அண்டிலியா (தீவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அண்டிலியா
Albino de Canepa 1489 Antillia Roillo.jpg
அல்பீனோ டி கனெப்பாவின் வரைபடம், 1489. அன்டீலியாவின் ஒரு கற்பனைத் தீவு, வலப்பக்கத்தில் இதன் ஏழு நகரங்கள், இடப்பக்கத்தில் ரோயிலோ என்ற சிறிய தீவு.
துறைமுகத் திசைக்காட்டி வரைபட அமைவிடம்
வகைகற்பனைத் தீவு
குறிப்பிடத்தக்க அமைவிடங்கள்அத்திலாந்திக்குப் பெருங்கடல்

அண்டிலியா (Antillia, Antilia) என்பது, 15 ஆம் நூற்றாண்டு காலத்தில், அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதியில், மேற்குப் போர்த்துக்கல்லுக்கும் எசுப்பானியாவிற்கும் தொலைவில் அமைந்திருந்து மறைந்து போனது என நம்பப்படும் ஒரு கற்பனைத் தீவு ஆகும். இத்தீவு ஏழு நகரங்களின் தீவு (Ilha das Sete Cidades (போர்த்துக்கீசம்), Septe Cidades) எனவும் அழைக்கப்பட்டது.[1]

அண். 714 இல் இசுப்பானியாவை முசுலிம்கள் கைப்பற்றிய காலத்தில் நிலவிய ஒரு பழைய ஐபீரிய செவிவழிக் கதையில் இருந்து இத்தீவு உருவானது. ஏழு கிறித்தவ ஆயர்கள் முசுலிம்களின் ஆக்கிரமிப்பில் இருந்து கடல் வழியாக அத்திலாந்திக்குப் பெருங்கடல் வழியாகக் கப்பல்களில் தப்பியோடி அண்டிலியா என்ற தீவில் தரையிறங்கினர். அங்கு அவர்கள் ஏழு குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Beazley (1897-1906, 1899:p.lxxii)
  2. Cortesão (1954 (1975): p.140)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டிலியா_(தீவு)&oldid=2980593" இருந்து மீள்விக்கப்பட்டது