பென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பென்சால்டிகைடு
Skeletal (structural) formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்சால்டிகைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
பென்சீன் கார்பால்டிகைடு
பினைல் மெத்தனால்
வேறு பெயர்கள்
பென்சாயிக் ஆல்டிகைடு
இனங்காட்டிகள்
100-52-7 Yes check.svgY
ChEBI CHEBI:17169 Yes check.svgY
ChEMBL ChEMBL15972 Yes check.svgY
ChemSpider 235 Yes check.svgY
EC number 202-860-4
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG D02314 Yes check.svgY
பப்கெம் 240
வே.ந.வி.ப எண் CU437500
UNII TA269SD04T Yes check.svgY
பண்புகள்
C7H6O
வாய்ப்பாட்டு எடை 106.12 g·mol−1
தோற்றம் colorless or yellowish liquid
strongly refractive
மணம் almond-like
அடர்த்தி 1.0415 g/ml, liquid
உருகுநிலை
கொதிநிலை 178.1 °C (352.6 °F; 451.2 K)
.695 g/100 mL
கரைதிறன் soluble in liquid நவச்சாரியம்
மட. P 1.48
காடித்தன்மை எண் (pKa) 14.90
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5456
பிசுக்குமை 1.321 cP (25 °C)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−36.8 kJ/mol
Std enthalpy of
combustion
ΔcHo298
−3525.1 kJ/mol
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் J. T. Baker
ஈயூ வகைப்பாடு Harmful (Xn)
R-சொற்றொடர்கள் R22
S-சொற்றொடர்கள் (S2), S24
தீப்பற்றும் வெப்பநிலை 64 °C (147 °F; 337 K)
வெடிபொருள் வரம்புகள் 1.4-8.5%
Lethal dose or concentration (LD, LC):
1300 mg/kg (rat, oral)
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் பென்சைல் ஆல்ககால்
Benzoic acid
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பென்சால்டிகைடு (Benzaldehyde) என்பது C6H5CHO என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட கரிமச் சேர்மமாகும். இச்சேர்மத்தில் ஒரு பென்சீன் வளையமும் பிரதியீடு செய்யப்பட்ட ஒரு பார்மைல் தொகுதியும் உள்ளன. மிகவும் எளிய நறுமண ஆல்டிகைடான இது தொழில்துறையில் அதிகளவில் பயன்படுகிறது. இந்த நிறமற்ற திரவம் இனிமையான பாதாம் நறுமணம் வீசும் பண்பைக் கொண்டுள்ளது. ஆனால் உண்மையில், கசப்பான பாதாம் எண்ணெயின் முதன்மைப் பகுதிப் பொருளாக பென்சால்டிகைடு உள்ளது. மற்றும் பாதாம் தவிர பிற இயற்கை ஆதாரங்கள் பலவற்றிலிருந்தும் இதைப் பிரித்தெடுக்க முடியும்[1] . முதன் முதலில் 1803 ஆம் ஆண்டில் பிரான்சு மருந்தாளர் மார்ட்ரெசு [2] என்பவர் கசப்பு வாதுமை எண்ணெயிலிருந்து பென்சால்டிகைடை பிரித்தெடுத்தார். பின்னர் 1832 ஆம் ஆண்டில் செருமனி வேதியியலாளர் பிரைடுரிச் வோலர் மற்றும் ஜஸ்டஸ் வோன் லைபிக் இருவரும் பென்சால்டிகைடை தொகுப்பு முறையில் தயாரித்தனர் [3].

தயாரிப்பு[தொகு]

பென்சால்டிகைடு பல்வேறு செயல்முறைகள் மூலமாகப் பெறப்பட்டது. 1980 களில், சப்பான், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் 18 மில்லியன் பென்சால்டிகைடு உற்பத்தி செய்யப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. இதேயளவு உற்பத்தி தொடர்ந்து நடைபெறுவதாக ஊகிக்கவும் முடிகிறது. தற்போது திரவநிலையில் டொலுவினை குளோரினேற்றம் மற்றும் ஆக்சிசனேற்றம் செய்து பென்சால்டிகைடு தயாரிப்பதே பிரதான வழிமுறையாக உள்ளது. இதுதவிர பென்சைல் ஆல்ககாலை பகுதியாக ஆக்சிசனேற்றம் செய்தல், பென்சைல் குளோரைடை காரத்தின் முன்னிலையில் நீராற்பகுத்தல் மற்றும் பென்சீனை கார்பனைலாக்கம் செய்தல் போன்ற ஏராளமான புதிய வழிமுறைகளும் கண்டறியப் பட்டுள்ளன[4].

சின்னமன் எண்ணெயிலிருந்து பெறப்பட்ட சின்னமால்டிகைடை தொகுத்து தொகுப்பு முறையில் பென்சால்டிகைடு தயாரிக்கலாம். இதற்காக சின்னமன் எண்ணெயை நீரியிய அல்லது மதுசாரக் கரைசலின் முன்னிலையில் 90 பாகை செல்சியஸ் முதல் 150 பாகை செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் சோடியம் காபனேற்று அல்லது சோடியம் பைகார்பனேட்டு சேர்த்து 5 முதல் 80 மணி நேரம் [5] மீள்காய்ச்சி வடித்தலுக்கும் அதைத் தொடர்ந்து காய்ச்சி வடித்தலுக்கும் உட்படுத்தப்படுகிறது. இவ்வினையில் அசிட்டால்டிகைடும் உருவாகிறது.

தோற்றம்[தொகு]

பாதாம் கொட்டைகள், ஆப்ரிகாட் பழங்கள், ஆப்பிள்கள் மற்றும் செர்ரி விதைகளில் கணிசமான அளவு அமைக்டாலின் உள்ளது. அமைக்டாலின் என்ற இந்த கிளைக்கோசைட் வினையூக்கிகளான நொதிகளின் முன்னிலையில் பென்சால்டிகைடு, ஐதரசன் சயனைடு மற்றும் இரண்டு மூலக்கூறு குளுக்கோசு என்பவைகளாக சிதைகிறது.

amygdalin ஆயிஸ்டர் காளானின்[6] நறுமணத்திற்கும் பென்சால்டிகைடு காரணமாகிறது.

வேதி வினைகள்[தொகு]

பென்சால்டிகைடு ஆக்சிசனேற்றத்தின் போது மணமற்ற பென்சாயிக் அமிலமாக மாற்றமடைகிறது. ஆய்வக மாதிரிகளில் பென்சாயிக் அமிலம் பொதுவான அசுத்தமாக காணப்படுகிறது. பென்சால்டிகைடை ஐதரசனேற்றம் செய்து பென்சைல் ஆல்ககால் தயாரிக்க இயலும். நீரற்ற சோடியம் அசிட்டேட் மற்றும் புளியநீரிலி உடன் வினைபுரிந்து சின்னமிக் அமிலத்தைத்தருகிறது. வினையூக்கி பொட்டாசியம் சயனைடு முன்னிலையில் பென்சாயின் ஆக ஒடுக்கமடைகிறது. அடர்த்தியான காரத்துடனான கன்னிசாரோ வினை யின் போது விகிதாச்சாரமற்று ஒரு மூலக்கூறு தொடர்புள்ள ஆல்ககாலாக ஒடுக்கமும் அதேநேரத்தில் மறு மூலக்கூறு பென்சோயேட் ஆக ஆக்சிசனேற்றமும் அடைகிறது. Cannizzaro reaction

பயன்கள்[தொகு]

பென்சால்டிகைடு பொதுவாக பாதாம் நறுமணத்திற்காக பயன்படுத்தப் படுகிறது.மருந்துவகைப் பொருட்கள் முதல் நெகிழி சேர்க்கைப் பொருட்கள் வரையான கரிமசேர்மங்களை தயாரிப்பில் பென்சால்டிகைடு முன்னோடியாகத் திகழ்கிறது. டைமெத்தில் அனிலினுடன் சேர்ந்து பென்சால்டிகைடு அனிலின் சாயம் மாலகைட் பச்சையைத் தருகிறது. மேலும் அக்ரிடின் சாயங்கள் தயாரிப்பில் முன்னோடியாகவும் நிற்கிறது. ஆல்டால் குறுக்கத்தின் வழியாக சின்னமால்டிகைடு மற்றும் ஸ்டைரின் போன்ற வழிப்பொருட்களைத் தருகிறது. பென்சால்டிகைடில் இருந்துதான் மாண்டலிக் அமிலம்தயாரிக்க உதவும் தொகுப்புவினை துவங்குகிறது.

mandelic acid synthesis

முதலில் பென்சால்டிகைடுடன் ஐதரோசயனிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. அதேநேரத்தில் விளைபொருளான நைட்ரைல் நீராற்பகுத்தல் வினைக்கு உட்பட்டு மாண்டலிக் அமிலமாக மாற்றமடைகிறது. (இச்சோதனை விளைபொருட்களான இரண்டு ஆடிமாறியன்களில் ஒன்றை மட்டும் சித்தரிக்கிறது).

பென்சால்டிகைடு மற்றும் N எப்டால்டிகைடு இரண்டும் வெண்பனி மீளப்பளிங்காதலைத் தடுக்கின்றன இதனால் ஆழ்ந்த உறைபனி அடுக்குகள் தோன்றுவதும் தடுக்கப்படுகிறது என்று பனியாற்றியியல்அறிஞர்களான லாசேப்பல் மற்றும் ஸ்டில்மேன் இருவரும் 1966 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர். ஆழ்ந்த உறைபனி அடுக்குகளால் உருவாகும் நிலையற்ற பனிப் பாறைச்சரிவுகளைத் தடுக்க இப்பதிவு உதவலாம். எனினும் இத்தகைய வேதிப்பொருட்கள் பரவலாகப் பயன்படுத்தப் படுவதில்லை, ஏனெனில் அவை தாவரங்களையும் தண்ணீர் வழங்கலையும் சேதப்படுத்துகின்றன.

முன் பாதுகாப்பு[தொகு]

பென்சால்டிகைடு ஒரு அபாயகரமான வேதிப்பொருள் என அமெரிக்கா சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை வகைப் படுத்தியுள்ளது.

உணவு, ஒப்பனை, மருந்துகள், மற்றும் சோப்பு போன்றவற்றில் சுவைக்காகவும் வாசனைக்காகவும் பயன்படுத்தப்படும் பென்சால்டிகைடு பொதுவாக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.freepatentsonline.com/1416128.pdf, United States Patent 1416128 – Process of treating nut kernels to produce food ingredients.
  2. In 1803 C. Martrès published a manuscript on the oil of bitter almonds: "Recherches sur la nature et le siège de l'amertume et de l'odeur des amandes amères" (Research on the nature and location of the bitterness and the smell of bitter almonds). However, the memoir was largely ignored until an extract was published in 1819: Martrès fils (1819) "Sur les amandes amères," Journal de Pharmacie, vol. 5, pages 289-296.
  3. Wöhler and Liebig (1832) "Untersuchungen über das Radikal der Benzoesäure" (Investigations of the radical of benzoic acid), Annalen der Pharmacie, vol. 3, pages 249-282.
  4. Friedrich Brühne and Elaine Wright “Benzaldehyde” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_463
  5. http://www.patentstorm.us/patents/pdfs/patent_id/4617419.html[தொடர்பிழந்த இணைப்பு], Process for preparing natural benzaldehyde and acetaldehyde, natural benzaldehyde and acetaldehyde compositions, products produced thereby and organoleptic utilities therefor, Charles Wienes, Middletown; Alan O. Pittet, Atlantic Highlands, both of N.J.
  6. Beltran-Garcia, Miguel J.; Estarron-Espinosa, Mirna; Ogura, Tetsuya (1997). "Volatile Compounds Secreted by the Oyster Mushroom (Pleurotus ostreatus)and Their Antibacterial Activities". Journal of Agricultural and Food Chemistry 45 (10): 4049. doi:10.1021/jf960876i. http://pubs.acs.org/doi/abs/10.1021/jf960876i. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சால்டிகைடு&oldid=3254753" இருந்து மீள்விக்கப்பட்டது