பூண்டு சுவைச்சாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐயோலி உடன் ஐரோப்பிய இடலை

பூண்டு சுவைச்சாறு (Garlic sauce) என்ற பூண்டு வகை உணவு, துணை உணவாகப் பயனாகிறது. இதில் முதன்மை இடுபொருளாகப் பூண்டு பற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இடும் பூண்டு பற்களுக்கு ஏற்ப இதன் சுவையும், வாசனையும் மணத்தைத் தரும். முதன்மை உணவுக்கு மேலும், இச்சாறு தாளிதப்பொருள் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

முதலில் உரித்த பூண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு நசுக்கப்படுகிறது. பின்பு அதனுடன் எண்ணெய் அல்லது வெண்ணெய் அல்லது மயோனெய்சு கலந்து பால்மம் போன்று தயாரிக்கப்படுகிறது. சில நேரங்களில் இதனுடன் வேறு சில பொருட்களும் கலந்து சூப் தயாரிக்கப்படுவதும் உண்டு.

பயன்பாடு[தொகு]

சில மாட்டிறைச்சி வகை, மீன், கடல் உணவு, ஆட்டிறைச்சி, கோழி, முட்டைகள் உள்ள உணவு, காய்கறி போன்றவைகளை உண்ணும் போது, இந்த சுவைச்சாறு பயன்படுத்தப்படுகிறது.[1][2] இது பல்வேறு நாடுகளில் பலவிதமாகத் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில், பூண்டு குழம்பு, பூண்டு இரசம் என்ற சமைத்துப் பயன்படுத்துவர்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. David, E.; Child, J.; Renny, J. (1999). French Provincial Cooking. Penguin twentieth-century classics. Penguin Publishing Group. பக். 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-101-50123-8. https://books.google.com/books?id=_-WZjjQsKzAC&pg=PT137. பார்த்த நாள்: 31 மார்ச்சு 2024. 
  2. Salloum, H.; Lim, S. (2012). Arabian Nights Cookbook: From Lamb Kebabs to Baba Ghanouj, Delicious Homestyle Arabian Cooking. Tuttle Publishing. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4629-0524-9. https://books.google.com/books?id=v5TTAgAAQBAJ&pg=PA27. பார்த்த நாள்: 31 மார்ச்சு 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டு_சுவைச்சாறு&oldid=3919189" இலிருந்து மீள்விக்கப்பட்டது