பேச்சு:தமிழர் வரலாற்றுக் காலக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png தமிழர் வரலாற்றுக் காலக்கோடு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

அண்டன், தமிழகத்தின் இரும்புக்காலம் கட்டுரையை பார்க்கவும். தமிழகத்தில் இரும்புக்காலம் கி.மு. 2000 போதே தொடங்கிவிட்டது. அதன்படி பார்க்கையில் பெரும்கற்காலம் அதற்கு முன்னும் புதிய கற்காலம் அதற்கும் முன்னே தோன்றியதை அறியலாம். அதனால் அப்டேட் வார்ப்புருவை இடுகிறேன். தவறிருந்தால் பொருக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:26, 27 ஏப்ரல் 2012 (UTC)

அதே சமயம் மேற்கோள்களும் அதிகம் சேர்க்கப்படவேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:40, 27 ஏப்ரல் 2012 (UTC)

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே மொழிபெயர்த்தால் சில விடயங்களைக் கவனிக்கத் தவறிவிட்டேன். சரியான தகவல்களை எங்கிருந்து பெறலாம்? மற்றவர்களின் ஆலோசனையையும் எதிர்பார்க்கிறேன். --Anton (பேச்சு) 13:08, 27 ஏப்ரல் 2012 (UTC)
{{Update}} வார்ப்புருவை நடப்பு நிகழ்வுகள், மாறும் தரவுகளைக் கொண்ட கட்டுரைகளுக்கு இடுவது பொருத்தமாக இருக்கும். இருக்கும் தகவல்களை மாற்ற / சரி பார்க்க வேறு பொருத்தமான வார்ப்புரு இடல் வேண்டும்--இரவி (பேச்சு) 13:52, 27 ஏப்ரல் 2012 (UTC)
சிக்கலான கால அட்டவணை. தமிழக வரலாறு மட்டும் அல்லாமல் பல்வேறு வரலாறுகள் சேர்ந்து, தொடர்புபடுத்தப்பட்டு தொகுக்கப்பட வேண்டும். ஆனால் நிச்சியமாக தேவையான ஒன்று. --Natkeeran (பேச்சு) 17:20, 27 ஏப்ரல் 2012 (UTC)

அப்டேட் வார்ப்புருவை விட தற்போதுள்ள வார்ப்புரு பொருத்தமாக உள்ளது. அண்டன் இதை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்திருப்பதாக கூறியுள்ளதால் அந்த ஆங்கில கட்டுரை பழய புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். தற்போது கிடைத்துள்ள ஆய்வுத்தகவல்களை சேர்த்தல் வேண்டும். அண்டன் எழுதியுள்ளது அலெக்சாண்டர் ரீ செய்த ஆய்வுகளாக இருக்கலாம். அதை மூலமாகக் கொண்டே அடுத்து வந்தவர்கள் தமிழகத்தின் இரும்புக்காலத்தை 4000 வருடங்கள் பழமையானது என எடுத்துச் சென்றனர். இரும்புக்காலம் பற்றி தெளிவாக தெரிந்தாலும் கற்காலங்கள் பற்றி நடந்த புதிய ஆய்வுகள் பற்றி தெரியவில்லை. பண்டைய தமிழகம் என்றொரு புத்தகமுள. அதை இன்று நூல்கத்திலிருந்து எடுத்து கற்கால தகவல்களை இணைக்கிறேன். அதே சமயம் தலையலங்கான நெடுஞ்செழியன் காலம் பற்றி பல மறுப்பு வாதங்கள் உள்ளன. அதனால் அதைப் போன்ற மன்னர்களின் ஆட்சிக்காலங்களை குறிப்பிட வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:09, 28 ஏப்ரல் 2012 (UTC)

தலைப்பை தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 11:20, 28 ஏப்ரல் 2012 (UTC)
கால அட்டவணை என்பது time table என்று எண்ண இடமளிக்கும். தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பதே பொருத்தமான தலைப்பு. --எஸ்ஸார் (பேச்சு) 13:33, 28 ஏப்ரல் 2012 (UTC)
Yes check.svgY ஆயிற்று--Anton (பேச்சு) 14:50, 18 ஏப்ரல் 2012 (UTC)


தலைப்புக்கள்[தொகு]

இங்குள்ள தலைப்புக்களை மாற்றி அமைத்துள்ளேன். இவற்றில் முக்கிய பகுதிளை உள்ளடக்கிய பின் மேலதிக தகவல்களை கவனிக்கலாம் என நினைக்கிறேன். --Anton (பேச்சு) 14:42, 28 ஏப்ரல் 2012 (UTC)

பிரதான வேலைகள் அநேகமானவற்றை முடித்துவிட்டேன். இந்த தலைப்புகள் மற்றும் உள்ளடக்கம் பற்றி கருத்துக்கள் வேண்டப்படுகின்றது. அதன் பின்பு தொடர்ந்து செய்வது இலகுவாக இருக்கும். --Anton (பேச்சு) 08:38, 29 ஏப்ரல் 2012 (UTC)


சோழர் காலம்[தொகு]

இக்கட்டுரையில் உள்ள சோழர் காலமும் சோழர்#சோழப் பேரரசின் வீழ்ச்சி இங்குள்ள சோழர் காலமும் வேறுபடுக்கின்றது. ஆதாரம் தேவை. --Anton (பேச்சு) 14:54, 28 ஏப்ரல் 2012 (UTC)

சோழர் பேரரசர் நிலையில் இருந்து தாழ்ந்தை சோழப்பேரரசு வீழ்ச்சி என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுளது. இக்கட்டுரையில் சோழர் ஒட்டுமொத்த்மாக அவ்விணமே அழிக்கப்பட்டதை கூற்ப்பட்டுள. இரண்டும் சரியே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:40, 28 ஏப்ரல் 2012 (UTC)
Face-wink.svg நன்றி!

இந்தியா, இலங்கை, குடியமர்த்தல்கள், குடிபெயர்ப்புகள்[தொகு]

மிக பயன்தரும் ஒரு தொகுப்பு. தற்போது வேகமாக வேலை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்று தெரிகிறது. எனினும் இதில் ஒரு முக்கிய விடயத்தை சுட்ட விரும்புகிறேன். தற்போதைய காலக் கோடு (பெரும் பகுதிகள்) இந்திய மையப் பார்வையாகவே வெளிவருகிறது. இலங்கைத் தமிழ் மன்னர்கள் அரசுகள் பற்றிய செய்திகள் முதன்மையாக இடம்பெறவில்லை. மலேசியாத் தமிழர்களின் முக்கிய நிகழ்வுகள், அவ்வாறே தென்னாப்பிரிக்கா என்று பல சேர்க்கப்பட வேண்டும். சிக்கலானது என்பதை அறிவேன். பல வரலாற்றுக் கோடுகளைத் தனித் தனியாக உருவாக்குவது தீர்வாக அமையுமா என்பதைச் பரிசீலிக்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 03:36, 29 ஏப்ரல் 2012 (UTC)

ஆங்கில மூலம் இந்திய மையப் பார்வையை பெரும்பகுதியாக கொண்டிருந்ததால் அதன் தாக்கம் இங்கேயும் பிரதிபலிக்கிறது. நீங்கள் சுட்டிக்காட்டிய பகுதிகளையும் நிச்சயம் உள்வாங்கிவிடலாம். இதை ஒரு மூலமாக வைத்துக் கொண்டு, வேண்மானால் தனித்தனியான, விபரமான வரலாற்றுக் கோடுகளை உருவாக்குவது பயனுள்ளதாக இருக்குமென்பது என் கருத்து. --Anton (பேச்சு) 04:11, 29 ஏப்ரல் 2012 (UTC)
தனித்தனிப் பக்கங்களாக உருவாக்கலாம். இதனையும் உசாத்துணையாகப் பாருங்கள்--Kanags \உரையாடுக 08:52, 29 ஏப்ரல் 2012 (UTC)
நன்றி. மிக முக்கியம் என கருதியவற்றை சேர்த்துவிட்டேன். தேவையானவற்றைச் சேர்த்துவிடுங்கள். --Anton (பேச்சு) 09:42, 29 ஏப்ரல் 2012 (UTC)

கட்டுரைகளை இணைக்கலாமா[தொகு]

தமிழக வரலாற்றுக் காலக்கோடு இக்கட்டுரை இதற்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டதை தற்போதே அறிந்தேன். ஆனால் பழைய கட்டுரையை விட இதில் தகவல்கள் அதிகம். மேலும் பழய கட்டுரையில் தமிழக என்று போட்டுவிட்டு சிந்துவெளி நாகரிகம் என்று குறிப்பிட்டுள. அதனால் பழய கட்டுரையான தமிழக என்பதை விட தமிழர் என்ற தலைப்புள இக்கட்டுரை பொருந்தும். மற்றவர்கள் கருத்து தேவை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:49, 22 மே 2012 (UTC)

தனித்தனிப் பக்கங்களாக உருவாக்கும் எண்ணம் இருப்பதால் தமிழக வரலாற்றுக் காலக்கோடு கட்டுரையினை இன்னும் அதிக விபரங்கள் கொண்ட கட்டுரையாக மாற்றினால் என்ன? --Anton (பேச்சு) 02:49, 23 மே 2012 (UTC)

தனியாக ஆக்க வேண்டும் என்றால் இங்கு தமிழர் பற்றி (நாயக்கர், முகலாயர் எல்லாம் தமிழகத்துக்கு கொண்டு செல்லவும்) மட்டும் இருக்குமாறும் தமிழக கட்டுரையில் (இலங்கைத் தமிழர், மலேசியத் தமிழர், சிந்துவெளி எல்லாம் தமிழர் கட்டுரையில் இருக்க வேண்டும்) தமிழக ஆண்ட அனைவரையும் வேற்று நாட்டவராய் இருந்தாலும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:16, 23 மே 2012 (UTC)

முதற்பக்கச் சுருக்கம் தேவை[தொகு]

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 8, 2012 பக்கத்தில் இக்கட்டுரைக்கான முதற்பக்கச் சுருக்கத்தை இட்டு உதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:25, 7 சூலை 2012 (UTC)

சுருக்கத்தை இட்டுள்ளேன். தேவைக்கேற்றபடி தொகுத்துவிடுங்கள். --Anton (பேச்சு) 17:09, 7 சூலை 2012 (UTC)


இது ஒரு முக்கிய தொகுப்பு. பங்களித்தவர்களிக்கு மிக்க நன்றிகள். இதை முதற்பக்கத்தில் இப்பொழுது காட்சிப்படுத்தாமல் இருப்பது நன்று என்று தோன்றுகிறது.

குறைபாடுகள்

 • ஆனால் பல்வேறு தகவல்கள் உறுதிப்படுத்த வேண்டிய சான்றுகள் வேண்டி உள்ளது.
 • பூர்த்தி இல்லை. எ.கா மலேசியத் தமிழர்கள் பற்றி ஒரே ஒரு குறிப்பு மட்டுமே உள்ளது.
 • எல்லாப் புவியல் பகுதிகளும் சேர்க்கப்படவில்லை.
 • இது பெரும்பாலும் அரசர்/அரசியல் வரலாறாகவே பெரிதும் இருக்கிறது.


--Natkeeran (பேச்சு) 23:37, 7 சூலை 2012 (UTC)

ஓர் வேண்டுகோள்[தொகு]

\\சுமார் 846-869- பல்லவன் மூன்றாம் நந்திவர்மன் பாண்டிய அரசைத் தோற்கடித்து வைகை வரை பல்லவப் பேரரசை விவரித்தல்\\

என மூன்றாம் நந்திவர்மன் காலம் 846-869 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 • பல்லவர் கட்டுரையில் பல்லவர் வரலாறு வார்ப்புருவில்: நந்திவர்மன் III கிபி 825 - 850 எனத் தரப்பட்டுள்ளது.
 • நான் தொடங்கிய மூன்றாம் நந்திவர்மன் கட்டுரையில் ஆ வி இல் உள்ளபடி 846-869 எனக் கொடுத்துள்ளேன்.
 • இதைச் சரி செய்யும் அளவுக்கு எனக்கு வரலாற்றில் ஆழம் கிடையாது. எனவே வரலாற்றினை அறிந்தவர்கள் இந்த முரண்பாட்டைக் களைவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 19:22, 7 சூலை 2012 (UTC)

உங்களுக்கு ஏற்கனவே இங்கு வார்ப்புரு பேச்சு:பல்லவ வரலாறு பதிலளிக்கப்பட்டுளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:48, 7 சூலை 2012 (UTC)

நாகர்கள் தமிழ் பேசினார்களா?[தொகு]

நாகர்கள் என்ற பழங்குடிகள் தமிழ் பேசினார்கள் என்ற கருதுகோள் அல்லது தகவலுக்கு கூடிய மேற்கோள்கள் வேண்டும். தற்போது மேற்கோளாகத் தரப்பட்டு இருக்கும் நூல் சங்கடத்துக்கு உரியது. அருச்சுனனின் பேரனைப் பற்றி எல்லாம் பேசுகிறது. V. Kanakasabhai மதிக்கப்பட்ட ஒரு வரலாற்றியளாரகத் தெரியவில்லை. --Natkeeran (பேச்சு) 00:28, 8 சூலை 2012 (UTC)

நாகர்கள் பற்றிய பகுதி நீக்கப்பட்டாயிற்று. --Anton (பேச்சு) 16:44, 8 சூலை 2012 (UTC)

சில கருத்துகள்[தொகு]

இக்கட்டுரையை நான் இப்பொழுதுதான் பார்க்கின்றேன். மிக நன்றாக பயனுடைய வழியில் தொகுத்துளீர்கள். ஆனால் மிகப்பழமையான காலத்துக்கான கருத்துகள் (50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட) காலம்) பொதுவான ஏற்பு பெறாதவை. அவற்றைத் திருத்தி எழுதவேண்டுகிறேன். அதாவது அப்பொழுது "தமிழர்கள்" என்று ஓரினத்தவர் அல்லது மொழியினர் இருந்தனர் என்பது ஏற்புடையதன்று (சான்றுகளால் நிறுவப்படாத கருத்து). மாந்தர்கள் மொழி என்று பேசத் தொடங்கியது ஏறத்தாழ 50,000-70,000 ஆண்டுகளுக்கு முந்தையதுதான். தற்கால மாந்த உடல்வளர்ச்சியும் பழக்கவழக்கங்களும் தோன்றியது ஏறத்தாழ 50,000 ஆன்டுகளுக்கு முந்தையதுதான் (McHenry, H.M (2009). "Human Evolution". In Michael Ruse & Joseph Travis. Evolution: The First Four Billion Years. Cambridge, Massachusetts: The Belknap Press of Harvard University Press. p. 265. ISBN 978-0-674-03175-3.). ஏறத்தாழ 100,000 ஆண்டுகளுக்கு முன்னர்தான், அதாவது தற்கால மாந்தனாக வளரும் முன்பும் கூட, குரல்வளையே பல ஒலிகளை எழுப்பும் அமைப்பைப் பெற்றது என்று அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். மரபணுக்கூற்றில் FOXP2 என்னும் பகுதியில் மரபணு மாற்றம் ஏற்படுவதால் மொழிக்குறைபாடுகள் எழுகின்றன என்று அறிந்திருக்கின்றார்கள் (அண்மையில்), முதலில் இந்த மரபணுவால்தான் பேச்சு/மொழி என்பதே எழுந்தது என்று தவறுதலாகக் கூறிவந்தனர், ஆனால், இதனோடு பிற பல காரணங்களும் உள்ளன என்று இப்பொழுது கருதுகின்றனர். இந்த வலைப்பக்கத்தில் கீழ்க்காணுமாறு கூறுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

"No-one should imagine that the development of language relied exclusively on a single mutation in FOXP2. They are many other changes that enable speech. Not least of these are profound anatomical changes that make the human supralarygeal pathway entirely different from any other mammal. The larynx has descended so that it provides a resonant column for speech (but, as an unfortunate side-effect, predisposes humans to choking on food). Also, the nasal cavity can be closed thus preventing vowels from being nasalised and thus increasing their comprehensibility. These changes cannot have happened over such a short period as 100,000 years. Furthermore the genetic basis for language will be found to involve many more genes that influence both cognitive and motor skills"

இவை எல்லாம் நன்கு அறியப்பட்ட செய்திகள். கீழ்க்காணும் உசாத்துணைகளும் நல்லவை. பொதுவாக 50,000-70,000 ஆண்டுகளுக்கு முன்பு மொழி என்று கூறுவதோ தமிழ்மொழி என்று கூறுவதோ பொருத்தமாக இராது. கருவிகள் முன்மாந்தவுருவினர் (hominids) செய்தவையாகக்கூட இருக்கலாம். நியாண்டர்தால் என்னும் மக்களும் தற்கால மாந்தர்களும் ஒரே காலப்பகுதியில் வாழ்ந்தும் கூட இருந்தனர் (ஒரு 20,000-28,000 ஆண்டுகளுக்கு முன்பு). நியாண்டர்தால் மக்கள் இறந்தவர் சடங்கெல்லாம் கூடச் செய்தனரானம், அவர்களுக்கும் மொழி இருந்தததாம், ஆனால் 50,000-70,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்மொழி, தமிழர் என்று கூறுவது பொருந்தாது (இப்பொழுதுள்ள அறிவுநிலையில்). கற்கருவிகள் இருந்திருப்பது வேறான செய்தி. அதனால் அவர்கள் தமிழர்கள் என்று பொருளன்று.

 • Christiansen, Morton H. and Simon Kirby (eds.). 2003. Language Evolution. New York: Oxford University Press.
 • Hauser, Marc; Noam Chomsky; and W. Tecumseh Fitch. 2002. The faculty of language: What is it, who has it, and how did it evolve? Science 298.1569-79.
 • Jackendoff, Ray. 1999. Some possible stages in the evolution of the language capacity, Trends in Cognitive Sciences 3.272-79.
 • Pinker, Steven, and Ray Jackendoff. 2005. The faculty of language: What’s special about it? Cognition 95.210-36.

இன்றைய தமிழகத்தில்/தென்னிந்தியாவில் வாழ்ந்த மாந்தர்களும், முன்மாந்தரனையோரும் அவர்களின் கருவிகள், பழக்கவழக்கங்கள் என்று முரண்படாதவகையில் எழுதுவது நலம். --செல்வா (பேச்சு) 03:14, 8 சூலை 2012 (UTC)

மிக்க நன்றி. உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன். இயலமானவற்றை தாராளமாகச் சீர்படுத்திவீடுங்கள். ஏனென்றால் சிறிது நேரத்திற்குப் பின்பே என்னால் பங்களிக்க முடியும். மற்றும், உங்கள் தொனியில் எழுவது மேலும் சிறப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன்.--Anton (பேச்சு) 03:25, 8 சூலை 2012 (UTC)

கற்காலம் பற்றிய தகவல்களை தமிழக வரலாற்றுக் காலக்கோடு கட்டுரையில் இணைக்கலாம். அதாவது கற்காலப் பொருட்கள் எல்லாம் தமிழகத்தில் தான் கிடைத்தது அல்லவா. மேலே ஏற்கனவே நான் கூறியிருந்தேனே.

தமிழகத்தில் இரும்புக் காலம், பெருங்கற்காலம் அதாவது கி.மு. 2000 போன்ற காலவரையில் இருந்து இங்கு சேர்க்கலாம் ஏனென்றால் அவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. பிராமி கி.மு. 600ல் தோன்றினாலும் அதே ஒப்புமை கொண்ட பாண்டங்கள் கி,மு. 2000 தொட்டு உள்ளன.

ஃபாக்சு பீ2 கட்டுரை உளது. இங்குள்ள தகவலை அங்கும் சேர்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:53, 8 சூலை 2012 (UTC)

 • நல்ல திருத்தங்கள் செய்துள்ளீர்கள் தென்காசி சுப்பிரமணியன்! மிக்க நன்றி. நீங்கள் ஃபாக்சு பீ2 (FOXP2) என்னும் கட்டுரையையும் திசம்பர் 2011 இல் எழுதியிருப்பதை அறிந்து மிக மகிழ்ந்தேன். மிக்க நன்றி. --செல்வா (பேச்சு) 16:11, 8 சூலை 2012 (UTC)
நன்றிகள் தென்காசி சுப்பிரமணியன்! --Anton (பேச்சு) 16:46, 8 சூலை 2012 (UTC)

சர்ச்சை கருத்துக்கள்[தொகு]

 1. முதற்மனிதனான தமிழன் குமரிக்கண்டத்தில் இருந்து வந்தான் என்பது ஒரு கருதுகோள்.
 2. பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது ஒரு கருதுகோள்.
 3. மூன்றாவது சற்று வேறுபட்டு ஆதியில் ஆபிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாக தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே தமிழர் என்கிறது.
 4. தமிழர் நடு ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் சிந்துவெளி தோற்றுவித்து பின்பு ஆரியரால் அடித்து விரட்டப்பட்டு தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள்.
 • அதனால் தமிழ் எழுத்துக்கள் பொறித்த மட்பாண்டங்கள் காலத்தையும் அதே மாதிரி தொடர்புடைய மட்பாண்டங்கள் கிடைக்கும் புதிய கற்காலம் கி.மு. 3000 ல் இருந்து மட்டும் இருக்கலாம் என்பது என் கருத்து.