவான சாம்பவர் பெயரை வைத்து பறை அடித்தல் என்று அடையாளப்படுத்தலை நீக்கலாம்.

ஒரு தவறான அடையாளப்படுத்தலை சரியாக மாற்றுவது எப்படி என்று அறிய எடுத்துக்காட்டுக்கு சமணம் கட்டுரை உள்ளடக்கங்களை எடுத்துக்கொள்ளலாம்.

//கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சிலக்குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே ஜைனத்தை மட்டும் குறிக்க பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஜைனர்களால் எழுதப்பட்ட நிகண்டுகளில் கூட சாவகர், அருகர், ஆசீவகர் மூவரையுமே சமணர் என ஜைன ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். அதனால் சமணம் என்பது இந்தியாவில் தோன்றிய பழைய இறைமறுப்புக் கொள்கைகளை சமணம் என்ற பொதுப்பெயரில் அடையாளப்படுத்தும் சொல்லாகும்.//--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:17, 4 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

அடிமை முறை

மேலும் சேதுபதி மன்னர் ஆட்சிக்குட்ப்பட்ட பகுதியில் மட்டும் பறையர்களும் பள்ளர்களும் அவர்கள் வேளை செய்த நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். பண்ணை அடிமைகளாக நிலத்தோடு சேர்த்து கொடுக்கப்பட்ட தகவலை தொழில் என்ற பிரிவில் இருந்து நீங்கி பொருளாதார நிலையில் சேர்க்கின்றேன் அடிமையாக இருப்பது தொழில் அல்ல.

வெலிகமையிலும் பறையர் என்றொரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்களே மேளக்காரர்களாக உள்ளனர். அவர்களில் நன்கறியப்பட்ட சித்திரக் கலைஞர்களும் சிற்பிகளும் இருக்கின்றனர். அவர்களைச் சேர்ந்த சிற்பிகள் இன்றும் இலங்கையின் பல்வேறு இடங்களில் சிற்ப வேலைகளுக்காக அழைக்கப்படுகின்றனர். நாம் அவர்கள் வாழும் பகுதியைப் பறையசல் என்கிறோம். பறையயல் (பறை + அயல் (neighbourhood)) என்பது எமது மக்களின் பேச்சு வழக்கில் மருவி பறையசல் ஆகியுள்ளது.--பாஹிம் (பேச்சு) 11:14, 19 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

மேற்கோள் சுட்டுதல்

@Rkaartikeyan: இக்கட்டுரையில் விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் முறையாக இல்லை. முறையாக மேற்கோள் சுட்டவும். இங்குள்ள தகவல்கள் வலிந்து கொடுக்கப்படுவது போன்று உள்ளது. மேலும், கல்வெட்டுக்கள் முதன்மை ஆதாரமாக இருப்பதால் சிக்கல் மிகுந்த பகுதிகளுக்கு, நம்பகமான மூலஙகளில் இருந்து இணைப்பு வழங்கவும். தவறும் பட்சத்தில் சிக்கலான பகுதிகள் நீக்கப்படும். --AntanO 14:26, 19 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]


@AntanO: எந்த பகுதி என்று சரியாக குறிப்பிட்டால் மேற்க்கோளை சரியாக காட்ட வசதியாக இருக்கும். கல்வெட்டுக்களை முதன்மை ஆதாரமாக காட்டக்கூடாது என்பது விக்கி மேற்க்கோள் காட்டும் வரையறையில் உள்ளதா என்பதை நான் எங்கு படிப்பது? உதாரணத்திற்க்கு 1881-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "CENSUS OF BRITISH INDIA" என்ற நூலில் "வேட்டுவ பறையன்", "திகிழு பறையன்", "மொகச பறையன்", "குடிமி பறையன்", "அத்வைத பறையன்" உட்பட "தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசிய" 83 பரையர் உட்பிரிவுகளை குறிப்பிடுகின்றது என்று குறிப்பிட்டுள்ளேன். இதற்க்கு மேற்க்கோளாக எதைக் காட்டுவது??? அந்த புத்தகத்தின் பெரை சொல்லிவிட்டேன் அப்புத்தகமானது இந்தியாவின் மத்திய அரசு ஆவண இணையதளத்தில் கிடைக்கின்றது நீங்கள் வேண்டுமானால் தரவிறக்கம் செய்து சரி பார்த்துக்கொள்ளலாம்.

மேலும் கல்வெட்டுக்களை நேரடியாக யாரும் முதன்மை ஆதாரகமாக காட்ட முடியாது! ஏன் என்றால் கல்வெட்டுக்களை படியெடுத்து அதை நடைமுறை மொழியில் விளக்கம் சொல்லப்பட்ட நூல்கள் தான் தென் இந்திய கல்வெட்டுக்கள். ஆக அந்த புத்தகத்தில் இருந்துதான் கல்வெட்டுக்களை மேற்க்கோளாக காட்டி இருக்கின்றேன்.

சிக்கல் மிகுந்த அந்த பகுதி எது என்று நீங்க சொன்னால் அதைப்பற்றி விவாதிக்க வசதியாக இருக்கும். பெரும்பாலும் தென் இந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலையும் தென் இந்திய கல்வெட்டுகள் முதற்க்கொண்டு சில மாவட்ட கல்வெட்டுக்களை படி எடுத்து நடைமுறை தமிழில் விளக்கம் கொடுத்த புத்தகங்களையும் மேற்க்கோளாக காட்டி இருக்கின்றேன். அந்த புத்தகங்கள் இந்திய ஆவண காப்பக இணைய தளம், மற்றும் தமிழக தொல்லியல் துறை இணையதளங்களில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

நான் சொல்ல வரும் கருத்திற்க்கு மூல ஆதாரம் இவை என்பதுதானே மேற்க்கோள் காட்டுவது? பரையர்கள் பூசகர்களாக இருந்தனர், பரையர்கள் மன்றாடிகளாக இருந்தனர் என்று நான் எழுதியதற்க்கு ஆதாரமாக அப்படி உள்ள கல்வெட்டுக்களை மேற்க்கோள் காட்டி இருக்கின்றேன்.

பரையர்கள் வெள்ளாளர் மற்றும் காமிண்ட பட்டம் உடையவர்கள் என்று எழுதியதற்க்கு மூல ஆதாரமாக கோயம்பத்தூர் மாவட்ட கல்வெட்டுக்கள் என்ற அரசு வெளியிட்ட புத்தகத்தில் உள்ள ஆதாரங்களை மேற்க்கோள் காட்டி இருக்கின்றேன்.Rkaartikeyan (பேச்சு) 16:11, 19 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

எடுத்துக்காட்டுக்கு இங்கு கவனிக்க வேண்டிய விடயம்

  1. பறையர் சொல் கல்வெட்டில் மன்றாடி என்ற பெயரோடு இடம்பெற்றும் கல்வெட்டு அறிக்கையிலேயே பறையர்கள் மன்றாடிகளாய் இருந்தனர் எனவும் குறிப்பிடப்படிருந்தால் அவற்றை தரலாம்.
  2. மாறாக கல்வெட்டு அறிக்கையிலுள்ள வரிகளில் மட்டும் பறையர் சொல்லோடு மன்றாடி சொல்லும் இருந்து ஆனால் அறிக்கையில் பறையர் மன்றாடிகளாய் இருந்தனர் என்று சொல்லாமல் விட்டால் அவற்றை ஏற்றுவது கிடையாது.

மற்றொரு வழியும் உண்டு.

  1. கல்வெட்டு அறிக்கையிலுள்ள வரிகளில் மட்டும் பறையர் சொல்லோடு மன்றாடி சொல்லும் இருந்து ஆனால் அறிக்கையில் பறையர் மன்றாடிகளாய் இருந்தனர் என்று சொல்லாமல் விட்டிருக்கலாம். அப்போது கல்வெட்டு அறிக்கை முதனிலைச்சான்றாகக் கொள்ளப்படும். அப்போது இரண்டாம் நிலைச்சான்றுக்கு அதாவது பறையர் மன்றாடியராக இருந்தனர் என்று வழியுறுத்துவதற்கு துறை சார்ந்த வல்லுநரின் மேற்கோளை காட்டலாம்.
  2. சில சமய்ம் கல்வெட்டு அறிக்கையில் ஒருவாரும் அதை ஆய்ந்து எழுதிய மற்றொரு நூலிலும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். அப்போது இரண்டு கருத்துகளும் இடம்பெறவேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:50, 21 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பறையர்&oldid=3528130" இலிருந்து மீள்விக்கப்பட்டது