உள்ளடக்கத்துக்குச் செல்

சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும்.[1] இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.[2]

திட்டத்தின்படி 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.[3] இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது[4]. முதிர்வு தொகையை 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

  • ஒரு பெண் குழந்தைக்கு வயது 10 அடையும் வரை அவர் பெயரில் கணக்கைத் தொடங்கலாம்.
  • ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.
  • பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கைத் தொடங்கலாம்.
  • ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ்கணக்கைத் தொடங்கலாம்.

முதலீட்டு வரம்பு

[தொகு]

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் ரூபாய் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 250 ரூபாயில் தொடங்கும் முதலீட்டுத் தொகை 300, 350, 400... என 50 ரூபாய் கூட்டலில் குறைந்தபட்ச தொகையைச் நிர்ணயித்து செலுத்தலாம்.

வரிச் சலுகை

[தொகு]

இத்திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் பணத்துக்கு வருமான வரிச் சட்டப் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு பெறலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டிக்கு கூட வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

கணக்கு செயலிழப்பு

[தொகு]

ஒருவேளை குறிப்பிட்ட முதலீட்டுத் தொகையை, குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால், கணக்கு செயலிழந்துவிடும். அவ்வாற்ய் செயலிழக்கும் கணக்கை, தவணை தவறிய ஒவ்வொரு ஆண்டுக்கும் 50 ரூபாய் வீதம் அபராதம் வீதம் செலுத்தி மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.

கணக்கை யார் இயக்குவது

[தொகு]

18 வயது முடியும் வரை பெண்ணின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இயக்க வேண்டும். 18 வயதுக்குப் பிறகு யார் பெயரில் கணக்கு இருக்கிறதோ, அவர் தான் கணக்கை இயக்க வேண்டும்.

முன் கூட்டியே கணக்கை மூடலாமா?

[தொகு]

ஒருவேளை, யார் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டதோ அவர் இறந்துவிட்டால் கணக்கை மூடி பணம் எடுக்கலாம். அதே போல கணக்குதாரருக்கு மோசமான உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ, பெண்ணின் பாதுகாவலர் இறந்து கணக்கில் பணம் செலுத்துவது சிரமமாக இருந்தாலோ தகுந்த ஆதாரங்களை கணக்கு வைத்திருக்கும் அலுவலகத்தில் சமர்பித்து கணக்கை முன் கூட்டியே மூடி பணத்தை எடுக்கலாம். ஆனால், கணக்கை தொடங்கி ஐந்து ஆண்டுகாலம் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கணக்கிலிருந்து நடுவில் பணம் எடுக்கலாமா?

[தொகு]

இத்திட்டத்தில் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் பெண் 10ஆம் வகுப்பு நிறைவு செய்த பிறகு அல்லது 18 வயது நிறைவடைந்த பிறகு மேற்படிப்புக்காக, கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் 50% வரை பணத்தை எடுக்கலாம்.

முதிர்வு எப்போது?

[தொகு]

சுகன்யா சம்ரிதி திட்டம் முதலீடு செய்யத் தொடங்கி 21 வயதில் கணக்கு நிறைவடையும். இருப்பினும் 18 வயது நிறைவடைந்த பெண், தன் திருமணத்தை முன்னிட்டு கணக்கை மூடி பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்கிறது.

வங்கிகளின் பட்டியல்

[தொகு]

இத்திட்டத்தின் கீழ் அஞ்சலகங்களில் கணக்கைத் தொடங்கலாம்.[5] மேலும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்க அனுமதிபெற்ற இந்திய வங்கிகளின் பட்டியலை கீழே காணலாம்.[6]

  1. பாரத ஸ்டேட் வங்கி
  2. ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா
  3. ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானர் & ஜெய்ப்பூர்
  4. ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர்
  5. ஸ்டேட் பாங்க் ஆஃப் ஐதராபாத்
  6. ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர்
  7. அலகாபாத் வங்கி
  8. ஆந்திரா வங்கி
  9. ஆக்சிஸ் வங்கி
  10. பேங்க் ஆப் பரோடா
  11. பேங்க் ஆப் இந்தியா
  12. பேங்க் ஆப் மகாராஷ்டிரா (BoM)
  13. கனரா வங்கி
  14. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
  15. கார்ப்பரேஷன் வங்கி
  16. தேனா வங்கி
  17. ஐசிஐசிஐ வங்கி
  18. ஐடிபிஐ வங்கி
  19. இந்தியன் வங்கி
  20. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
  21. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்
  22. பஞ்சாப் தேசிய வங்கி
  23. பஞ்சாப் & சிந்து வங்கி
  24. சிண்டிகேட் வங்கி
  25. யூகோ வங்கி
  26. இந்திய யூனியன் வங்கி
  27. யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா
  28. விஜயா வங்கி

பயனாளிகளின் எண்ணிக்கை[7]

[தொகு]
வருடம் வங்கி கணக்கு எண்ணிக்கை டெபாசிட் தொகை (கோடி)
2015 4,20,420 123
2016 69,98,870 6,773
2017 1,00,84,152 17,156
2018 1,24,28,910 31,958
2019 1,55,34,417 50,224
2020 1,92,49,624 72,880
2021 2,32,67,968 1,01,258
2021 நவம்பர் 2,72,54,759 1,19,989

31 அக்டோபர் 2021 வரையிலான அதிக கணக்கு எண்ணிக்கையுள்ள மாநிலங்கள் வரிசை

மாநிலங்கள் கணக்கு எண்ணிக்கை
உத்திரப்பிரதேசம் 29,12,632
தமிழ்நாடு 26,03,872
மகாராட்டிரம் 23,13,584
மத்தியப்பிரதேசம் 22,17,375
கருநாடகம் 21,08,078

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sukanya Samriddhi Account Scheme
  2. சுகன்யா சம்ரிதி யோஜனா: பெண் குழந்தைகள் எதிர்காலத்திற்கான சேமிப்பு
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-02-19.
  4. http://incometaxreturnindia.com/sukanya-samriddhi-account-for-minor-girl-child#.VObDrY-Kgf4 பரணிடப்பட்டது 2015-02-19 at the வந்தவழி இயந்திரம் Sukanya Samriddhi Account For Minor Girl Child
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-03-27.
  6. "RBI Circular".
  7. https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/jan/doc20221207101.pdf

வெளி இணைப்புகள்

[தொகு]