தமிழகத்தின் இரும்புக்காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பொ.மு. 20 ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க இரும்பு கலன்கள் கண்டெடுப்பு

தமிழகத்தின் இரும்புக்காலம் பொதுவாகவே அறிஞர்களால் பொ.மு. 500 என்றே நிறுவப்பட்டு வந்தது. ஆனால் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் விரைவு பெற்ற காலம் அதை இன்னும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நிறுவியது. இதற்கு முன்னரே செம்பு, இரும்பு, தங்கம் போன்ற உலோகங்கள் இங்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிய வந்தது.[1]

மின்னழுத்தத் தடுப்புக்கள ஆய்வு[தொகு]

சென்னையில் உள்ள தேசியக் கடலாய்வு நிறுவனத்தைச் சார்ந்த பத்ரி நாராயணன், சசிசேகரன், இராசவேலு[2] போன்றவர்கள் ஆதிச்சநல்லூர் பகுதியில் மின்னழுத்தத் தடுப்புக்கள ஆய்வுகளை (Electro-resistivity survey) மேற்கொண்டனர். அதன் மூலம் உலோகங்கள் இப்பகுதியில் எந்தளவு உபயோகப் படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம். இம்மின்னழுத்த ஆய்வில் கிடைத்த இரும்பு பொருள்களை அறிஞர்கள் குறைந்தது பொ.மு. பத்தாம் நூற்றாண்டு[3] அளவில் உபயோகப் படுத்தப்பட்டவை என்றும் இவற்றின் பழமை பொ.மு. 17 ஆம் நூற்றாண்டு அளவு கூட செல்லும் என்றும் கணித்துள்ளனர்.[4] இதன் மூலம் தமிழகத்தின் இரும்புக்காலத்தை பொ.மு. 2000 அளவு மாற்றியமைக்க வேண்டியுள்ளது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. அலெக்சாந்தர் ரீ என்ற தொல்பொருள் ஆய்வாளர் வெளியிட்ட ஆய்வு முடிவுகள்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-06. பார்க்கப்பட்ட நாள் 2012-03-27.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-04-06. பார்க்கப்பட்ட நாள் 2012-03-27.
  4. தொல்லியல் சுடர்கள் (நூல்) - இந்த ஆய்வைச் செய்தவர்களுள் ஒருவரான சு. இராசவேலு என்றவரே இதன் ஆசிரியர்.
  5. http://www.flickr.com/photos/23119169@N08/
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-02. பார்க்கப்பட்ட நாள் 2012-03-27.