சாம்பற் சிட்டு
Appearance
சாம்பற் சிட்டு | |
---|---|
பெண் பறவை, இங்கிலாந்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ப. மேஜர்
|
இருசொற் பெயரீடு | |
பரசு மேஜர் லின்னேயஸ், 1758 | |
தற்போதைய மற்றும் மேனாள் துணையினங்கள் |
சாம்பற் சிட்டு அல்லது பெரிய பட்டாணிக் குருவி (great tit)(பரசு மேஜர்) [1] என்பது வெள்ளைச்சிட்டு வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை ஐரோப்பா, மத்தியகிழக்கு, மைய மற்றும் வட ஆசியா, வட ஆப்ரிக்காவின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]இப்பறவை சிட்டுக்குருவி அளவே இருக்கும். இவை வெகு சுறுசுறுப்பாக காணப்படும். இதன் அலகுகள் குருவியின் அலகைப்போல குட்டையாக காணப்படும். தலையுச்சி ஒளிரும் கறுப்பு நிறத்தில் இருக்கும். கன்னம் மற்றும் வயிற்றுப் பகுதியில் வெள்ளையாக இருக்கும். முதுகு சாம்பல் நிறத்திலும்,