பால்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 1. ஒன்றுடன் ஒன்று கலவதா இரண்டு நீர்மங்கள். இவை பால்மமாகவில்லை.
 2. பால்மமாக நிலை II உள்ள நீர்மம் பிரிகை நிலை I ல் விரவி காணப்படுகிறது.
 3. நிலையற்ற பால்மம் தனியாக பிரிந்துள்ளது.
 4. பால்மங்களை நிலைத்தன்மை உடையதாக்க நிலை I மற்றும் நிலை II இடையே புறப்பரப்பு கவர்ச்சிப்பொருள் உள்ளது,

ஒன்றுடன் ஒன்று கலவாத இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நீர்மங்கள் கலந்த கலவையே பால்மம் (Emulsion) எனப்படுகிறது.

பால்மம் என்ற சொல்  இலத்தீன் மொழியில்  "பால்" என்று பொருள்படும் mulgeo, mulgere  என்ற சொல்லில் இருந்து வந்துள்ளது.பால் என்பது மற்ற கூறுகளுடன் கொழுப்பு மற்றும் தண்ணீர் சேர்ந்த பால்மமே ஆகும்.

இரண்டு நீர்மங்கள் இணைந்து வெவ்வேறு வகையான பால்மங்களை உருவாக்குகின்றன. உதாரணமாக, எண்ணெய் மற்றும் நீர். இவை இரண்டும் இணைந்து முதலில் ,

 1. "எண்ணெய் பிரிகையைடந்துள்ள நீர்- பால்மம்" உருவாகிறது. இதில் எண்ணெய் பிரிநிலையாகவும், நீர் பிரிகை ஊடகமாகவும் உள்ளது. எடுத்துக்காட்டு: லிபோபுரோட்டீன். இரண்டாவதாக,
 2. "நீர் பிரிகையடைந்துள்ள எண்ணெய் - பால்மம்" உருவாகிறது. இதில், நீர் பிரிநிலையாகவும், எண்ணெய் பிரிகை ஊடகமாகவும் உள்ளது.

மேலும், பல்வகையான பால்மங்களும் உருவாகின்றன. அவை, "நீர்-எண்ணெய்-நீர்" பால்மம் மற்றும் "எண்ணெய்-நீர்-எண்ணெய்" பால்மம் என இரண்டு வகையும் காணப்படுகின்றன.[1][2]

பால்மங்கள் நிலையற்ற உள்ளமைப்பைக் கொண்ட நீர்மங்கள் ஆகும். அதாவது, மிகச் சிறிய துளிகள் மற்றொரு நீர்மத்தில் பரவியுள்ள அமைப்பாகும். இது பிரிகை ஊடகம் என்று அழைக்கப்படுகிறது.

ஒளிப்படத்தாளின் ஒளிப்புலன் பகுதிகளுக்கு ஆதாரமாக "பால்மம்" பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறன ஒளிப்படப் பால்மங்களில் வெள்ளி ஆலைடு கூழ்மத்துகள்கள்  செலாட்டின் தளங்களில் விரவியுள்ளது. துகள் இயற்பியலில் உயர் ஆற்றல் உடைய  அடிப்படைத் துகள்களைக் கண்டறிவதைத் தவிர ஒளிப்படப்பால்மம், அணுக்கரு பால்மத்தை ஒத்துள்ளது.

பால்மமாக்கிகள்[தொகு]

பால்மத்தின் இயக்க நிலைத்தன்மையை அதிகரிக்கச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருளே "பால்மமாக்கிகள்" என்று அழைக்கப்படுகிறது.நீரில் அதிகளவில் கரைந்து எண்ணெயில் குறைந்த அளவே கரைகின்ற பால்மமாக்கிகள் எண்ணெய் பிரிகையடைந்துள்ள நீர் பால்மத்தை தருகின்றன. அதேபோன்று, எண்ணெயில் அதிகளவு கரைகின்ற பால்மமாக்கிகள் நீர் பிரிகையடைந்துள்ள எண்ணெய் பால்மத்தைத் தருகின்றன.

உணவுத் துறையில் பயன்படும் பால்மமாக்கிகள்[தொகு]

 • முட்டை மஞ்சள் கரு – இதில் முக்கியமான பால்மக் காரணி லெசித்தின். உண்மையில், lecithos என்ற கிரேக்கம் வார்த்தை முட்டை மஞ்சள் கருவைக் குறிக்கிறது
 • கடுகு – இதன் விதையைச் சுற்றி காணப்படும் பசையில்  உள்ள பல்வேறு இரசாயணப் பொருட்கள் பால்மமாக செயல்படுகின்றன.
 • சோயா லெசித்தின் என்பது மற்றொரு பால்மமாக்கி மற்றும் தடிமனாக்கி.
 • சோடியம் பாசுபேட்
 • சோடியம் சிடிராயல் லாக்டிலேட்
 • ஈரிணையஅசிட்டைல் டார்டாரிக் (அமிலம்) எசுத்தர் ஒரிணையகிளிசிரைடு– ரொட்டி சோடா தயாரிப்பில் பால்மமாக்கியாகப் பயன்படுகிறது.

சவர்க்காரம் மற்றொரு புறபரப்பு கவர்ச்சிப் பொருளாகும். இது எண்ணெய் மற்றும் தண்ணீர் இரண்டிலுமே இடைவினை புரிகிறது. எண்ணெய் மற்றும் நீர் துளிகளுக்கிடையே  தொங்கல்  நிலையை உருவாக்கி நிலைத்தன்மை பெறுகிறது. இதனைப் போன்றே  கிரீஸ், சுத்தம் செய்வதற்கு பயன்படும் சோப்பு பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு விதமான பால்மமாக்கிகளைப் பயன்படுத்தி மருந்துகளை தயார் செய்யவதற்கு களிம்பு, தொய்வு நீர்மம் போன்ற பால்மங்கள் பயன்படுகின்றன.  பொதுவான உதாரணங்கள் பால்மமாக்கியாகப் பயன்படும் மெழுகு, பாலிசார்பேட் 20 ஆகியவை ஆகும்.[3]

இரசாயணத் தொகுப்பு[தொகு]

பலபடிகளை பிரிகையடையச் செய்வதற்குப் பால்மங்கள் பயன்படுகின்றன.   பால்மங்கள் பொருட்கள் திரிதல் அடைவதை தடுக்கிறது. பலபடியாக்கல் மூலம் தயாரிக்கப்படும்  பால்மங்கள் பசை, வண்ணப்பூச்சுகள் தயாரிப்பில்  முதன்மைப் பொருட்களாகப்   பயன்படுத்தப்படுகின்றன. இதே செயல்முறையைப் போன்றே செயற்கை இரப்பரும் உற்பத்தி செய்யப்படுகிறது.

பால்மமாக்கல் வழிமுறைகள்[தொகு]

வெவ்வேறான வேதியியல் மற்றும் இயற்பியல் செயல்முறைகள் பால்மமாக்கல் வழிமுறைகளில் ஈடுபடுகின்றன.[சான்று தேவை]

 • பரப்பு இழுவிசைக் கோட்பாடு – இக்கோட்பாட்டின் படி, இரண்டு நிலைகளுக்கு இடையே முகப்பிடை இழுவிசையில் ஒடுக்கம் ஏற்படும் போது பால்மமாக்கல் நடைபெறுகிறது.
 • விலக்கக் கோட்பாடு – பால்மமாக்க காரணி பிரிநிலையின் மேற்பரப்பில் படலத்தை ஏற்படுத்துகிறது. இது திவலை அல்லது குமிழிகளை உருவாக்கி ஒன்றுக்கொன்று விலக்கமடையச் செய்கிறது. இந்த விலக்கு விசை பிரிகை ஊடகத்தை தொங்கல் நிலையில் வைக்கிறது.
 • பாகு மாற்றம் – கருவேலம் மற்றும் பிசின் போன்ற நீர்நீக்கும் கூழ்மங்கள், அதே போன்று PEG (அல்லது பாலிஎத்திலீன் கிளைக்கால்), கிளிசரின், மற்றும் CMC (கார்பாக்சிமெத்தில் செல்லுலோசு) போன்ற பிற பாலிமர்கள், அனைத்து பாகு அத்தன்மையைத ிகரிக்க்கச் செய்கின்றன.டஇது பிரிகை நிலையில் திவலை அல்லது தொங்கல்களை உருவாக்குகிறது.

பயன்கள்[தொகு]

உணவுத்துறையில்[தொகு]

உணவுப்பொருட்கள் தயாரிப்பில் பொதுவாக "எண்ணெய் பிரிகையடைந்துள்ள நீர் பால்மம்" பயன்படுத்தப்படுகிறது.

 • பால்கொழுப்புத் துகள்களை சீரளவாக்குதல் – நீரில் பால் கொழுப்பு பால்மங்கல். இதில் பால் புரதங்கள் பால்மமாக்கியாக உள்ளன.

சுகாதாரம்[தொகு]

மருந்தாக்கவியல், சிகை அலங்காரம், தன் சுத்தம், மற்றும் ஒப்பனை, இவைகளில் பால்மங்கல் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் எண்ணெய் மற்றும் நீர்மங்களாக பிரிகையைடந்துள்ள பால்மமாக உள்ளன. இவை மருந்தாக்கவியல் துறையில் பல செயல்களைப் பொறுத்தே உள்ளது. குழைவு, களிம்புகள், தேய்ப்பு தைலம் (ஆற்றுமருந்து), பசைகள், படங்கள், அல்லது திரவங்கள், பால்மங்கள் என அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் எண்ணெய்-நீர் விகிதங்கள், பிற சேர்க்கை பொருட்கள் இவற்றைப் பொறுத்தே இப்பால்மங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் முதல் ஐந்தும் புறமருந்து பூச்சுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. தோலின் மேற்பகுதிகளில், விழித்திறப்பு சிகிச்சைகளில், மலக்குடல் நரம்பு மண்டல சிகிச்சைகள் மற்றும் புணர்புலை சிகிச்சைகளில் இப்பால்மங்கல் பயன்படுத்தப்படுகின்றன. அதிகளவு நீர்மமாக உள்ள பால்மங்கல் வாய்வழியாகவும்,  சில சந்தர்பங்களில் உட்செலுத்தப்படுகிறது. மீன் எண்ணெய் , கார்டிசால் பரவலாகப் பயன்படுத்தப்படும் பாால்மமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Khan, A. Y.; Talegaonkar, S; Iqbal, Z; Ahmed, F. J.; Khar, R. K. (2006). "Multiple emulsions: An overview". Current drug delivery 3 (4): 429–43. doi:10.2174/156720106778559056. பப்மெட்:17076645. 
 2. Kumar, Harish V.; Woltornist, Steven J.; Adamson, Douglas H. (2016-03-01). "Fractionation and characterization of graphene oxide by oxidation extent through emulsion stabilization". Carbon 98: 491–495. doi:10.1016/j.carbon.2015.10.083. http://www.sciencedirect.com/science/article/pii/S0008622315303936. 
 3. Anne-Marie Faiola (2008-05-21). "Using Emulsifying Wax". TeachSoap.com. TeachSoap.com. பார்க்கப்பட்ட நாள் 2008-07-22.

பிற ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்மம்&oldid=3777600" இலிருந்து மீள்விக்கப்பட்டது