சோடியம் கார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சோடியம் காபனேற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோடியம் காபனேற்று
ImageFile
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 497-19-8,
5968-11-6 (monohydrate)
6132-02-1 (decahydrate)
பப்கெம் 10340
ஐசி இலக்கம் 207-838-8
ChEBI CHEBI:29377
வே.ந.வி.ப எண் VZ4050000
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு Na2CO3
மோலார் நிறை 105.9885 g/mol (நீரின்றியது)
124.00 g/mol (மொனோ ஐதரேற்று)
286.14 g/mol (டெக்கா ஐதரேற்று)
தோற்றம் வெள்ளை நிறத் திண்மம்
மணம் மணமற்றது
அடர்த்தி 2.54 g/cm3 (நீரின்றியது)
2.25 g/cm3 (மொனோ ஐதரேற்று)
1.51 g/cm3 (ஹெப்டா ஐதரேற்று)
1.46 g/cm3 (டெக்கா ஐதரேற்று)
உருகுநிலை

851 °C (anhydrous)[1]
100 °C (decomp, monohydrate)
33.5 °C (decomp, heptahydrate)
32 °C (decahydrate)

கொதிநிலை

1633 °C (anhydrous)

நீரில் கரைதிறன் 71 g/L (0 °C)
215 g/L (20 °C)
455 g/L (100 °C)[1]
கரைதிறன் எத்தனோல், அசிட்டோனில் கரையாது
காரத்தன்மை எண் (pKb) 3.67
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.485 (anhydrous)
1.420 (monohydrate)
1.405 (decahydrate)
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
trigonal planar
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1131 kJ·mol−1[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
136 J·mol−1·K−1[2]
தீநிகழ்தகவு
MSDS MSDS
ஈயூ வகைப்பாடு Irritant (Xi)
EU சுட்டெண் 011-005-00-2
NFPA 704

NFPA 704.svg

0
1
1
 
R-phrases S36
S-phrases S2, S22, S26
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் இருகாபனேற்று
ஏனைய நேர் மின்அயனிகள் Lithium carbonate
Potassium carbonate
Rubidium carbonate
Caesium carbonate
தொடர்புடைய சேர்மங்கள் Ammonium carbonate
Natron
Sodium percarbonate
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

சோடியம் காபனேற்று (Na2CO3) காபோனிக் அமிலத்தின் ஒரு சோடிய உப்பாகும். இது உடைகளைக் கழுவுவதில் பயன்பட்ட உப்பாகும். இது நீரில் இலகுவாகக் கரையக்கூடியது. பொதுவாக ஹெப்டா ஐதரேற்று வடிவத்தில் (Na2CO3.7H2O) காணப்படும். உடைகளைக் கழுவ டெக்கா ஐதரேற்று (Na2CO3.10H2O) பயன்படுத்தப்படுகின்றது. இவ்வைதரேற்றுக்களை உலர்ந்த வளியில் வைத்திருந்தால் அவற்றிலுள்ள நீர் ஆவியாகி சோடியம் காபனேற்றின் மொமோ ஐதரேற்றை (Na2CO3.H2O) உருவாக்க முடியும். பொதுவாக சோடியம் காபனேற்றை உற்பத்தி செய்ய சொல்வே முறை பயன்படுத்தப்படுகின்றது. இம்முறையில் சுண்ணக் கல்லும் (CaCO3) சாதாரண உப்பும் (NaCl) அமோனியா வாயுவும் பிரதான மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பயன்பாடு[தொகு]

  • கண்ணாடி உற்பத்தியில் சிலிக்காவின் உருகு நிலையைக் குறைக்க சோடியம் காபனேற்று பயன்படுத்தப்படுகின்றது. சோடியம் காபனேற்று நீரில் இலகுவாகக் கரைவதால் அதன் கரைதிறனைக் குறைக்க கல்சியம் காபனேற்றும் இதனுடன் சேர்க்கப்படுகின்றது.
  • உடைகளைக் கழுவும் போது உடையைக் கழுவப் பயன்படும் சோப்பு அல்லது டிட்டேர்ஜன்ட் நன்றாக வேலை செய்யச் சேர்க்கப்படுகின்றது. கடின நீரில் காணப்படும் மக்னீசிய மற்றும் கல்சிய அயன்கள் சோப்பு நன்றாக அழுக்கை நீக்குவதைத் தடுக்கின்றன. சோடியம் காபனேற்றில் உள்ள சோடியம் அயன்கள் மக்னீசிய அயன்களுடன் போட்டியிடுவதால் சோப்பு நன்றாக அழுக்கை நீக்கும்.
  • சோடியம் காபனேற்று சோதனையில் உலோக அயன்களை வேறுபிரித்தறிய இது பயன்படுகின்றது. ஒரு இனங்காணப்படாத உலோகத்தின் உப்பினுள் இதனை இட்டால் கிடைக்கும் வீழ்படிவின் நிறத்துக்கேற்றபடி உலோக்ச்த்தை இனங்காணலாம். Cu2+ நீல நிறத்தையும், Fe2+ பச்சை நிறத்தையும், Fe3+ மஞ்சட்-கபில நிறத்தையும், Ca2+, Zn2+, Pb2+ ஆகிய மூன்றும் வெள்ளை நிறத்தையும் கொடுக்கின்றன.
  • E500 என்ற பெயருடன் உணவில் அமில-காரத் தன்மையைப் பேணும் பொருளாகச் சேர்க்கப்படுகின்றது.

உற்பத்தி[தொகு]

சொல்வே உற்பத்திச் செயன்முறை[தொகு]

சொல்வே உற்பத்தி முறை

இம்முறை மூலம் அமோனியா (NH3) மற்றும் கல்சியம் காபனேற்றைப் பயன்படுத்தி சோடியம் குளோரைட்டானது சோடியம் காபனேற்றாக மாற்றப்படுகின்றது. இம்முறை 1861ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஏர்னஸ்ட் சொல்வே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

முதலில் கல்சியம் காபனேற்று (சுண்ணக்கல்) முழுமையாகப் பிரிகையடையும் வரை சூடாக்கப்படும்.

CaCO3CaO + CO2

சோடியம் குளோரைடும் அமோனியாவும் அதிக செறிவை அடையும் வரை நீரில் கரைக்கப்படும். இக்கரைசலூடாக உருவாக்கப்பட்ட காபனீரொக்சைட்டு கலக்கப்படும். இதன்போது சோடியம் இருகாபனேற்று வீழ்படிவாகப் பெறப்படுகின்றது.:

NaCl + NH3 + CO2 + H2ONaHCO3 + NH4Cl

சோடியம் இருகாபனேற்று சோடியம் காபனேற்றாக முழுமையாகப் பிரிகையடையும் வரை நன்றாகச் சூடாக்கப்படும். இதன் போது பக்க விளைபொருளாக நீராவியும் காபனீரொக்சைட்டும் கிடைக்கப்பெறுகின்றன.:

2 NaHCO3 → Na2CO3 + H2O + CO2

காபனீரொகசைட்டு உற்பத்தியின் போது மிஞ்சிய கல்சியம் ஒக்சைட்டை நீரில் கரைத்து கல்சியம் ஐதரொக்சைட்டு (சுண்ணாப்புக் கரைசல்) பெறப்படும். இதனை உருவாக்கப்பட்ட அமோனியம் குளோரைடுடன் தாக்கமடையச் செய்வதன் மூலம் அனோனியா வாயுவை மீள உருவாக்க முடியும்:

CaO + H2O → Ca(OH)2
Ca(OH)2 + 2 NH4Cl → CaCl2 + 2 NH3 + 2 H2O

இம்முறையில் அமோனியா மீளுருவாக்கப்படுவதால் அமோனியாவை மீண்டும் மீண்டும் சேர்க்க வேண்டியதில்லை. சோடியம் குளோரைடும், கல்சியம் காபனேற்றுமே பிரதானமாக உட்புகுத்தப்படுகின்றன. கல்சியம் குளோரைடே பிரதான பக்க விளைபொருளாகும்.

லெப்லான்க் முறை[தொகு]

இம்முறை 1791ஆம் ஆண்டு பிரான்சு நாட்டைச் சேர்ந்த நிக்கோலஸ் லெப்லான்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இம்முறையில் சோடியம் குளோரைடு, சல்பூரிக் அமிலம், கல்சியம் காபனேற்று, நிலக்கரி என்பன பிரதான மூலப் பொருட்களாகும்.

முதலில் சோடியம் குளோரைட்டும், சல்பூரிக் அமிலமும் தாக்கமடையச் செய்யப்பட்டு சோடியம் சல்பேற்றும், ஐதரசன் குளோரைட்டு வாயுவும் பெறப்படுகின்றன.

2 NaCl + H2SO4Na2SO4 + 2 HCl

பின்னர் கல்சியம் காபனேற்று, நிலக்கர் என்பவற்றுடன் சோடியம் சல்பேற்று கலக்கப்பட்டு, சூடாக்கப்பட்டு சோடியம் காபனேற்றும், கல்சியம் சல்பைடும் பெறப்பட காபனீடொக்சைட்டு வாயுவாக வெளியேற்றப்படுகின்றது.

Na2SO4 + CaCO3 + 2 C → Na2CO3 + 2 CO2 + CaS

ஹௌவின் செயன்முறை[தொகு]

இம்முறை 1930ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த ஹௌ டீபாங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இம்முறையை அமோனியா உற்பத்திக்குப் பயன்படும் ஹேபர் செயன்முறையுடன் இணைத்து இயக்கினால் அதிக இலாபம் பெறலாம். இம்முறையில் சோடியம் காபனேற்றுடன் பக்க விளைபொருளாகப் பெறப்படும் அமோனியம் குளோரைடை அசேதனப் பசளையாக விற்பனை செய்யலாம்.


NH3 + CO2 + H2O → NH4HCO3
NH4HCO3 + NaCl → NH4Cl + NaHCO3

பின்னர் சோடியம் இருகாபனேற்று சூடாக்கப்பட்டு சோடியம் காபனேற்று பெறப்படுகின்றது.

2 NaHCO3 → Na2CO3 + H2O + CO2

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Sodium Carbonate". UNEP Publications.
  2. 2.0 2.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed.. Houghton Mifflin Company. p. A23. ISBN 0-618-94690-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_கார்பனேட்டு&oldid=1834982" இருந்து மீள்விக்கப்பட்டது