உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு, 2016

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்பலோ அவருக்கு Cardiac arrest என்ற கூறியது அதை நாமாவது இதய நிறுத்தம் என்போம். அவருக்கு Heart Attack (மாரடைப்பு) ஏற்படவில்லை.--குறும்பன் (பேச்சு) 19:07, 5 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

சரி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:22, 5 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தனிக் கட்டுரை

[தொகு]

இது தனிக்கட்டுரையாக இருக்கனுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:40, 5 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

நிறைய தகவல்கள் முறையாக தொகுக்கப்பட்டுள்ளன; இன்னமும் தகவல்களை சேர்க்கும் எண்ணமுள்ளது. கட்டுரையின் முதல் பத்தியில் இக்கட்டுரைக்கான முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:11, 5 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
முதன்மைக் கட்டுரையில் இத்தகவல் இருப்பது சிறப்பு. --~AntanO4task (பேச்சு) 23:57, 5 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
விரிவானத் தகவல்களை முக்கியக் கட்டுரையில் சேர்ப்பது கடினம் என்பதாலேயே தனிக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியத்துவத்தையும், கட்டுரையின் அளவினையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:23, 6 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
பயனர்களின் கருத்திற்காகக் காத்திருக்கும்போது ஏன் வார்ப்புரு நீக்கப்பட்டது? --~AntanO4task (பேச்சு) 11:47, 6 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
தனிக்கட்டுரையாக இருப்பது நன்று, முதன்மைக் கட்டுரையில் சிறு குறிப்பாக உடல்நலக் குறைவு பற்றி இட்டிருப்பதே நன்று. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:18, 6 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
வார்ப்புருவை நான் நீக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:43, 6 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

செய்திக் கட்டுரைக்கு உரிய தன்மையும் தேவையுமே உள்ளது. விக்கிசெய்திக்கு நகர்த்தலாம். சுருக்கத்தை முதன்மைக் கட்டுரையில் தரலாம்.--இரவி (பேச்சு) 09:05, 12 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கட்டுரையைத் துவக்கியவரின் விளக்கம்

[தொகு]

தனிக் கட்டுரையை உருவாக்கியதற்கான காரணங்களை விவரமாகத் தருகிறேன்:-

1. ஜெயலலிதா எனும் கட்டுரை மேலும் விரிவடைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த 25 ஆண்டுகால தமிழக வரலாற்றில் அவர் மிகவும் குறிப்பிடத்தக்க, ஒட்டுமொத்தமாகவே புகழ்பெற்ற நபர். இப்போது காலமாகிவிட்டதால் அவர் குறித்த கட்டுரை விரிவாக்கம் பெற வாய்ப்புகள் அதிகம்; தேவையும்கூட. அந்தக் கட்டுரை ஒழுங்கமைக்கப்பட்ட வடிவமைப்பினைக் கொண்டிருந்தால், இனிவரும் தொகுப்புகள் எளிதாக செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் சில மாற்றங்களை செய்தேன். அப்போதுதான் அங்குள்ள தகவல்களை எடுத்து தனிக் கட்டுரை ஆரம்பித்து, கூடுதல் தகவல்களை சேர்த்தேன். இன்னமும் விரிவுபடுத்துகிறேன்.

2. இவரின் 2.5 மாதகால மருத்துவச் சிகிச்சை அவரைப் பொறுத்தளவிலும், தமிழக அரசு / தமிழக அரசியலை பொறுத்தளவிலும் மிகவும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து விளக்கமான, விரிவான தகவல்கள் இருந்தால் எதிர்காலத்தில் இதுவொரு நல்ல தகவல் ஆவணமாக இருக்கும். எனவேதான் தனிக்கட்டுரை ஆரம்பிக்கப்பட்டது.

3. செய்திக் கட்டுரையாக இல்லாமல், கலைக்களஞ்சியக் கட்டுரையாக இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி, மிகவும் கவனத்துடன் கட்டுரை வளர்க்கப்பட்டு வருகிறது. உரிய மேற்கோள்களை சேர்த்து, விக்கி நடைமுறைப்படி உருவாக்கப்பட்டு வருகிறது.

தனிக் கட்டுரைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு, முடிவு எட்டப்படாமல் இருப்பது இக்கட்டுரைக்கும் ஏற்படுவதை தவிர்க்க விரும்புகிறேன். வரும் 20ஆம் தேதிவரை மற்ற பயனர்களின் கருத்துகளை இங்கு வரவேற்கிறேன். குறைந்தது, 10 பேரின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன் (ஏற்கனவே கருத்திட்ட 3 பேர் தவிர்த்து, இன்னும் 10 பேர்). அதிகப்படியான கருத்துகள் எந்த முடிவுக்கு ஆதரவு தருகிறதோ அதன்படி இறுதி முடிவெடுக்க நான் ஒப்புக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:07, 6 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

மற்றவர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:43, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையை நீக்க வேண்டாம், ஏனென்றால் இதுகுறித்து பிணக்குகளும் உண்டு. விரிவான விளக்கத்தை விரைந்து இடுகிறேன். நன்றி. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 00:16, 13 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரையை ஒரு நடுநிலையாளனாகப் பார்க்கும்போது எனக்குத் தென்படுபவை:

  • இக்கட்டுரையை ஜெயலலிதாவின் ஆதரவாளர் ஒருவரால் எழுதப்பட்டது.
  • அவர் இறக்காது அடுத்த வருடம் நோய்வாய்பப்ட்டிருந்தால், ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு, 2017 என்ற கட்டுரையும் உருவாக்கியிருக்கும்.
  • கருணாநிதி நோய்வாய்ப்பட்டால், அவருடைய ஆதரவளரையும் இவ்வாறான ஒரு கட்டுரை எழுத இது ஊக்குவிக்கும். பின்பு, ஒரு நடிகருக்கும் நடிகைக்கும் வேறு பல நபர்களுக்கும் இவ்வாறான கட்டுரைகள் எழுத இது அடித்தளம் அமைக்கும். ஆகவே, இது பிழையான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது.
  • உசாத்துணையைக் கொண்டு மட்டும் கலைக்களஞ்சியம் அமைக்க முடியாது. கலைக்களஞ்சியம் என்பது தரவுத்தளம், செய்தித்தளம் என்பதில் இருந்து வேறுபட வேண்டும். இங்கு அதனைக் காணவில்லை.

பேச்சு:புதிய தலைமுறை ஆசிரியர் விருது பகுதியில் உள்ள கருத்தினையும் கருத்திற் கொள்ளவும். ஏரணத்தால் இவ்வாறான கட்டுரைகளை த.வி. அனுமதித்தால், நான் இதற்கு மேலும் உரையாடாது, என்பாட்டுக்கும் இவ்வாறான கட்டுரைகளை உருவாக்கத்தான் முடியும். --~AntanO4task (பேச்சு) 06:09, 14 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

மகிந்த ராசபக்சவின் உடல்நலக் குறைவு என்ற கட்டுரையும் உருவாக்கலாம் அல்லவா? காரணம் அவர் ஒரு நாட்டின் முக்கிய சனாதிபதியாக 2 முறை பதவி வகித்தவர். குறிப்பிடத்தக்கவர். பயங்கரவாதத்தை ஒழித்தவர். மேலும் பல காரணங்களும் உள்ளன. உசாத்துணைகள் பல உள்ளன. --~AntanO4task (பேச்சு) 06:14, 14 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:50, 14 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

@~AntanO4task:, //இக்கட்டுரையை ஜெயலலிதாவின் ஆதரவாளர் ஒருவரால் எழுதப்பட்டது.// எனும் கூற்றினை நிரூபிக்கக் கேட்டுக்கொள்கிறேன். எவற்றை ஆதாரமாக வைத்து, ஒரு பயனர் குறித்து விமர்சனம் செய்தீர்கள்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:45, 14 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

இவ்வாறான நடப்பு சம்பவங்கள், செய்திகள் குறித்தான கட்டுரையை சற்று காலதாமதமாக இயற்றை செய்யலாம். இதனால் தேவைக்கு அதிகப்படியான தகவல்கள் இணைக்கப்படுவதும், சார்பு தன்மையுடையதாக தோன்றுவதும் தவிர்க்கப்படும் என்பது என் எண்ணம். 24/7 செய்தி தொலைக்காட்சிகள் வந்த பிறகு செய்திகளுக்கு கிடைக்கப்பெறுகின்ற முக்கியத்துவத்தினால் சில சம்பவங்கள் அந்தக் காலக் கட்டத்தில் அனைவராலும் விவாதத்திற்கும், கவனத்திற்கும் ஆட்படுகின்றன. ஆனால் சில காலம் ஆன பிறகு அவை முக்கியத்துவம் இழந்து கவனிப்பின்றி சென்றுவிடுகின்றன. இந்தக் கட்டுரையும் இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு கவனம் பெறாது என் தனிப்பட்ட எண்ணம். இக்கட்டுரைப் போன்றே தமிழ் விக்கியில் பல்வேறு கட்டுரைகள் இருக்கின்றன. ஆனால் தொடர்ந்து இவ்வாறு கட்டுரை இயற்றப்படும் போது, பேச்சுப் பக்கத்தில் எண்ணற்றோரின் உழைப்பும் செலவாகிறது. இது தவிர்க்க ஒரு முறையான கொள்கை வழிகாட்டுதல் தேவையுறுகிறது. விரைந்து அதனை செயல்படுத்தினால் உழைப்பு வீணாவது தடுக்கப்படும். பயனர்களுக்கும் தேவையற்ற அயற்சியை தவிர்க்கலாம். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:53, 14 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரையை ஒரு நடுநிலையாளனாகப் பார்க்கும்போது எனக்குத் தென்படுபவை: இக்கட்டுரையை ஜெயலலிதாவின் ஆதரவாளர் ஒருவரால் எழுதப்பட்டது. என்ற கருத்தினைக் கவனியுங்கள். ஒரு வரியை மட்டும் வைத்துக் கொண்டு, நான் உங்களை ஜெயலலிதாவின் ஆதரவாளர் எனக் குறிப்பிட்டதாக நினைக்க வேண்டாம். அது என் நோக்கமல்ல. ஆரம்பத்தில் இக்கருத்துக்களை நேரடியாக முன்வைக்க நான் விரும்பவில்லை. ஆயினும் குறிப்பிடத்தக்கமை பற்றிய பற்றிய ஐயம் போக்க இவ்வாறு முழுக்காரணங்களையும் தெரிவிக்க வேண்டியதாயிற்று. கருணாநிதி நோய்வாய்ப்பட்டால், அவருடைய ஆதரவளரையும் இவ்வாறான ஒரு கட்டுரை எழுத இது ஊக்குவிக்கும். என்பதையும் விமர்சனமானக் குறிப்பிடலாம். ஆனால், அங்கு என் கருத்தினை புரிந்து கொள்ளுங்கள். --~AntanO4task (பேச்சு) 02:41, 15 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

@~AntanO4task:, உங்களின் இந்த விளக்கம் எனக்கு ஆறுதல் தருகிறது. நீங்கள் அப்போது எழுதியிருந்த விதம் / உரைநடை, தவறாக நினைக்கும்படி இருந்தது. அந்த உரையைப் படித்ததும், கட்டுரையை எழுதியதற்காக இப்படி ஒரு பழியா என அப்போது எண்ணினேன். அது குறித்து மேலும் பேசி நம் இருவரின் நேரத்தை வீணாக்க வேண்டாம் என இப்போது முடிவு கொண்டுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:20, 15 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

@Jagadeeswarann99:, நீங்கள் தெரிவித்த கருத்துகளில் எனக்கு வேறுபாடு உண்டு. உழைப்பு வீணாகுதல் மற்றும் பயனர்களுக்கு தேவையற்ற அயற்சி ஏற்படுவதாக நீங்கள் வருந்துவதால் மேற்கொண்டு விவாதிக்க நானும் விரும்பவில்லை. எனினும் ஒன்றேஒன்று மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்:- பரபரப்பிற்காகவோ, நீங்கள் தெரிவித்த 24/7 செய்தித் தொலைக்காட்சிகள் தந்த தாக்கத்தாலோ இக்கட்டுரை எழுதப்படவில்லை. முதிர்ச்சியடையாத மனப்போக்குடன் எழுதப்பட்ட கட்டுரையன்று இது. கவலை வேண்டாம்:- இனி இது போன்ற பிரச்சனைகள், உரையாடல்கள் என்னால் தமிழ் விக்கியில் ஏற்படாது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:31, 15 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பே. ஓர் வரையரைக்கு கொண்டுவந்த பின்பு இதுபோன்ற கட்டுரைகளை உருவாக்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. நன்றிங்க. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:37, 15 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையை நீக்க வேண்டாம் தனி கட்டுரையாக இது இருப்பதே சிறந்தது நானும் கூட பின்னாளில் பங்களிக்க வாய்ப்புள்ளது இது தமிழக அரசியல்ம் தலைவர் சார்ந்த கட்டுரை பலரும் (ஆதரவாளர்கள் எதிரிகள் நடுநிலை கொண்டுள்ளவர்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது என கவனிப்பவர்கள்) பார்ப்பார்கள். --குறும்பன் (பேச்சு) 19:56, 16 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கருணாநிதியோ மகிந்தாவோ சிறிசேனாவோ ரணிலோ (குறிப்பிடத்தகுந்தவர்கள்) மருத்துவ மனை சென்று பலமாதங்கள் தொடர்ச்சியாக இருந்து மறைந்தால் அவரைப்பற்றி அதைப்பற்றி அவர் கட்டுரையில் குறிப்பிடலாம் அது பெரிதானால் தனி கட்டுரையாக்குவது நன்று. செயலலிதா மருத்துவமனையில் சேர்ந்த்து குறித்து நானும் (இக்கட்டுரையில் அல்ல) பங்க்களித்துள்ளேன். நிறைய முறை இதிலிருந்து எடுத்தே வாக்குவாதம் புரிந்துள்ளேன் சிலவற்றை தேடி கிடைக்கவில்லை. அதை அப்போ குறிக்காமல் விட்டுட்டமே என்று வருத்தப்பட்டுள்ளேன். தனி கட்டுரைக்கு உரிய அனைத்து தகுதிகளும் செயாவின் இம்முறை அப்பலோவில் இருந்த்திற்கு உண்டு. --குறும்பன் (பேச்சு) 20:15, 16 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையில் எனக்கு தெரிந்த பிணக்குகள் சிலவற்றை இணைத்துள்ளேன். பல அரசியல் மாற்றங்களையும், குழப்பங்களையும், ஊகங்களையும், சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளதால் இது தனித்துவம் பெற்றுள்ளதாகவே எண்ணுகிறேன். பிற அரசியல் தலைவர்கள் மருத்துவமனையில் உடல்நலமின்மை காரணமாக சிகிச்சை பெறுவது சாதாரணமானதொரு நிகழ்வே. ஆயினும் செயலலிதாவின் மருத்துவம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடக்கோரி பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பியுள்ளதால், இது இன்னமும் வளரக் கூடுமென்றே எண்ணுகிறேன். 3 வரிக்கட்டுரைகளை நாம் தமிழ் விக்கியில் உருவாக்குவதை வழமையாக கொண்டுள்ள காரணத்தையே முன்வைத்து இக்கட்டுரையை நீக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நடுநிலையாக இல்லையென்றால் அதற்கான திருத்தங்களை மேற்கொள்ளலாம். தமிழக அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய இந்நிகழ்வை தனிக்கட்டுரையாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:09, 23 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையை ஜெயலலிதா என்ற கட்டுரையோடு இணைப்பதே சிறந்தது. --நிர்மல் (பேச்சு) 01:37, 3 சனவரி 2017 (UTC)[பதிலளி]

கட்டுரையை துவக்கியவரின் வேண்டுகோள்

[தொகு]

என் மனப்பக்குவத்தில் இப்போது மாற்றம் பெற்றுவிட்டேன். 20ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியதில்லை. இந்தக் கட்டுரையை நீக்குவதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. இந்தக் கட்டுரையில் பெரும்பான்மையான பங்களிப்பினை நான்தான் செய்துள்ளேன். எனவே என்னுடைய ஒப்புதலின் அடிப்படையில் நீக்கிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:37, 15 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கட்டுரை நீக்க எவரும் வேண்டுகோள் இடவில்லைனு நினைக்கிறேன். இந்த கட்டுரையை ஜெயலலிதா கட்டுரையோடு இணைக்கத்தான் பரிந்துரைத்துள்ளார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:57, 17 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தலைப்பு

[தொகு]

செயலலிதாவின் மரணம்? --~AntanO4task (பேச்சு) 18:09, 24 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

செயலலிதா உடல்நலக் குறைவும், அரசியல் பிணக்குகளும் ?--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:46, 24 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கட்டுரை நீக்கம் வார்ப்புருவை அகற்றல்?

[தொகு]

கட்டுரையின் தலைப்பு மாற்றம் அல்லது கட்டுரை இணைப்புப் பற்றியே உரையாடப்படுவதால் கட்டுரை நீக்கத்திற்கான வார்ப்புருவை கட்டுரையிலிருந்து அகற்றிவிடலாம்தானே?

இல்லை, இக் கட்டுரையையே அகற்றி இதை செயலலிதா கட்டுரையிலேயே இடலாம் என்று தான் உரையாடல் --குறும்பன் (பேச்சு) 17:46, 30 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

முடிவு என்ன?

[தொகு]

இந்தக் கட்டுரை குறித்து, விக்கி சமூகத்தின் நிலைப்பாடு என்ன? இற்றைப்படுத்துவதா வேண்டாமா என்பது தெரியவில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:53, 8 பெப்ரவரி 2017 (UTC)

இக்கட்டுரையை நீக்க வேண்டாம். தனி கட்டுரையாக இற்றைப்படுத்துவதே சிறந்தது.--நந்தகுமார் (பேச்சு) 08:05, 8 பெப்ரவரி 2017 (UTC)
நந்தகுமார்
கட்டுரை நீக்க எவரும் வேண்டுகோள் இடவில்லைனு நினைக்கிறேன். இந்த கட்டுரையை ஜெயலலிதா கட்டுரையோடு இணைக்கத்தான் பரிந்துரைத்துள்ளார்கள்.
பயனர்:Selvasivagurunathan m
இற்றைபடுத்துவதை தொடரலாம். ஒருவேளை கட்டுரை இணைக்கப்பட்டால் இற்றைப்படுத்திய அனைத்தும் அதில் சேர்த்து விடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:19, 8 பெப்ரவரி 2017 (UTC)

கட்டுரையில் பங்களித்தவர்கள், தனிக் கட்டுரையாக இருக்க வேண்டும் என்றுதான் கருத்து தெரிவிக்கிறார்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:56, 8 பெப்ரவரி 2017 (UTC)

கட்டுரையில் பங்களித்தால் சிறப்புச் சலுகை உள்ளதா? --~AntanO4task (பேச்சு) 10:40, 13 பெப்ரவரி 2017 (UTC)

செல்வகுருநாதன் கட்டுரையை இற்றை படுத்துங்கள், அதிக தகவல்கள் இருந்தால் தனி கட்டுரையாக வைத்துக்கொள்ளலாம். இற்றை படுத்துவதை விட தகவல்களை முதலில் போடுங்கள் பின் இற்றை படுத்தலாம் --குறும்பன் (பேச்சு) 16:37, 13 பெப்ரவரி 2017 (UTC)

எனக்கு இது தனி கட்டுரையாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் கட்டுரை பெரியதாக உள்ளது. இது இற்றை படுத்தப்படவேண்டும்.--குறும்பன் (பேச்சு) 16:42, 13 பெப்ரவரி 2017 (UTC)