பெப் கார்டியோலா
![]() 2010-இல் கார்டியோலா | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | ஜோசப் கார்டியோலா இ சலா (Josep Guardiola i Sala) | ||
பிறந்த நாள் | 18 சனவரி 1971 | ||
பிறந்த இடம் | சான்ட்பெடர், ஸ்பெயின் | ||
உயரம் | 1.83 m (6 அடி 0 அங்) (6 அடி 0 அங்)[1] | ||
ஆடும் நிலை(கள்) | இடைக்கள தடுப்பு வீரர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | பேயர்ன் மியூனிச் (மேலாளர்) | ||
இளநிலை வாழ்வழி | |||
1983–1990 | Barcelona | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
1990–1992 | பார்சிலோனா 'பி' | 59 | (5) |
1990–2001 | பார்சிலோனா | 263 | (6) |
2001–2002 | பிரெஸ்சியா | 11 | (2) |
2002–2003 | ஏ.எஸ். ரோமா | 4 | (0) |
2003 | பிரெஸ்சியா | 13 | (1) |
2003–2005 | அல்-அஃகிலி | 18 | (2) |
2005–2006 | டோரடொஸ் டி சினாலொஆ | 10 | (1) |
மொத்தம் | 378 | (17) | |
பன்னாட்டு வாழ்வழி | |||
1991 | Spain U21 | 2 | (0) |
1991–1992 | Spain U23 | 12 | (2) |
1992–2001 | எசுப்பானியா தேசிய காற்பந்து அணி | 47 | (5) |
1995–2005 | காத்தலோனியா தேசிய கால்பந்து அணி | 7 | (0) |
மேலாளர் வாழ்வழி | |||
2007–2008 | பார்சிலோனா 'பி' | ||
2008–2012 | பார்சிலோனா | ||
2013–2016 | பேயர்ன் மியூனிச் | ||
2016- | மான்செஸ்டர் சிட்டி | ||
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
பெப் கார்டியோலா (Josep "Pep" Guardiola i Sala ; பிறப்பு - சனவரி 18, 1971) என்பவர் எசுப்பானிய கால்பந்து மேலாளர் ஆவார்; இவர் தற்போது புன்டசுலீகா அணியான பேயர்ன் மியூனிக்-கின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். இவர் விளையாடும் நாட்களில் தடுப்பு நடுக்கள வீரராக இருந்தார்; தனது பெரும்பான்மையான தொழில்முறை ஆட்டவாழ்வை பார்சிலோனாவில் கழித்தார். இவர், ஐரோப்பியக் கோப்பையை வென்ற யோகன் கிரையொஃப்-பின் கனவு அணி-யின் முக்கியமான அங்கமாக இருந்தார். இவர் விளையாடிய மற்ற அணிகள்: இத்தாலியில் பிரெஸ்சியா மற்றும் ரோமா, கத்தார் நாட்டின் அல்-அஃகிலி, மற்றும் மெக்சிகோவின் டொரடோஸ் டி சினாலொஆ. மெக்சிகோவில் விளையாடிய காலத்தில் மேலாளருக்கான பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். பன்னாட்டுப் போட்டிகளில் ஸ்பெயின் நாட்டுக்காக ஆடினார்; காத்தலோனியா அணிக்காக நட்புமுறைப் போட்டிகளிலும் ஆடியிருக்கின்றார்.
விளையாடுதலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பார்சிலோனா பி அணிக்குப் பயிற்சியாளரானார். 2008-ஆம் ஆண்டில் ஃபிராங்க் ரைகார்டுக்குப் பிறகு பார்சிலோனா முதன்மை அணிக்கு மேலாளர் ஆனார்.[2] அவரது முதல் பருவத்தில் லா லீகா, கோபா டெல் ரே மற்றும் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு ஆகிய மூன்றையும் வென்றார்; அதன்மூலம் வாகையர் கூட்டிணைவை வென்ற மிக இளவயது மேலாளர் என்ற புகழுக்கு உரியவரானார். அதற்கடுத்த பருவத்தில், அதே ஆண்டில், எசுப்பானிய உன்னதக் கோப்பை, ஐரோப்பிய உன்னதக் கோப்பை, பிபா கழக உலகக் கோப்பை ஆகியவற்றையும் வென்றார். இதன்மூலம் ஆறு கோப்பைகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் மேலாளர் ஆனார்; பார்சிலோனா - அவ்வாறு வென்ற முதல் அணியானது.
செப்டம்பர் 8, 2011 அன்று காத்தலோனியா பாராளுமன்றத்தால் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது; காத்தலோனியாவின் உயரிய பதக்கம் இதுவாகும்.[3] சனவரி 9, 2012 அன்று ஆண்களுக்கான கால்பந்தில் 2011 ஃபிஃபா உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் விருதினை வென்றார்.[4] நான்கு ஆண்டுகளில் 14 கோப்பைகளை வென்ற பிறகு பார்சிலோனா அணியின் மேலாளர் பணியிலிருந்து விலகினார். ஒரு வருட ஓய்வுக்குப் பிறகு ஜெர்மனியின் புன்டசுலீகா அணியான பேயர்ன் மியூனிக் அணிக்கு மேலாளராக மூன்று பருவங்கள் இருந்தார். பேயர்ன் மியூனிக்கின் மேலாளராக இருந்த மூன்று பருவங்களிலும் செருமனியின் முதல்நிலை கால்பந்துக் கூட்டிணைவுத் தொடரான புன்டசுலீகாவினை வென்றார். 2015-16-ஆம் பருவத்தின் இறுதியில், பேயர்ன் மியூனிக்குடனான தனது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தபிறகு, இங்கிலாந்து பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியின் மேலாளராக இணைந்தார்.
மேலும் பார்க்க[தொகு]
குறிப்புதவிகள்[தொகு]
- ↑ "Pep Guardiola". fcbayern.telekom.de. http://www.fcbayern.telekom.de/de/teams/trainer/pep-guardiola/index.php. பார்த்த நாள்: 30 August 2013.
- ↑ "Rijkaard until 30 June; Guardiola to take over". FC Barcelona. 8 May 2008 இம் மூலத்தில் இருந்து 25 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120525172745/http://www.fcbarcelona.cat/web/english/noticies/futbol/temporada07-08/05/n080508104104.html. பார்த்த நாள்: 16 January 2013.
- ↑ "Noticies 3/24" (in Catalan). TV3. http://www.324.cat/noticia/1366666/futbol/Un-emocionat-Pep-Guardiola-rep-la-Medalla-dHonor-del-Parlament. பார்த்த நாள்: 9 September 2011.
- ↑ "Messi, Sawa crowned at glittering Gala". FIFA இம் மூலத்தில் இருந்து 2 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140902155541/http://www.fifa.com/ballondor/archive/edition=1999902011/index.html. பார்த்த நாள்: 16 January 2013.