மிச்செல் பிளாட்டினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிச்செல் பிளாட்டினி
Michel Platini 2010.jpg
UEFA President Michel Platini in Poland, September 2010
சுய தகவல்கள்
முழுப் பெயர்Michel François Platini
பிறந்த நாள்21 சூன் 1955 (1955-06-21) (அகவை 67)
பிறந்த இடம்Jœuf, பிரான்சு
உயரம்1.78 m (5 ft 10 in)
ஆடும் நிலை(கள்)Attacking midfielder
இளநிலை வாழ்வழி
1966–1972AS Jœuf
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1972–1979Nancy181(98)
1979–1982Saint-Étienne104(58)
1982–1987யுவென்டசு147(68)
மொத்தம்432(224)
பன்னாட்டு வாழ்வழி
1976–1987பிரான்சு[1]72(41)
1988குவைத்1(0)
மேலாளர் வாழ்வழி
1988–1992பிரான்சு
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

மிசேல் பிரான்சுவா பிளாட்டினி (Michel François Platini, பிறப்பு: சூன் 21, 1955), பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த முன்னாள் காற்பந்து வீரர் மற்றும் மேலாளர் ஆவார். 2007-ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் தலைவராக இருக்கிறார். வரலாற்றின் மிகச்சிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர் ஃபிஃபா நூற்றாண்டின் சிறந்த வீரர் ஓட்டெடுப்பில் தனிச் சிறப்புச் சான்றாளர் குழுவின் ஓட்டெடுப்பில் ஆறாவது நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்; மேலும், ஃபிஃபா கனவு அணியின் அங்கத்தவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பாலோன் தி'ஓர் விருதை 1983, 1984 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று முறை வென்றார்; அதிகபட்ச பாலோன் தி'ஓர் விருது பெற்ற சாதனையாக யோகன் கிரையொஃப், மார்க்கோ வான் பாஸ்டன் மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோருடன் மூன்றுமுறை வென்றிருக்கிறார். (2012-ஆம் ஆண்டில் லியோனல் மெஸ்ஸி நான்காவது முறையாக இவ்விருதை வென்று புதிய சாதனை படைத்தார்). 2004-ஆம் ஆண்டில் ஃபிஃபா நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் போது பெலே அவர்களால் வாழ்ந்துகொண்டிருக்கும் மிகச்சிறந்த 125 காற்பந்து வீரர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

குறிப்புதவிகள்[தொகு]

  1. "Michel Platini Biography". Soccer-fans-info.com. 3 May 1973. 3 ஆகஸ்ட் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 பிப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "FIFA Player of the Century" (PDF). touri.com. 26 ஏப்ரல் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 30 November 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Pele's list of the greatest". BBC Sport. 4 March 2004. 18 November 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிச்செல்_பிளாட்டினி&oldid=3567566" இருந்து மீள்விக்கப்பட்டது