உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய பச்சை இலைக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய பச்சை இலைக்குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
குளோரப்சிசு
இனம்:
கு. சோனெரத்தி
இருசொற் பெயரீடு
குளோரப்சிசு சோனெரத்தி
ஜார்டைன் & செல்பை, 1827

பெரிய பச்சை இலைக்குருவி (Greater green leafbird)(குளோரோப்சிசு சோனெரத்தி) என்பது பச்சைக்குருவி குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது சின்ன பச்சைக்குருவியிலிருந்து (குளோரோப்சிசு சயனோபோகன் ) சக்திவாய்ந்த அலகு, மஞ்சள் தொண்டை மற்றும் பெண் பறவையின் கண் வளையம் ஆகியவற்றால் வேறுபடுகிறது. ஆண் கு. சயனோபோகனில் காணப்படும் கருப்பு தொண்டைப் பகுதியில் மஞ்சள் கரை இல்லாதது.

பரவலும் வாழிடமும்

[தொகு]

பெரிய பச்சை இலைக்குருவி, புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்தோனேசியாவில், சுமாத்திரா, போர்னியோ, நடுனா தீவுகள், சாவகம் மற்றும் பாலி ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள், முக்கியமாகப் பழைய-காடுகள் ஆனால் இரண்டாம் நிலை காடுகள் மற்றும் விளிம்புகள் ஆகும்.

நடத்தை

[தொகு]

பெரிய பச்சை இலைக்குருவி விதான மட்டத்தில் பறப்பது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது. இது கிளைகளுக்கு இடையில் குதித்து ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குப் பறக்கிறது. இது பெரும்பாலும் பழம்தரும் அத்தி மரங்களை அதிகம் நாடுகிறது. பூச்சிகள் மற்றும் சிறிய முதுகெலும்பில்லாத விலங்குகளையும் உணவாக எடுத்துக்கொள்கிறது.

பெரிய பச்சை இலைப்பறவை உரத்த குரலைக் கொண்டுள்ளது.

கூண்டு பறவை வர்த்தகத்திற்காக அதிகம் சிக்கியதன் மூலம் இந்த சிற்றினம் அச்சுறுத்தப்படுகின்றது. இதன் வரம்பின் பெரும்பகுதிகளில் அரிதாக அல்லது மறைந்துவிட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2019). "Chloropsis sonnerati". IUCN Red List of Threatened Species 2019: e.T22704950A156863893. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22704950A156863893.en. https://www.iucnredlist.org/species/22704950/156863893. பார்த்த நாள்: 13 November 2021. 
  • strange, Morten (2000). A Photographic Guide to the Birds of Thailand Including Southeast Asia & The Philippines (1st ed.). Eric Oey (Periplus). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-593-926-1.

வெளி இணைப்புகள்

[தொகு]
குளோரோப்சிசு சோனெரத்தி . அருங்காட்சியக மாதிரி இயற்கை பல்லுயிர் மையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_பச்சை_இலைக்குருவி&oldid=3868223" இலிருந்து மீள்விக்கப்பட்டது