பரசு (பறவை)
பரசு | |
---|---|
சாம்பற் சிட்டு, பரசு மேஜர் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | லின்னேயஸ், 1758
|
மாதிரி இனம் | |
பரசு மேஜர் (சாம்பற் சிட்டு) [லின்னேயஸ்]], 1758 | |
சிற்றினம் | |
உரையினைக் காண்க | |
பரசு பேரினப் பரம்பல் |
பரசு (Parus) என்பது பட்டாணிக் குருவி குடும்பத்தில் உள்ள பழைய உலகப் பறவைகளின் பேரினமாகும். இது முன்னர் பரிடே குடும்பத்தில் உள்ள 50 சிற்றினங்களில் பெரும்பாலானவற்றைக் கொண்ட ஒரு பெரிய பேரினமாக இருந்தது. 2013-ல் விரிவான மூலக்கூறு தொகுதி வரலாற்றுப் பகுப்பாய்வு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பேரினம் பல புதுப்பிக்கப்பட்ட பேரினங்களாகப் பிரிக்கப்பட்டது.[1] பரசு என்ற பேரினப் பெயர், "டைட்" என்பதற்கான இலத்தீன் வார்த்தையாகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]பரசு பேரினமானது 1758ஆம் ஆண்டில் சுவீடன் இயற்கை ஆர்வலர் கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் சிஸ்டமா நேச்சுரேயின் பத்தாவது பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] பரசு என்பது இலத்தின் சொல்லான "டைட்" என்பதிலிருந்து பெறப்பட்டது.[3] லின்னேயஸ் பேரினத்தில் சேர்க்கப்பட்ட 12 சிற்றினங்களில், 1840-ல் ஜார்ஜ் ராபர்ட் கிரே என்பவரால் இந்த மாதிரி இனங்கள் சாம்பற் சிட்டு (பரசு மேஜர்) என நியமிக்கப்பட்டன.[4][5]
சிற்றினங்கள்
[தொகு]இந்தப் பேரினமானது இப்போது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[6]
படம் | விலங்கியல் பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
பரசு மேஜர் | சாம்பற் சிட்டு | ஐரோப்பா | |
பரசு மைனர் | சப்பானியப் பட்டாணிக் குருவி | குரில் தீவுகள் உட்பட அமுர் நதிக்கு அப்பால் சப்பான் மற்றும் உருசியா தூர கிழக்கு | |
பரசு சினேரசு | சிநேரியசு சிட்டு | தெற்காசியா முழுவதும் மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா. | |
பரசு மான்டிகோலசு | பச்சை முதுகு சிட்டு | வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், பாக்கித்தான், தைவான் மற்றும் வியட்நாம். |
புதைபடிவ பதிவு
[தொகு]- பரசு ரோபசுடசு (பிலியோசீன்-கசர்னோட்டா, அங்கேரி) [7]
- பரசு பர்வுலசு (பிலியோசீன்- கசர்னோட்டா, அங்கேரி) [7]
- பரசு மீடியசு (பிலியோசீ-பெரெமென்ட், அங்கேரி) [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453.
- ↑ Linnaeus, Carl (1758). Systema Naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis (in Latin). Vol. 1 (10th ed.). Holmiae (Stockholm): Laurentii Salvii. p. 189.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 293.
- ↑ Gray, George Robert (1840). A List of the Genera of Birds : with an Indication of the Typical Species of Each Genus. London: R. and J.E. Taylor. p. 23.
- ↑ Check-list of Birds of the World. Vol. 12. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. 1986. p. 70.
- ↑ "Waxwings and their allies, tits & penduline tits". World Bird List Version 6.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.Gill, Frank; Donsker, David (eds.). "Waxwings and their allies, tits & penduline tits". World Bird List Version 6.1. International Ornithologists' Union. Retrieved 15 February 2016.
- ↑ 7.0 7.1 7.2 Kessler, E. 2013. Neogene songbirds (Aves, Passeriformes) from Hungary. – Hantkeniana, Budapest, 2013, 8: 37-149.
மேலும் படிக்க
[தொகு]Gill, Frank B.; Slikas, Beth & Sheldon, Frederick H. (2005): Phylogeny of titmice (Paridae): II. Species relationships based on sequences of the mitochondrial cytochrome-b gene. Auk 122: 121–143. DOI: 10.1642/0004-8038(2005)122[0121:POTPIS]2.0.CO;2 HTML abstract