பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்
பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (Beti Bachao, Beti Padhao) பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு பிரச்சாரமாகும். இது இந்தியாவில் சிறுமிகளை நோக்கமாகக் கொண்ட பொதுநல சேவைகளின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ₹100 கோடி (US$13 மில்லியன்) ஆரம்ப நிதியுடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இது முக்கியமாக உத்தரப் பிரதேசம், அரியானா, உத்தராகண்டம், பஞ்சாப், பீகார் மற்றும் தில்லியில் உள்ள குழுக்களை குறிவைக்கிறது. [1] [2]
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்தியாவில் குழந்தைகள் பாலின விகிதம் (0–6 வயது) 2001 ல் 1,000 சிறுவர்களுக்கு 927 பெண்கள் என இருந்தது. இது 2011 ல் ஒவ்வொரு 1,000 சிறுவர்களுக்கும் 918 சிறுமிகளாகக் குறைந்தது. 2012 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) அறிக்கையில் 195 நாடுகளில் இந்தியாவுக்கு 41 வது இடத்தைப் பிடித்தது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்தியாவின் மக்கள் தொகை விகிதம் 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் என்பது தெரியவந்தது. பாலின விகிதம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளிலிருந்து கீழ்நோக்கிய போக்கைக் காட்டுகிறது.
2014 ஆம் ஆண்டில் சர்வதேச பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண் சிசுக்கொலைகளை ஒழிக்க அழைப்பு விடுத்ததுடன், இந்திய குடிமக்களிடமிருந்து MyGov.in என்ற இணையம் வழியாக பரிந்துரைகளை பதிவிடுமாறு கேட்டிருந்தார். [3]
பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (பிபிபிபி) [1] பரணிடப்பட்டது 2018-10-02 at the வந்தவழி இயந்திரம் திட்டம் 2015 ஜனவரி 22 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. [4] இது குறைந்து வரும் குழந்தை பாலின விகித பிம்பத்தின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகிய மூன்றும் இணைந்து நடத்தும் ஒரு தேசிய முயற்சியாகும். இது ஆரம்பத்தில் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதம் குறைவாக இருந்த பல துறை நடவடிக்கைகளை மையப்படுத்தியது.
2016 ஆகஸ்ட் 26 அன்று, 2016 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் இத்திட்டத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார். [5]
- SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் 2015 சூன் மாதத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது. இது அரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்திலுள்ள பிபிபூர் கிராமத்தின் தலைவர் சுனில் ஜக்லான் தனது மகள் நந்தினியுடன் சுயபடம் எடுத்து 2015 சூன் 2015 அன்று பேஸ்புக்கில் வெளியிட்டார். இந்த ஹேஷ்டேக் உலகளவில் புகழ் பெற்றது. [6]
இந்த முயற்சிக்கான காரணங்கள்
[தொகு]பால் தெரிவு கருக்கலைப்பு அல்லது பெண் கருக்கொலை இந்தியாவில் சில மாநிலங்களில் சிறுவர் குழந்தைகளுக்கு மாறாக பிறந்த பெண்களின் விகிதத்தில் கடுமையான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. மீயொலி நோட்ட தொழில்நுட்பம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ஒரு கருவின் பாலினத்தை தெரிந்துகொள்வதை சாத்தியமாக்கியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு, பல காரணங்களுக்காக, தொழில்நுட்பத்துடன் இணைந்து, மீயொலி பரிசோதனையின் போது பெண் என அடையாளம் காணப்பட்ட கருக்களின் கருக்கலைப்பு அதிகரிக்கிறது.
1991 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டபோது இந்த போக்கு முதலில் கவனிக்கப்பட்டது. மேலும் 2001 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டபோது இது ஒரு மோசமான பிரச்சினையாக உறுதிப்படுத்தப்பட்டது. 2011 ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் காட்டியுள்ளபடி, சில இந்திய மாநிலங்களின் பெண் மக்கள்தொகை குறைவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இந்தியாவின் ஒப்பீட்டளவில் வளமான பகுதிகளில் இந்த போக்கு மிகவும் தெளிவாகக் காணப்படுகிறது. [7] இந்தியாவில் வரதட்சணை முறைகள் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறது; மகள்கள் திருமணம் செய்து கொள்வதற்காக ஒரு பெரிய வரதட்சணை வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிரச்சினைக்கு ஒரு முக்கிய காரணமாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. [8] இந்திய சமுதாயத்தில் உயர் வாழ்க்கைத் தரம் மற்றும் நவீன நுகர்வோர் அதிகமாகக் காணப்படும் வளமான மாநிலங்களில் பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு பெரிய வரதட்சணை வழங்குவதற்கான அழுத்தம் மிகவும் தீவிரமானது.
மத்திய பிரதேசத்தில் பெண் சிசுக்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது; நேரடி பிறப்பு விகிதம் 2001 இல் 1000 சிறுவர்களுக்கு 932 பெண்கள், இது 2011 க்குள் 918 ஆக குறைந்தது. இந்த போக்கு தொடர்ந்தால், 2021 க்குள் சிறுமிகளின் எண்ணிக்கை 1000 சிறுவர்களுக்கு 900 க்கும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [9]
பயன்படுத்தப்படும் உத்திகள்
[தொகு]திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற பயன்படுத்தப்படும் உத்திகள்:
- பெண் குழந்தைக்கு சமமான மதிப்பை உருவாக்குவதற்கும் அவளது கல்வியை மேம்படுத்துவதற்கும் ஒரு நிலையான சமூக அணிதிரட்டல் மற்றும் தகவல் தொடர்பு பிரச்சாரத்தை செயல்படுத்துதல்.
- குழந்தை பிறப்பு விகிதம் / பாலின விகிதம் வீழ்ச்சியின் சிக்கலை பொது வெளியில் கொண்டு செல்லவேண்டும். இதன் முன்னேற்றம் நல்லாட்சிக்கான ஒரு குறிகாட்டியாக இருக்கும்.
- பாலின சிக்கலான மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் கவனம் செலுத்துதல்.
ஆதரவு
[தொகு]நாடு முழுவதும் பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோவை (பிபிபிபி) ஊக்குவிக்க பாரதீய ஜனதா கட்சி தேசிய செயற்குழுவை அமைத்துள்ளது. இந்த குழு 2015 சனவரி முதல் "பெண் குழந்தையை காப்பாற்றுங்கள்" மற்றும் "பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பியுங்கள்" ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது. முனைவர் இராஜேந்திர பாத்கே இத்திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். பேட்டி பச்சாவ் பிரச்சாரத்தை இந்திய மருத்துவ சங்கமும் ஆதரிக்கிறது.
இதனையும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ K Sandeep Kumar, Rajeev Mullick (19 May 2017). "UP govt sounds alert over Beti Bachao Beti Padhao scheme fraud". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 12 June 2017.
- ↑ பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (28 March 2017). "Haryana govt cautions people against frauds under Beti Bachao-Beti Padhao scheme". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017.
- ↑ "PM Narendra Modi invites ideas on "Beti Bachao, Beti Padhao"". DNA India. 11 October 2014. http://www.dnaindia.com/india/report-pm-narendra-modi-invites-ideas-on-beti-bachao-beti-padhao-2025163. பார்த்த நாள்: 2016-06-12.
- ↑ "PM to Launch 'Beti Bachao, Beti Padhao' Programme from Haryana". Newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-12.
- ↑ "Sakshi Malik to be brand ambassador of 'Beti Bachao, Beti Padhao' campaign in Haryana". 2016-08-24. பார்க்கப்பட்ட நாள் 2016-08-24.
- ↑ Sanyal, Anindita (28 June 2015). "#SelfieWithDaughter Trends Worldwide After PM Modi's Mann kiyg Baat". NDTV. பார்க்கப்பட்ட நாள் 1 July 2015.
- ↑ Selections from regional press, V.
- ↑ Panwar, Preeti (June 29, 2012). "Female foeticide: Death before birth". Bankersadda. Archived from the original on 11 March 2015. பார்க்கப்பட்ட நாள் September 27, 2012.
- ↑ Gupta, Suchandana (October 3, 2011). "Skewed sex ratio: MP launches 'Beti Bachao Abhiyan'". Times of India. http://timesofindia.indiatimes.com/india/Skewed-sex-ratio-MP-launches-Beti-Bachao-Abhiyan/articleshow/10212751.cms. பார்த்த நாள்: September 27, 2012.