யோகன் கிரையொஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகன் கிரையொஃப்
சுய தகவல்கள்
முழுப் பெயர்என்ட்ரிக் யொகன்னெசு கிரையுஃப்
பிறந்த நாள்25 ஏப்ரல் 1947 (1947-04-25) (அகவை 76)
பிறந்த இடம்ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து
உயரம்1.80 m (5 அடி 11 அங்) (5 அடி 11 அங்)
ஆடும் நிலை(கள்)Attacking midfielder / Forward
இளநிலை வாழ்வழி
1957–1964அயாக்சு
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1964–1973அயாக்சு240(190)
1973–1978பார்சிலோனா143(48)
1979–1980Los Angeles Aztecs27(14)
1980–1981Washington Diplomats32(12)
1981Levante10(2)
1981–1983அயாக்சு36(14)
1983–1984Feyenoord33(11)
மொத்தம்520(291)
பன்னாட்டு வாழ்வழி
1966–1977நெதர்லாந்து48(33)
மேலாளர் வாழ்வழி
1985–1988அயாக்சு
1988–1996பார்சிலோனா
2009–2013காத்தலோனியா
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

யோகன் கிரையொஃப் (Johan Cruyff; இடச்சு: [ˈjoːɦɑn ˈkrœy̆f] (பிறப்பு: ஏப்ரல் 25, 1947, ஆம்ஸ்டர்டம், இறப்பு: 24, மார்ச் 2016[1]), முன்னாள் டச்சு கால்பந்து வீரராவார். சில காலம் முன்பு வரை, காத்தலோனியா தேசிய காற்பந்து அணியின் மேலாளராக இருந்தவர் ஆவார். இவர் மூன்று முறை பாலோன் தி'ஓர் (1956-2009) விருது (1971, 1973 மற்றும் 1974 ஆண்டுகளில்) வென்றிருக்கிறார்; மிச்செல் பிளாட்டினி, மார்க்கோ வான் பாஸ்டன் மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோருடன் பாலோன் தி'ஓர் விருதை அதிகமுறை வென்றவராக திகழ்ந்தார் (2012-இல் நான்காவது முறையாக பாலோன் தி'ஓர் விருதை வென்று புதிய சாதனை படைத்தார்).

காற்பந்தாட்டத்தை விளையாடும் முறைகளில் ஒன்றான முழுமையான காற்பந்து விளையாட்டு முறையின் மிகச்சிறந்த உதாரணமாக இவர் திகழ்கிறார்.[2][3][4][5] முழுமையான காற்பந்து விளையாட்டு முறை ரைனசு மிச்செல்சு என்பவரால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். யோகன் கிரையொஃப், வரலாற்றின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்; வரலாற்றின் மிகச்சிறந்த உலகக்கோப்பை காற்பந்து அணியின் வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நெதர்லாந்து தேசிய காற்பந்து அணியின் தலைவராக இருந்து 1974 உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இட்டுச்சென்றார்; அப்போட்டித் தொடரின் மிகச்சிறந்த ஆட்டக்காரர் விருதையும் இவர் வென்றார்.

கழகக் காற்பந்து வாழ்க்கையில், இவர் டச்சு கால்பந்துக் கழகமான அயாக்சில் தொடங்கினார். அங்கு, எட்டு எரெடிவிசி வாகையர் பட்டங்களையும் மூன்று ஐரோப்பியக் கோப்பைகளையும் வென்றார். 1973-இல் பார்செலோனாவில் இணைந்தார். முதல் பருவத்திலேயே லா லீகா வாகையர் பட்டத்தையும், ஐரோப்பாவின் சிறந்த வீரர் விருதை வென்றார்.

1984-ஆம் ஆண்டில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அயாக்சு மற்றும் பார்சிலோனாவின் மேலாளராக மிகப்பெரும் வெற்றிகளைக் கண்டிருக்கிறார்; மேலும், அவ்விரு கால்பந்துக் கழகங்களுக்கும் மிக முக்கியமான வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.

1999-ஆம் ஆண்டில் பன்னாட்டு கால்பந்து வரலாறு மற்றும் புள்ளிவிவரக் கூட்டமைப்பின் ஓட்டெடுப்பில் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஐரோப்பிய காற்பந்தாட்ட வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதே ஓட்டெடுப்பில், ஃபிஃபா நூற்றாண்டின் சிறந்த வீரர் பட்டியலில் பெலேவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[6] பிரான்சு காற்பந்துப் பத்திரிகையால் நடத்தப்பட்ட முன்னாள் பாலோன் தி'ஓர் வெற்றியாளர்களின் நூற்றாண்டின் சிறந்த வீரருக்கான ஓட்டெடுப்பில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.[7] உலகக்கோப்பை வரலாற்றில் ஃபிஃபா கனவு அணியின் அங்கத்தவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்; 2004-ஆம் ஆண்டில் ஃபிஃபா-வின் 100 ஆண்டுக் கொண்டாட்டத்தின் போது வாழும் 125 மிகச்சிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]


குறிப்புதவிகள்[தொகு]

  1. "Johan Cruyff: Netherlands great dies of cancer aged 68". பி.பி.சி இணையதளம். 24 மார்ச் 2016. http://www.bbc.com/sport/football/35892775. பார்த்த நாள்: 24 மார்ச் 2016. 
  2. The Best x Players of the Century/All-Time. Rsssf.com (5 February 2001). Retrieved on 18 January 2013.
  3. "MENOTTI: ""Pelé fue el más grande". Elgrancampeon.com.ar. https://web.archive.org/web/20130403044632/http://www.elgrancampeon.com.ar/index.php?option=com_content&view=article&id=9392%3Amenotti-qpele-fue-el-mas-grande-&catid=24%3Adt&Itemid=28 from the original on 3 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 October 2013. {{cite web}}: |archiveurl= missing title (help); Check date values in: |archivedate= (help)
  4. Interview: Alex Ferguson. Newstatesman.com. Retrieved on 18 January 2013.
  5. Fußball-Legenden – Die besten Fußballspieler aller Zeiten[தொடர்பிழந்த இணைப்பு]. Fussball-geschichte.com. Retrieved on 18 January 2013.
  6. "IFFHS' Century Elections". rsssf.com. பார்க்கப்பட்ட நாள் 22 March 2007.
  7. "The Best x Players of the Century/All-Time". RSSSF. பார்க்கப்பட்ட நாள் 18 March 2007.
  8. "Pele's list of the greatest". BBC Sport. 4 March 2004. பார்க்கப்பட்ட நாள் 16 November 2013.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகன்_கிரையொஃப்&oldid=3712723" இலிருந்து மீள்விக்கப்பட்டது