பெரிய அண்டிலிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய அண்டிலிசு
Grandes Antilles (பிரெஞ்சு)
Antillas Mayores (எசுப்பானியம்)
கரிபிய மண்டலம்
கரிபியனில் அமைவிடம்.
கரிபியனில் அமைவிடம்.
தீவு நாடுகள்
பரப்பளவு
 • மொத்தம்207,435 km2 (80,069 sq mi)
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்37,582,088
 • அடர்த்தி169.05/km2 (437.8/sq mi)
நேர வலயங்கள்கிநேவ: ஒ.ச.நே - 05:00/ஈடிடி: ஒ.ச.நே - 04:00
அத்திலாந்திக்கு நேர வலயம்: ஒ.ச.நே - 04:00/அ.பகல்சேமிப்பு நேரம்: ஒ.ச.நே - 03:00

பெரிய அண்டிலிசு (Greater Antilles) கரிபியக் கடலில் பெரியத் தீவுகளின் தொகுப்பாகும்; கியூபா, (எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு உள்ளடக்கிய) லா எசுப்பானியோலா, புவேர்ட்டோ ரிக்கோ, ஜமேக்கா, மற்றும் கேமன் தீவுகள் இதில் அடங்கும். முழுமையான மேற்கிந்தியத் தீவுகளின் நிலப்பரப்பில் 90% பெரிய அண்டிலிசில் உள்ளது.[1] தவிரவும் 90% க்கும் மேற்பட்ட மக்கள்தொகையும் இத்தீவுகளில்தான் உள்ளனர்; மிகுதி கிழக்கிலுள்ள சிறிய அண்டிலிசு தீவுகளில் உள்ளனர்.

புதிய உலகத்தை ஐரோப்பியர்கள் ஆக்கிரமிப்பதற்கு முன்னரே அண்டிலிசு என்ற பெயர் வழக்கத்தில் இருந்தது; பழங்கால வரைபடங்களில் ஐரோப்பியர்கள் இத்தகையதோர் மர்மமான நிலப்பகுதியை அண்டிலியா (தீவு) எனக் குறிப்பிட்டு வந்தனர். இது சில நேரங்களில் தீவுக் கூட்டமாகவும் சில நேரங்களில் தொடர்ந்த நிலப்பகுதியாகவும் காட்டப்பட்டது; தற்கால கேனரித் தீவுகளுக்கும் யூரேசியாவிற்கும் இடையே இது கடற்பகுதியில் இருந்ததாக நம்பப்பட்டது.

நாடுகள்[தொகு]

நாடும் கொடியும் பரப்பு
(கிமீ²)
மக்கள்தொகை
(1 சூலை 2005 மதிப்.)
மக்கள் தொகை அடர்த்தி
(கிமீ²க்கு)
தலைநகரம்
கூபா கியூபா 1,10,860 1,13,46,670 102.4 அவானா
கேமன் தீவுகள் கேமன் தீவுகள் (ஐ.இரா) 264 54,878 207.9 ஜார்ஜ் டவுன்
டொமினிக்கன் குடியரசு டொமினிக்கன் குடியரசு 48,730 89,50,034 183.7 சான்டோ டொமிங்கோ
எயிட்டி எயிட்டி 27,750 81,21,622 292.7 போர்ட்-ஓ-பிரின்ஸ்
ஜமேக்கா ஜமேக்கா 10,991 27,31,832 248.6 கிங்சுடன்
புவேர்ட்டோ ரிக்கோ புவேர்ட்டோ ரிக்கோ (ஐ.அ) 9,104 39,16,632 430.2 சான் வான்
மொத்தம் 2,07,435 3,50,66,790 169.05

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Greater Antilles". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 28 May 2015.

மேலும் அறிய[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_அண்டிலிசு&oldid=1990181" இலிருந்து மீள்விக்கப்பட்டது