உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிபரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிபரசு
நிலக்கரி பட்டாணிக் குருவி, பெரிபரசு அட்டர்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெரிபரசு

டீ செலைசு லாங்க்சாம்சு, 1884
மாதிரி இனம்
பெரிபரசு அட்டர்[1]
லின்னேயஸ், 1758
சிற்றினம்

உரையினை காண்க

பெரிபரசு பரம்பல்

பெரிபரசு (Periparus) என்பது பட்டாணிக் குருவிக் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளின் பேரினமாகும். இந்த பேரினத்தில் உள்ள பறவைகள் முன்பு பரசு பேரினத்தில் வைக்கப்பட்டது. பின்னர் 2005ஆம் ஆண்டில் விரிவான மூலக்கூறு இனவரலாறு பகுப்பாய்வு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பெரிபரசு எனும் புதிய பேரினத்திற்கு மாற்றப்பட்டன.[2][3] 1884ஆம் ஆண்டில் பெல்ஜிய இயற்கை ஆர்வலர் எட்மண்ட் டி செலிசு லாங்சாம்ப்சால் நிலக்கரி பட்டாணிக் குருவியினை உள்ளடக்கிய பரசு பேரினத்தின் துணைபேரினத்திற்கு பெரிபரசு என்ற பெயர் அறிமுகப்படுத்தப்பட்டது.[4] இந்தப் பேரினத்தின் பெயர், பண்டைக் கிரேக்க பெரி மற்றும் பரசு பேரினப் பெயர் சேர்த்து உருவாக்கப்பட்டது.

இந்த பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளனஃ [5]

படம் விலங்கியல் பெயர் பொதுவான பெயர் பரவல்
பெரிபரசு ரூபோனுச்சாலிசு செம்பழுப்பு மார்பு பட்டாணிக் குருவி அல்லது கரு மார்பு பட்டாணிக் குருவி இந்தியா, சீனா, பாக்கித்தான், துருக்கிசுதான், கிர்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்
பெரிபரசு ரூபிடிவென்ட்ரிசு செங்குத பட்டாணிக் குருவி பூட்டான், சீனா, பாகிஸ்தான், இந்தியா, மியான்மர் மற்றும் நேபாளம்
பெரிபரசு அட்டர் நிலக்கரி பட்டாணிக் குருவி மிதவெப்ப மண்டல யூரேசியா மற்றும் வட ஆப்பிரிக்கா.

பெரிபரசு சிற்றினங்கள் அனைத்தும் ஆசியாவில் காணப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவிலும் நிலக்கரி பட்டாணிக் குருவி பரவலாகக் காணப்படுகிறது. இந்த பறவைகள் வெள்ளை கன்னங்களைக் கொண்டுள்ளன, பெரும்பாலானவை ஒரு வளைந்த தலையைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Paridae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  2. Gill, F.B.; Slikas, B.; Sheldon, F.H. (2005). "Phylogeny of titmice (Paridae): II. Species relationships based on sequences of the mitochondrial cytochrome-b gene". Auk 122: 121–143. doi:10.1642/0004-8038(2005)122[0121:POTPIS]2.0.CO;2. 
  3. Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453. 
  4. Edmond de Sélys Longchamps (1884). "Considérations sur le genre mésange (Parus)" (in French). Bulletin de la Société zoologique de France 9: 32–78 [43, 59]. https://www.biodiversitylibrary.org/page/35675467. 
  5. Gill, Frank; Donsker, David (eds.). "Waxwings and their allies, tits & penduline tits". World Bird List Version 6.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிபரசு&oldid=3958792" இலிருந்து மீள்விக்கப்பட்டது